பொது செய்தி

இந்தியா

அடுத்த முறை சொல்லாமல் வருவேன் : திருப்தி தேசாய்

Added : நவ 17, 2018 | கருத்துகள் (93)
Advertisement
Trupti desai, Sabarimala Ayyappan, Sabarimala Protest, திருப்தி தேசாய், சபரிமலை அய்யப்பன் கோயில், சபரிமலை போராட்டம், கொரில்லா தந்திரங்கள், கொச்சி விமான நிலையம், சபரிமலை பக்தர்கள் , அய்யப்ப பக்தர்கள், 
Sabarimala Ayyappan Temple, 
 Kochi Airport, Sabarimala devotees, Ayyappa devotees, Gorilla Tricks,

மும்பை : சபரிமலை அய்யப்பனை தரிசனம் செய்வதற்காக தான் மீண்டும் வர உள்ளதாகவும், அடுத்த முறை முன்அறிவிப்பின்றி வர உள்ளதாகவும், கொரில்லா தந்திரங்களை பயன்படுத்த உள்ளதாகவும் திருப்தி தேசாய் தெரிவித்துள்ளார்.
சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு செல்வதற்காக வந்த சமூக ஆர்வலர் திருப்தி தேசாய், போராட்டக்காரர்களின் எதிர்ப்பால் கொச்சி விமான நிலையத்திலேயே தங்க வைக்கப்பட்டு, பின் மும்பைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் மும்பை விமான நிலையத்தில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த திருப்தி தேசாய் கூறுகையில், எங்களை விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தி விட்டனர். அவர்களை எங்களை எதிர்க்க நினைத்தால் நிலக்கல்லில் தான் போராட்டம் நடத்தி இருக்க வேண்டும்.
ஆனால் அவர்களுக்கு தெரியும், நாங்கள் நிலக்கல்லுக்கு சென்றால், பம்பைக்கு முன்னேறி செல்வோம், சுவாமி தரிசனமும் செய்து விட்டு திரும்புவோம் என்று. அதனால் தான் அவர்கள் பயந்து எங்களை விமான நிலையத்திலேயே நிறுத்தினர். போராட்டக்காரர்கள் என்றால் வன்முறை, முரட்டுதனமாக நடந்து கொள்வார்கள். அவர்கள் அப்படி நடந்து கொள்ளவில்லை. அவர்கள் தங்களை அய்யப்ப பக்தர்கள் என கூறிக் கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் பக்தர்கள் என நான் நினைக்கவில்லை. அவர்கள் எங்களை அவதூறாக பேசினார்கள்; மிரட்டினார்கள்.
அடுத்த முறை வரும் போது எங்களுக்கு பாதுகாப்பு தருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். எங்களால் வன்முறை வெடிப்பதை நாங்கள் விரும்பவில்லை. அதனால் திரும்பி வந்து விட்டோம். இந்த முறை முன்கூட்டியே அறிவித்த விட்டு சென்றோம். ஆனால் அடுத்த முறை சொல்லாமல் வருவோம். அதே சமயம் கொரில்லா தந்திரங்களை பயன்படுத்துவோம் என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (93)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
20-நவ-201811:18:37 IST Report Abuse
Ramalingam Shanmugam பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபடக்கூடாது எவ்வளவு பண விரயம்
Rate this:
Share this comment
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
17-நவ-201819:26:35 IST Report Abuse
Loganathan Kuttuva குருவாயூர் கோயிலுக்கு சென்று கடவுளை வணங்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
sumutha - chennai - Chennai,இந்தியா
17-நவ-201817:26:54 IST Report Abuse
sumutha - chennai //போராட்டக்காரர்கள் என்றால் வன்முறை, முரட்டுதனமாக நடந்து கொள்வார்கள். அவர்கள் அப்படி நடந்து கொள்ளவில்லை. // அதனால்தான் கொரில்லா போல வருவதாக சொல்லி உள்ளாள். இவளை மிக கவனமாக கையாள வேண்டும். எம்மா சபரிமலை காட்டில் மரத்துக்கு மரம் தாவப்போரியோ? அண்ணே மயில்சாமி அந்த சென்ட் பாட்டில எடுத்து மறைச்சு வையுங்கள். வடிவேலுக்கு ஆனமாதிரி எல்லாருக்கும் ஆயிட போவுது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X