நேரு குடும்ப நிறுவனமாகிவிட்டது காங்.,: அமித் ஷா

Added : நவ 19, 2018 | கருத்துகள் (81)
Advertisement
நேரு குடும்பம் , காங்கிரஸ், அமித் ஷா, பாரதிய ஜனதா ,பிரதமர் மோடி சவால், பிரதமர் மோடி, நரசிம்மராவ், சீதாராம் கேசரி, தேபர், பாபு ஜகஜீவன் ராம், நிஜலிங்கப்பா, காமராஜர் , நேரு குடும்ப நிறுவனம், Congress,காங்.,  பா.ஜ., 
Nehru family, Congress, Amit Shah, Bharatiya Janata, Prime Minister Modi Challenge, Prime Minister Modi, Narasimha Rao, Sitaram Kesari, Daber, Babu Jagjivan Ram, 
Nijalinkappa, Kamarajar, Nehru Family Institute,

புதுடில்லி : காங்கிரஸ் ஒரு அரசியல் கட்சி என்பதைவிட நேரு குடும்ப நிறுவனமாகிவிட்டது என பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் அவர் பதிவிட்டதாவது: பிரதமர் மோடியின் சவாலால் காங்., தலைவர்கள் தர்ம சங்கடத்திற்கு உள்ளாகியுள்ளனர். கடந்த 1978ம் ஆண்டிலிருந்து காங்., தலைவர்களாக ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தான் இருந்துள்ளனர். இதன்மூலம் ஒரு குடும்ப நிறுவனமாக காங்., மாறியுள்ளது. பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் மாறி, ஒரு பரம்பரைக்கு சேவையாற்ற வேண்டும் என்ற நோக்கமே அக்கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.

நேரு குடும்பத்தை சேராத காங்., தலைவர்களுக்கு அவமரியாதையே உண்டாகியுள்ளது. நரசிம்மராவ், சீதாராம் கேசரி, தேபர், பாபு ஜகஜீவன் ராம், நிஜலிங்கப்பா, காமராஜர் போன்ற அக்கட்சியின் தலைவர்களுக்கு ஒரு குடும்பத்தினரால் அவமதிப்புக்கு ஆளாகினர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (81)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sumutha - chennai - Chennai,இந்தியா
20-நவ-201805:01:31 IST Report Abuse
sumutha - chennai // காங்கிரஸ் ஒரு அரசியல் கட்சி என்பதைவிட நேரு குடும்ப நிறுவனமாகிவிட்டது // இதை நாலரை வருஷம் கழிச்சி இப்பதான் கண்டு பிடுசீங்களான்னு கேக ஆரம்பிக்க போறாங்க. வேற நல்ல வேலைய மட்டும் பாருங்க தலைவரே
Rate this:
Share this comment
Cancel
kamal -  ( Posted via: Dinamalar Android App )
19-நவ-201821:46:42 IST Report Abuse
kamal பாஜகவின் தேசிய தலைவராக ஏன் தமிழகத்தில் இருந்து ஒருவரை தேர்வு செய்ய கூடாது ?
Rate this:
Share this comment
Cancel
Snake Babu - Salem,இந்தியா
19-நவ-201816:28:24 IST Report Abuse
Snake Babu இது உனக்கு 60 ,வருஷமாத் தெரியலியா... பிஜேபி நண்பர்களே காங் சரி இல்லை என்று சொல்லித்தான் பிஜேபி வந்தது வந்ததும் ஒன்னும் வேலைக்காகவில்லை என்று சொன்னால் அவனை கேட்டியா என்று கேட்கிறீர்கள். ஒரு தவறுக்கு அடுத்த தவறை எதிர் கருத்தாக போடக்கூடாது. முதலில் சக வாசகர் நண்பர்பகளுக்கு மரியாதை கொடுத்து கருத்து எழுதி பழகுங்கள். (எப்படியும் ஒருமையில் பேசி திட்டப்போகிறீர்கள் நடத்துங்கள். நன்றி ) சரி ............. நீங்கள் இப்படி கொடுப்பதற்கு பதில் பிஜேபி செய்த நல்லகாரியத்தை பட்டியலிட்டு சொல்லுங்களேன். யார் உங்களை கேட்கப்போகிறது. எப்படி கூறுவதால் நாங்கள் காங் ஆட்கள் என்றோ அரபி, திராவிடர், பாவாடை என்றோ கூறி திசை திருப்பி பார்க்கமுடியுமே தவிர வேறு எதுவும் உங்களால் பிஜேபி யை முன்னிலை படுத்தமுடியாது. பொருளாதாரம் பின்னுக்கு சென்று இருக்கிறது வேலை இல்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து சென்று இருக்கிறது. குறைந்த பட்சம் போன தேர்தலுக்கு வாக்குறுதியாக கொடுத்ததையாவது நிறைவேற்றுனீர்களா .......... உலகம் சுற்றும் வாலிபர், விளம்பர பிரியர், செல்பி புள்ள ய வச்சிக்கிட்டு நிர்வாக திறமையும் இல்லாம எடுத்தோம் தவித்தோம் என திட்டங்கள் போட்டு வெளிநாடு ஓடிவிடவேண்டியது ஏதாவது விவாதிக்கலாம் என்றால் அதுக்கு வாரத்தில் கேள்விக்கு பதில் சொல்லும் திறமையும் இல்ல. உடனே ஊமை துரையை செய்தாரா என்று கேட்கக்கூடாது அவங்களும் செய்யல நீங்களும் செய்யல ஆனா உங்களுக்கு ஒட்டு போடணும்னே சர்வாதிகாரத்தோட பேசுறீங்க. எப்பவுமே அடாபுடா தானா யாரையும் மதிக்க மாட்டீர்கள் உங்களுக்கு ஓட்டுமட்டும் வேணும் . உங்களுடைய ஆணவமே உங்களுடைய அழிவுக்கு காரணம் காங் பிஜேபி ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் இப்போது ஆளுவது பிஜேபி கேளிவிகள் ஆளும்கட்சி மீதுவரைதான் செய்யும். நீங்கள் தரும் பதிலில் உங்களின் கட்சிகளின் அருமை பெருமை அடங்கி இருக்கிறது நன்றி வாழ்க வளமுடன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X