பொது செய்தி

இந்தியா

வாகனம் ஓட்டும் போது மொபைல் பயன்படுத்தினால் லைசென்ஸ் ரத்து

Added : நவ 19, 2018 | கருத்துகள் (24)
Advertisement
Maharashtra, Mobile phone, Supreme Court,Drunk and drive,licenses canceled, மகாராஷ்டிரா, மொபைல் போன், லைசென்ஸ் ரத்து, சுப்ரீம் கோர்ட், மகாராஷ்டிரா, போக்குவரத்து துறை , எஸ்பி விஜய் படேல், சாலை விபத்துக்கள் , ஓட்டுனர் உரிமம் ரத்து,  அதிக வேகம், போதையில் வாகனம் ஓட்டுதல், 
  Maharashtra, transport department, SP Vijay Patel, road accidents, cancellation of driver's license, high speed,

மும்பை : வாகனம் ஓட்டும் போது மொபைல் போன் பயன்படுத்தினால், 3 மாதங்களுக்கு ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும் என மகாராஷ்டிராவில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இந்த விதி கொண்டு வரப்பட்டு 3 ஆண்டுகளான போதிலும் தற்போது தான் அமலுக்கு வந்துள்ளது. இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்த மாநிலத்தின் அனைத்து போக்குவரத்து காவல் நிலைய கிளைகளுக்கும் போக்குவரத்து துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதிக வேகம், போதையில் வாகனம் ஓட்டுதல், போக்குவரத்து சிக்னலை கடைபிடிக்காதது, வாகனம் ஓட்டும் போது மொபைல் போனில் பேசுதல், கனரக வாகனங்களில் பொது மக்களை ஏற்றுதல், கனரக வாகனங்களில் அதிக சுமை ஏற்றுதல் ஆகிய 6 தவறுகளுக்கும் ஓட்டுனர் உரிமம் குறைந்தபட்சமாக 3 மாதங்களுக்கு ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய தவறுகளில் ஈடுபடுவோருக்கு பாடம் புகட்டுவதற்காக அபராதம் விதிப்பதற்கு பதில், உரிமம் ரத்து செய்யப்பட உள்ளதாக நெடுஞ்சாலை போக்குவரத்து துறை எஸ்.பி., விஜய் படேல் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு மட்டும் மகாராஷடிராவில் 35,800 சாலை விபத்துக்கள் நடந்துள்ளன. இதனால் சாலை விபத்துக்களை குறைக்கும் வழிமுறைகளை காண சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VIJAIAN C -  ( Posted via: Dinamalar Android App )
20-நவ-201807:54:58 IST Report Abuse
VIJAIAN C Most of ppl where helmet to use it as a mobile stand,no one cares about rules
Rate this:
Share this comment
Cancel
rmr - chennai,இந்தியா
19-நவ-201820:57:41 IST Report Abuse
rmr இதை போலீஸ் அதிகாரிகள் அரசியல் வாதிகள் செய்தால் அவர்களின் பதவி பறிக்கப்படும் என்று சொல்லுங்கள்
Rate this:
Share this comment
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
19-நவ-201819:24:36 IST Report Abuse
Loganathan Kuttuva In developed countries drivers use cellphones in hands free mode .They handle important calls only.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X