பொது செய்தி

இந்தியா

சபரிமலைக்கு வர துடிக்கும் திருப்தி தேசாய்- பொதுநல விரும்பியா ? 'திடுக்' தகவல்

Added : நவ 17, 2018 | கருத்துகள் (74)
Advertisement
சபரிமலை, பெண், சமூக ஆர்வலர், திருப்தி தேசாய், போராட்டம், பணம், சர்வாதிகாரி

மும்பை: சபரிமலைக்கு வந்தே தீருவேன் என்று அடம் பிடிக்கும் 33 வயதான பெண் சமூக ஆர்வலர் திருப்தி தேசாய் ஒரு சர்வாதிகாரி; போராட்டம் நடத்த பணம் வாங்குபவர்; தன்னுடன் இருக்கும் பெண் ஆர்வலர்கள் பிரபலமடைவதை விரும்பாதவர் என அவருடன் கடந்த காலங்களில் சேர்ந்து பணி புரிந்த பெண்கள் கூறியுள்ளனர்.வறுமையில் வாடிய குடும்பம்

மகாராஷ்டிர மாநிலம், கோலாபூர் மாவட்டம், நிபானி என்ற பகுதியில் பிறந்தவர் திருப்தி தேசாய். இவரது குடும்பம் வறுமையில் வாடியதால், 20 ஆண்டுகளுக்கு முன் புனே நகருக்கு இடம் பெயர்ந்தனர். போதிய பண வசதி இல்லாத காரணத்தால் எஸ்.என்.டி.டி., கல்லூரியில் பட்டப்படிப்பை பாதியில் நிறுத்தியவர். எனினும், புனே பல்கலையில் தொலைதூர கல்வி மூலம் பி.ஏ., பட்டம் பெற்றவர். அவரது தந்தை ஆன்மிக தலைவராக இருந்து வருகிறார். ஒரு மடத்தையும் நடத்தி வருகிறார்.
அஜித் பவாரை எதிர்த்தவர்


2008 ம் ஆண்டு தேசியவாத காங்கிரசில் செல்வாக்கு மிக்க தலைவராக விளங்கிய அஜித் பவாருக்கு எதிராக போரட்டம் நடத்தி பிரபலமானவர் திருப்தி தேசாய். இதனால் கவரப்பட்ட காங்., மூத்த தலைவர் பதன்கரோ கதம் என்பவர், 2012ல் புனே மாநகராட்சி தேர்தலில் போட்டியிட திருப்தி தேசாய்க்கு சீட் கொடுத்தார். ஆனால், அந்த தேர்தலில் திருப்தி தேசாய் டிபாசிட் தொகையை இழந்து படுதோல்வி அடைந்தார். அதன் பிறகு அவரது அரசியல் வாழ்க்கை இதுநாள் வரை எடுபடவேயில்லை.

திருப்தி தேசாய் 10 ஆண்டுகளுக்கு முன், பூமாதா ரங்கராகினி படை என்ற அமைப்பை நடத்தி வந்தார். அப்போது அவருடன் இணைந்து பணியாற்றியவர் பிரியங்கா ஜக்தாப், ஒரு கட்டத்தில் அதில் இருந்து பிரிந்து சென்றார். அதன்பிறகு பூமாதா படை என்ற பெயரில் புதிய அமைப்பை திருப்தி தேசாய் நடத்தி வருகிறார். அவரது செயல்பாடுகள் குறித்து பிரியங்கா கூறியதாவது:
சாதாரண பெண் அல்ல

சபரிமலை விவகாரத்தில் போராட்டம் நடத்தி வரும் திருப்தி தேசாய் சாதாரண பெண் அல்ல. இதில் அவர் தோல்வி அடையவில்லை. அனைவர் கவனமும் தன் பக்கம் திரும்ப வேண்டும். அதன் மூலம் பிரபலம் அடைய வேண்டும் என்பதே அவரது நோக்கம், ஸ்டைல். அதில் அவர் தான் நினைத்ததை சாதித்து விட்டார் என்றே கூற வேண்டும். அவர் உண்மையான அய்யப்ப பக்தர் அல்ல. அய்யப்ப பக்தர் போல் வேஷமிட்டுள்ளார்.
போராட்டம் நடத்த பணம் தரணும்

புனே மாநகராட்சி தேர்தலில் தோல்வி அடைந்த பின் சமூக விஷயங்களில் அக்கறை காட்ட துவங்கினார். புனே மக்களும் அவரிடம் தங்கள் குறைகளை கூற துவங்கினர். எல்லா பிரச்னைகளுக்கும் அவர் போராட்டம் நடத்த மாட்டார். தான் கேட்கும் அளவுக்கு கமிஷனாக பணம் கிடைத்த பிறகே போராட்ட களத்தில் இறங்குவார். எனினும், அவர் தைரியமான பெண். துணிந்து போராடுவதால் அவர் மீது பல போலீஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அகமது நகர் மாவட்டம் ஷின்கநாபூர் பகுதியில் சனி கோவில் கர்பகிரகம் உள்ளே, 400 ஆண்டுகளாக பெண்களை அனுமதிப்பது இல்லை. 2016ம் ஆண்டு போராட்டம் நடத்தி அந்த கோவில் கர்பகிரகம் உள்ளே நுழைந்ததன் மூலமே திருப்தி தேசாய் தேசிய அளவில் பிரபலமடைந்தார். இதன் பிறகு கோலாபூர், நாசிக் பகுதிகளில் உள்ள கோவில்களில் நுழைந்தும், மும்பையில் உள்ள ஹாஜி அலி தர்காவின் உள்ளே நுழைந்தும் அவர் தன் போராட்ட களத்தை விரிவுப்படுத்தினார். ஆனால், அந்த செயல்கள் மூலம் அவருக்கு குறைந்த அளவு புகழே கிடைத்தது.

இவ்வாறு பிரியங்கா கூறினார்.
சர்வாதிகாரி


திருப்தி தேசாய் உடன் கடந்த காலங்களில் இணைந்து பணியாற்றிய புஸ்பக் கிவாத்கர் என்ற பெண் கூறியதாவது:

கை இல்லாத கோட் அணிவது தான் திருப்தி தேசாயின் வாடிக்கை. அவர் எப்போது போராட்டம் நடத்தினாலும் தன்னுடன் குறைந்த எண்ணிக்கையிலான பெண்கள் மட்டுமே இருக்கும்படி பார்த்து கொள்வார். எட்டு அல்லது பத்து பேருக்கு மேல் அவருடன் இருக்க மாட்டார்கள். எனினும், அவரது போராட்டம் மிகவும் வீரியமாகவே இருக்கும். சர்வாதிகாரி போலவே செயல்படுவார். தன்னுடன் இணைந்து போராட்டம் நடத்தும் பெண்கள் பிரபலமடைவதை ஒரு போதும் அவர் விரும்ப மாட்டார். அவர் எதை செய்தாலும், பணத்திற்காகவும், பிரபலமடைவதற்காகவும் தான் செய்வார். ஒரு வியாபாரிக்கு பணம் தான் முக்கியம். அதுபோன்ற வியாபார நோக்கம் கொண்டவர் தான் அவர்.

திருப்தி தேசாய் தான் ஒரு தீவிர இந்து பக்தை என்றே கூறி வருவார். ஆனால் உண்மையில் அப்படி இல்லை. பல பிரச்னைகளின் உண்மை நிலவரம் கூட அவருக்கு தெரியாது. எனினும், மிக தீவிரமாக இருக்கும் ஒரு பிரச்னையில் தன்னை இணைத்து கொண்டு தன்னை முன்னிலைப்படுத்தி கொள்வதில் வல்லவர். 'டிவி' சேனல்களில் தன்னை பற்றிய செய்திகள் வர அவர் என்ன வேண்டும் என்றாலும் செய்வார்.

இவ்வாறு புஸ்பக் கூறினார்.
பணம் வாங்குவது தவறு

யோக் மகிளா அறக்கட்டளை என்ற அமைப்பை 16 ஆண்டுகளாக நடத்தி வரும் துர்கா ஷிர்கி என்ற பெண் கூறியதாவது:

யாருடனும் இணைந்து செயல்பட திருப்தி தேசாய் விரும்ப மாட்டார். அவரது பல நடவடிக்கைகள் பிடிக்காமல் போனதால் தான் நான் தனியாக பிரிந்து வந்து விட்டேன். கஷ்டப்படும் மக்களிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவதை நான் விரும்பவில்லை. இவ்வாறு துர்கா ஷிர்கி கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (74)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramamoorthy P - Chennai,இந்தியா
21-நவ-201817:07:10 IST Report Abuse
Ramamoorthy P போராட்டம் நடத்தி காசு பெறும் போராளிகளுக்கு போட்டியாக காசு பெற்றுக்கொண்டு போராடும் போராளி. பலே மொத்தத்தில் இவர் கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கவேண்டியவர்.
Rate this:
Share this comment
Cancel
Vrc Mohan - Mayiladuthurai,இந்தியா
20-நவ-201806:10:34 IST Report Abuse
Vrc Mohan நாட்ல நெறய பிரச்சனை இருக்கு
Rate this:
Share this comment
Cancel
Vrc Mohan - Mayiladuthurai,இந்தியா
20-நவ-201806:09:17 IST Report Abuse
Vrc Mohan நாட்ல நெறய பிரச்சனை erukku
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X