சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புயல் நிவாரணம் கேட்டு மறியல் : 5 அரசு வாகனங்களுக்கு தீவைப்பு; பதட்டம்

Added : நவ 18, 2018 | கருத்துகள் (46)
Advertisement
ஆலங்குடி, டி.எஸ்.பி., Storm,Weather,புயல்,மழை,வானிலை

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்தில் புயல் நிவாரணம் முறையாக வழங்கப்படவில்லை என ஆவசேமுற்ற மக்கள் மறியல் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து போராட்டக்காரர்கள், போலீசார் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் அரசு வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 60 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் இந்த போராட்டம் நடந்து வருகிறது. தகவல்களை மீடியாக்களுக்கு பரவ விடாமல் இன்டர்நெட், தொலைதெடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.


ஆலங்குடி டி.எஸ்.பி., மண்டை உடைந்தது

ஆலங்குடி அருகே கொத்த மங்கலத்தில், புயல் பாதிப்புக்கு பின்னர், தங்களை சந்திக்க அதிகாரிகள் யாரும் வரவில்லை, நிவாரணம் கிடைக்கவில்லை எனக்கூறி பொது மக்கள் போராட்டம் நடத்தினர். இந்நேரத்தில் அதிகாரிகள் சிறைபிடிக்கப்பட்டனர். தொடர்ந்து போராட்டம் நடத்தியவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து கலவரம் மூண்டது. இதில் ஆலங்குடி டி.எஸ்.பி., அய்யனார் மண்டை உடைந்தது.
இந்நேரத்தில் ஆவேசமுற்ற போராட்டக்காரர்கள், சப் கலெக்டர், ஆர்.டி.ஓ., திருவரங்குளம் பி.டி.ஓ., ஆலங்குடி டி.எஸ்.பி, ஆலங்குடி தாசில்தார் ஆகியோரின் வாகனங்களுக்கு தீ வைத்தனர்.

இந்த வன்முறையை அடுத்து திருச்சி சரக டிஐஜி, புதுக்கோட்டை எஸ்பி தலைமையில், 1,000 போலீசார் கிராமத்திற்கு விரைந்துள்ளனர். தற்போது அந்த கிராமத்தில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.மேலும் அறந்தாங்கி அருகே மரமடக்கி என்ற கிராமத்திலும் நிவாரண பொருட்கள் வரவில்லை எனக்கூறி, மக்கள் போலீசாரை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். தஞ்சாவூரில் ஒரு சில இடங்களில் பொது மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராம.ராசு - கரூர்,இந்தியா
18-நவ-201821:32:57 IST Report Abuse
ராம.ராசு நமது நாடு மக்களாட்சி நாடு. அதாவது நமது தேவைகளை அரசுக்கு எடுத்துகொண்டு செல்ல, சட்ட மன்ற உறுப்பினர் என்றும், பாராளு மன்ற உறுப்பினர் என்றும் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அனுப்புகிறோம். மக்களின் பிரச்னையை தீர்பதாக அவர்களும் வாக்குறுதி அளிக்கிறார்கள். அந்தப் பகுதி மக்களுக்கு ஒரு பிரச்சினை என்கிறபோது ஏன் அவர்கள் அங்கு போவது இல்லை. அந்தப் பொறுப்பை அதிகாரிகளிடம் விட்டுவிடுகிறார்கள். வாக்கு சாவடிக்கு நூறு பேருக்கு ஒருவரைக் கூட நியமிக்க முடிந்த ஆளும் கட்சியால், வீடு இழந்து, பொருட்களை இழந்து தவிக்கும் மக்களை பார்பதற்கு அது போன்ற ஆட்களை நியமிப்பது இல்லை, அதன் உச்சம்தான் மக்களின் வன்முறை போராட்டம். ஆனால் ஒரு வகையில் மக்களும் அதற்க்கு மக்களும் காரனமாகிப்போகிறார்கள் என்பதை மறுக்க முடியாது. பணத்திற்காக தங்களது வாக்குகளை விற்கும் அதற்க்கான விளைவுதான்... தேர்ந்தெடுக்கப்படுகின்ற அரசின் கண்டுகொள்ளாமை.
Rate this:
Share this comment
Syed Shafi - Lankawi,மலேஷியா
19-நவ-201809:10:02 IST Report Abuse
Syed Shafiசபாஷ் சரியாக சொன்னிங்க,,...
Rate this:
Share this comment
Cancel
nabikal naayakam - கேவலமான தூத்துக்குடி,இந்தியா
18-நவ-201821:31:09 IST Report Abuse
nabikal naayakam கலவரம் எங்கு யார் செய்தாலும் தூத்துக்குடி TREATMENTதான் பயன் அளிக்கும்.
Rate this:
Share this comment
Cancel
spr - chennai,இந்தியா
18-நவ-201821:30:09 IST Report Abuse
spr ஏறக்குறைய 80 லட்சம் தென்னை மரங்கள் வீழ்ந்து விட்டதாகச் சொல்லப்படுகிறது சில இடங்களில் கட்டிட விரிவாக்கத்திற்காக, மரங்களை வேரோடு பெயர்த்து வேறோர் இடத்தில் நடப்பட்டு அவை வெட்டப்படாமல் காப்பாற்றப்பட்டதாகச் சொல்லப்படுகிறது இங்கேயும் அதே முறை முயற்சி செய்யப்படலாம் இதனை தனியொரு மனிதர் செய்ய இயலாது மத்திய மாநில அரசு வேளாண்மைத்துறை கார்ப்பொரேட் நிறுவனங்கள் முயற்சியால் செய்து பார்க்கலாம் 50 விழுக்காடு பிழைத்தாலும் அது சிறப்பே ஏன் அரசு போர்க்கால அடிப்படையில் இதனை செய்து அம்மக்களை காப்பாற்றக்கூடாது வெறும் இழப்பீடு கொடுப்பதால் நிரந்தர பயனில்லை இதனையும் படிக்க Coconut trees are pretty easy to relocate because they have a relatively small root ball. It's a good idea to cut off many of the outer fronds since they just get in the way and end up dying later. The palms can tolerate a fair amount of rough handling as long as they don't get too dried out. Dig them, move them and plant them the same day for best results. The really big ones are much trickier to move as you can imagine. That takes special equipment and a big budget. When a new resort goes in, they spare no expense and you will see rows of majestic, tall palms in the landscape. They can't afford to wait for them to grow, but they can afford to have it now. moving palm trees on MauiBefore setting the trees in place, be sure to have a well prepared hole, with some nutrients added. Once the trees are planted, water them thoroughly and soak the roots. A good watering every day or two for the first couple of weeks will really help them on their way. It won't be long before they take hold and start reaching for the sky. இந்த இணைப்பைச் சொடுக்க s://activerain.com/blogsview/1280599/relocating-coconut-palm-trees-before-and-after
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X