பதிவு செய்த நாள் :
'சுதந்திரம் பெற்ற பின்
நிகழ்ந்த பெரிய ஊழல்' : ராகுல்

சாகர், ''நாடு சுதந்திரம் பெற்ற பின், நிகழ்ந்த மிகப்பெரும் ஊழலாக, செல்லாத ரூபாய் நோட்டு திட்டம் உள்ளது,'' என, காங்., தலைவர் ராகுல் கூறியுள்ளார்.

சுதந்திரம், பெற்ற பின் , நிகழ்ந்த, பெரிய ஊழல்,ராகுல்


மத்திய பிரதேசத்தில், வரும், 28ல், சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இத்தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள, காங்., தலைவர் ராகுல், சாகர் மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில்

பேசியதாவது:சுதந்திரம் பெற்ற பின், இந்திய வரலாற்றில் இல்லாத வகையில், மிகப் பெரும் ஊழலாக, செல்லாத ரூபாய் நோட்டு திட்டம் அரங்கேறியுள்ளது.

இந்த திட்டம் மூலம், ஏழைகளை கொள்ளையடித்து உள்ள, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, அவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை பறித்து, பணக்காரர்களுக்கு கொடுத்துள்ளது.'ரபேல் போர் விமானம் வாங்குவதற்கான புதிய ஒப்பந்தத் தில், அனில் அம்பானியை சேர்க்க வேண்டும்' என, இந்திய அரசு நிர்ப்பந்தம்செய்ததாக, பிரான்ஸ் அதிபர் ஹாலண்டே தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தம் மூலம், அனில் அம்பானிக்கு, 30 ஆயிரம் கோடி ரூபாயை, பிரதமர் மோடி தந்து உள்ளார். குடிமக்களை, செல்லாத ரூபாய் நோட்டு திட்டம் மூலம், பிரதமர் மோடி, வங்கிகளின்

Advertisement

வெளியே வரிசையில் நிற்க வைத்தார்.நிரவ் மோடி, மெஹுல் சோக்சி, விஜய் மல்லையா உள்ளிட்ட, மோசடி செய்த பணக்காரர்களை, நாட்டை விட்டு தப்பச் செய்தவர், மோடி; தங்கள் பணத்தை எடுக்க, பொதுமக்களை வங்கிகளில் நிற்க வைத்தார்.இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
17-நவ-201819:55:45 IST Report Abuse

J.Isaacதினமும் இரவு பகலா மழையிலும் வெயிலிலும் புயலிலும் உழைக்கிற மக்களுக்கு இந்த கருத்துக்கள் எல்லாம் புரியுமா ?

Rate this:
Parthasarathy Ravindran - Chennai,இந்தியா
17-நவ-201819:44:11 IST Report Abuse

Parthasarathy Ravindranசெல்லாதவரின் கருத்து பெரிதாக எடுத்துக்கொள்ள கூடாது. செல்பவருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டிருக்கும்.

Rate this:
Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா
17-நவ-201818:13:27 IST Report Abuse

Subramanian Arunachalamபணமதிப்பு இழப்பு நடவடிக்கை நடந்து இரண்டு வருடம் சென்று விட்டது . அப்போது பல சங்கடங்களை சாதாரண மக்கள் எதிர் கொண்டார்கள் . இவர் ஏன் அதைப்பற்றி புலம்பி கொண்டே இருக்கிறார் . பல்லாயிரம் கோடி நஷ்டமா .

Rate this:
Ramesh - Bangalore,இந்தியா
17-நவ-201818:23:26 IST Report Abuse

RameshMany lakhs crores and not thousand's of crore...Some people in TN have lost few lakhs crore in Nov 8,2016......

Rate this:
மேலும் 52 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X