பொது செய்தி

இந்தியா

அமிர்தசரஸ் தாக்குதல் : தகவல் தந்தால் ரூ.50 லட்சம் பரிசு

Added : நவ 19, 2018 | கருத்துகள் (7)
Advertisement
அமிர்தசரஸ் தாக்குதல், பயங்கரவாதிகள், பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங்,  பஞ்சாப் , அமிர்தசரஸ் , அமரிந்தர் சிங்,  ராஜசன்சி கிராமம், அல் குவைதா ,ஜாகிர் முசா, ஜெய்ஷ் இ முகமது, 50 லட்சம் பரிசு , 
Amritsar attack, terrorists, Punjab Chief Minister Amarinder Singh, Punjab, Amritsar, Amarinder Singh, Rajansani village, Al Qaeda, Zaheer Muza, Jaish e Mohamed, 50 lakh prizes,

அமிர்தசரஸ் : பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் நடந்த தாக்குதலில் தொடர்புடையவர்கள் பற்றி தகவல் தந்தால் ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் அமரிந்தர் சிங் அறிவித்துள்ளார்.

அமிர்தசரசின் ராஜசன்சி கிராமத்தில் மத வழிபாட்டின் போது வெடிகுண்டு வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் 3 பேர் பலியாகி உள்ளனர். 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அல் குவைதா பயங்கரவாத அமைப்பின் கமான்டர் ஜாகிர் முசா, ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த 5 முதல் 6 பயங்கரவாதிகள் அமிர்தசரஸ் வந்து சென்ற 2 நாட்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இவர்கள் வந்த சென்றதற்கான சிசிடிவி கேமரா பதிவு ஆதாரத்தை பஞ்சாப் போலீசார் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த தாக்குதலில் தொடர்புடையவர்களை கைது செய்ய தகவல் தருபவர்களுக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும். போலீஸ் உதவி எண்ணான 181 ல் தொடர்பு கொண்டு தகவல் தரலாம். தகவல் தருபவர்கள் குறித்த விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
19-நவ-201816:48:16 IST Report Abuse
Endrum Indian இந்த பிசாத்து காசு யாருக்கு வேணும் என்று இதை செய்யச் சொன்னவர்கள் சொல்வார்கள்??? உங்களுக்கு டைம் இருந்தால் உங்கள் தலைவருக்கு ஒரு போன் போடுங்கள், அவருக்கு நிச்சயம் தெரிந்திருக்கும் யார் எதற்கு செய்தார்கள் என்பது, அவர் கட்டளை இன்றி ஒன்றும் இப்படி நடப்பதில்லை.
Rate this:
Share this comment
Cancel
19-நவ-201815:22:06 IST Report Abuse
ஆப்பு எனக்கென்னவோ எல்லா சர்தார்ஜிக்களும் ஒரே மாதிதான் இருக்குற மாதிரி தெரியுது.
Rate this:
Share this comment
Cancel
Ravi Manickam - EDMONTON ,கனடா
19-நவ-201814:21:15 IST Report Abuse
Ravi Manickam அர்பன் நக்சல்கள், கான் கிராஸ் மற்றும் கம்மிகளுக்கு இதுபோலுள்ள செய்தி கண்ணில்,காதில் படவோ கேட்கவோ செய்யாது,தாக்குதல் நடத்தியது அங்காளி பங்காளிகள் அல்லவா,அதுமட்டுமின்றி மாநில அரசு குற்றவாளியை பிடிக்க 50 லட்சம் பரிசு அறிவித்தால் இது மக்களின் வரிப்பணமும் அல்ல...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X