பொது செய்தி

இந்தியா

தாஜ் மஹாலில் பூஜை; ஹிந்து அமைப்பு அறிவிப்பு

Updated : நவ 17, 2018 | Added : நவ 16, 2018 | கருத்துகள் (52)
Advertisement
தாஜ் மஹால்,பூஜை,ஹிந்து அமைப்பு,அறிவிப்பு

ஆக்ரா, :'உத்தர பிரதேச மாநிலம், ஆக்ராவில் உள்ள தாஜ் மஹாலில், முஸ்லிம்கள் தொழுகை நடத்தினால், நாங்களும் பூஜை நடத்துவோம்' என, ஹிந்து அமைப்பு அறிவித்துள்ளது.

உ.பி., மாநிலம் ஆக்ராவில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹால் வளாகத்தில் உள்ள மசூதியில், வெள்ளிக் கிழமையை தவிர மற்ற நாட்களில் தொழுகை நடத்த, இந்திய தொல்லியல் துறை தடை விதித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முஸ்லிம் இளைஞர்கள் சிலர், சமீபத்தில், தாஜ் மஹால் வளாகத்தில் உள்ள மசூதியில் தொழுகை நடத்தினர்.

நேற்று முன் தினம், தாஜ் மஹாலின் கிழக்கு மற்றும் மேற்கு நுழைவாயிலில், தொல்லியல் துறை ஒட்டிய அரசு அறிவிப்பில், 'வெள்ளிக் கிழமை பிற்பகலில் மட்டும் முஸ்லிம்கள் தொழுகை நடத்த அனுமதிக்கப்படுவர்' என, கூறப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, 'தாஜ் மஹால் வளாகத்தில், பூஜை, அபிஷேகம் செய்வதற்கு எங்களுக்கு அனுமதிக்க வேண்டும்' என, பஜ்ரங் தள் அமைப்பு அறிவித்துள்ளது.

இது குறித்து, அந்த அமைப்பின் தலைவர் கோவிந்த் பராசர் கூறியதாவது: தாஜ் மஹால் அமைந்துள்ள இடம், பழமையான சிவன் கோவிலுக்கு சொந்தமானது. எனவே, முஸ்லிம்கள் தொழுகை நடத்த அனுமதி தந்தால், சிவனுக்கு பூஜை, அபிஷேகம் செய்ய, எங்களுக்கும் அனுமதி தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Change is inevi. - Perth,ஆஸ்திரேலியா
17-நவ-201814:21:13 IST Report Abuse
Change is inevi. The point is mosque in the same block of Taj Mahal and they don't pray IN Taj Mahal.
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
17-நவ-201813:08:20 IST Report Abuse
A.George Alphonse "Summa Kidandha Sangai Oodhi Keduthanam Aandi" pole now the Kerala state is totally suffering and now the Hindu Organization want the same effect in Agra also by celebrating Poojai in Taj Mahal.
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
17-நவ-201811:59:26 IST Report Abuse
Pugazh V பீஜேபீ/ இந்து அமைப்புகளுக்கு என்ன வேண்டும்? தாஜ்மஹாலில் ஆரம்பித்து சார்மினார் வரை, எல்லா வரலாற்று சின்னங்களையும் இடித்து தள்ளி விடணுமா? ஆரம்பியுங்கள். யார் கேட்க முடியும்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X