புதுடில்லி:ரஷ்யாவிடம் இருந்து, எஸ் - 400 ரக ஏவுகணைகளை, இந்தியா வாங்குவது தொடர்பாக, அமெரிக்காவின் நிலை தெளிவாகாத நிலையில், அதனிடம் இருந்து, 13 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் மதிப்பில், 24 ஹெலிகாப்டர்களை வாங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த ஹெலிகாப்டர்கள், இந்திய பெருங் கடலில், சீன நீர் மூழ்கிகப்பல்களை சமாளிக்க உதவும் என கூறப்படுகிறது. அமெரிக்காவில், 2016ல் நடந்த அதிபர் தேர்தலில், ரஷ்யா மறை முகமாக தலையிட்டதாக எழுந்த புகார்களை அடுத்து, அது தொடர்பாக, அமெரிக்காவில் காரசார விவாதங்கள் எழுந்தன.இதை தொடர்ந்து, ரஷ்யா மீது பல்வேறு தடைகளை, அமெரிக்கா விதித்தது.
ஒப்பந்தம்
அதன் தொடர்ச்சியாக, ரஷ்யாவை, பொருளா தார ரீதியில் வலுவிழக்கச் செய்யும் நோக்கில், அதனிடம் இருந்து ஆயுதங்கள் வாங்கும் நாடுகள் மீதும், பல்வேறு தடைகள் விதிக்கப் படும் என, அமெரிக்க அரசு எச்சரித்தது.
இந்த எச்சரிக்கையை மீறி, ரஷ்யாவிடம் இருந்து, அதிநவீன, எஸ் - 400 வகை ஏவுக ணைகள் மற்றும் அதை செலுத்த தேவையான தளவாடங்கள் மற்றும் கருவிகள்
தொகுப்பை,
பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் வாங்க, இந்தியா ஒப்பந்தம்
செய்தது.
அதேபோல், 'ஈரானிடம் இருந்து, எண்ணெய் வாங்கு வதை நிறுத்த வேண்டும்' என, அமெரிக்கா விதித்த நிபந்தனையை மீறி, ஈரானிடம் இருந்து, வழக்கம் போல்,
எண்ணெய் இறக்கு மதியை, இந்தியா செய்து வருகிறது.இதற்கிடையே, ரஷ்யாவிடம்
இருந்து ஆயுதங்கள் வாங்க, 'காட்ஸா' எனப்படும், அமெரிக்காவுக்கு எதிரான
நாடுகளை, தடைகள் மூலம் எதிர்கொள்ளும்சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கும்படி, இந்திய தரப்பில் வேண்டுகோள் விடுக்கப் பட்டது.
அமெரிக்க ராணுவ அமைச்சர் ஜிம் மாட்டிஸ், வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ ஆகி யோரிடம், இந்தியாவுக்கு விலக்கு அளிக்கும்படி வலியுறுத்தப்பட்டது. இந்த விஷயத்தில், அமெரிக்க அரசின் நிலை என்ன என்பது இதுவரை தெளிவாக வில்லை. இதில், இறுதி முடிவை, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எடுப்பார் என கூறப்படுகிறது.
'ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்குவதை படிப்படியாக இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும்' என, டிரம்ப் விரும்புவதாக தகவல்கள் கூறுகின்றன. இந்நிலையில், அமெரிக்காவிடம் இருந்து,ரூ. 13 ஆயிரத்து, 500 கோடி மதிப்பில், நவீன ஹெலிகாப் டர் கள் வாங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதிநவீன ஏவுகணைஅமெரிக்காவிடம் இருந்து, எம்எச் - 60 ரக ஹெலிகாப்டர்கள், 24, அவற்றுடன், நீர்மூழ்கிகப்பல்கள் மீது தாக்குதல் நடத்த வல்ல, அதிநவீன ஏவுகணைகளை வாங்குவதற்கான
விருப்ப கடிதத்தை,அமெரிக்க அரசிடம், மத்திய அரசு தந்துள்ளதாக தகவல்கள்
கூறுகின்றன.
இந்த ஹெலிகாப்டர்கள், 2020 - 2024ம் ஆண்டுக் குள், இந்திய கடற்படைக்கு, 'சப்ளை' செய்யப் படும் என
தெரிகிறது.இந்திய பெருங் கடலில்,சீனாவின் அணுசக்தி மற்றும் டீசல் - எலக்ட்ரிக் சக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பல்கள் இயங்கி வரும் நிலையில், அவற்றை எதிர் கொள்ள, அமெரிக் காவின் நவீன ஹெலிகாப் டர்கள் உதவும் என, ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன.
சிறப்பு திட்டம் மூலம் ஹெலிகாப்டர் விற்பனை
அமெரிக்காவிடம் இந்தியா வாங்க திட்டமிட்டு உள்ள, எம்எச் - 60 ரக ஹெலிகாப்டர்கள், ஸிகோர்ஸ்கி - லாக்ஹீட் மார்டின் நிறுவனத் தால் தயாரிக்கப்படுகின்றன. இந்த வகை ஹெலிகாப்டர்கள், எப்.எம்.எஸ்., எனப்படும், வெளிநாட்டு ராணுவங்களுக்கான சிறப்பு திட்டம் மூலம், பிற நாடுகளுக்கு விற்கப்பட்டு வருகின்றன.
கடந்த, 2007 முதல், 1.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில், இந்த வகை ஹெலிகாப்டர்களை அமெரிக்கா, பிற நாடுகளுக்கு விற்றுள்ளது. இதற்கு முன், சி - 130ஜே - சூப்பர் ஹெர்குலஸ் போர் விமானங்கள், எம் 777 அல்ட்ராலைட் போர் விமானங்கள் போன்றவற்றை, எப்.எம். எஸ்., முறையில், அமெரிக்காவிடம் இருந்து, இந்தியா வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (30)
Reply
Reply
Reply