மாலே:மாலத்தீவின் புதிய அதிபராக பொறுப் பேற்றுள்ள, இப்ராஹிம் முகமது சாலி பதவியேற்பு விழாவில், கலந்து கொள்ள சென்ற, பிரதமர் நரேந்திர மோடிக்கு, அங்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தெற்காசிய நாடான மாலத்தீவில், சமீபத்தில், அதிபர் தேர்தல் நடந்தது. இதில், எதிர்க்கட்சி தலைவரான, இப்ராஹிம் முகமது சாலி, 54, வெற்றி பெற்றார்.இவரது பதவியேற்பு விழா, நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள, பிரதமர் நரேந்திர மோடிக்கு, அழைப்பு விடுக்கப்பட்டது.
மத்தியில், தே.ஜ., கூட்டணி ஆட்சி அமைத்த
நான்கரை ஆண்டுகளில், பிரதமர் மோடி, பல நாடு களுக்கு பயணம் செய்துள்ளார். ஆனால், இதுவரை, மாலத்தீவுகளுக்கு
செல்லவில்லை. புதிய அதிபரின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக,
முதல் முறையாக, அவர் நேற்றுமாலத்தீவு புறப் பட்டு சென்றார்.அங்கே, பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பளவரவேற்பு அளிக்கப் பட்டது.
மாலத்தீவு பார்லி.,யின் புதிய சபாநாயகர், குவாசிம் இப்ராஹிம், விமான நிலையத்தில், மோடியை வரவேற்றார்.நிகழ்ச்சியில், மாலத்தீவு முன்னாள் அதிபர்கள் முகமது நஷீத், மவ்மூன் அப்துல் கயூம், இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா ஆகியோர் கலந்து கொண்டனர்.
உள்கட்டமைப்பு, சுகாதாரம் மற்றும் மனித வளம் ஆகிய துறைகளில், மாலத்தீவுடன் இணைந்து செயல்பட,இந்தியா விரும்புவதாக, புதிய அதிபரிடம் தெரிவிக்க இருப்பதாக, பிரதமர் மோடி, 'டுவிட்டர்' பக்கத்தில், குறிப்பிட்டுள்ளார்.
மாலத்தீவு அதிபராக பதவி வகித்து வந்த
இப்ராஹிம் யாமின், சீனாவுக்கு நெருக் கமாக செயல்பட்டு வந்தார். இதையடுத்து, அந் நாட்டுக்கு,சீனா பல கோடி ரூபாய் கடன் அளித்தது.
இந் நிலையில், அதிபர் தேர்தலில் யாமின் தோல்வி அடைந்தது, சீனாவுக்கு பெருத்த அடியாக பார்க்கப்படுகிறது. தன், மாலத்தீவு பயணத்துக்கு பிறகு, இரு நாடுகள் இடையே, புதிய உறவு மலரும் என, மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (13)
Reply
Reply
Reply