பதிவு செய்த நாள் :
'திட்டம் நிறைவேற்ற காங். தடை'
பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு

குர்கான்: ஹரியானாவில், கே.எம்.பி., எனப்படும், குண்ட்லி - மனேசார் - பால்வால் எக்ஸ்பிரஸ் வே நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியை, பிரதமர் நரேந்திர மோடி, நேற்று துவக்கி வைத்தார். அப்போது, ''நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்கள் நிறைவேறுவதற்கு, முந்தைய, காங்., அரசு பல்வேறு தடைகளை போட்டு வந்தது,'' என, அவர் குற்றம் சாட்டினார்.

திட்டம்,நிறைவேற்ற,காங்.,தடை,பிரதமர்,மோடி,குற்றச்சாட்டு


ஹரியானாவில், பா.ஜ.,வை சேர்ந்த மனோகர்லால் கட்டார் முதல்வராக உள்ளார். முழுமை பெற்றுள்ளதுஇம்மாநிலத்தில், குண்ட்லி - மனேசார் - பால்வால் ஆகிய பகுதிகளை இணைக்கும், 135 கி.மீ., நீள எக்ஸ்பிரஸ் வே அமைக்கும் திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதில், குண்ட்லி - மனேசார் இடையிலான நெடுஞ்சாலையை, நேற்று நடந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது: ஹரியானா மாநிலத்துக்கு, இன்றைய நாள்,

முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. குண்ட்லி - மனேசார் இடையிலான எக்ஸ்பிரஸ் வே திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதை அடுத்து, கே.எம்.பி., திட்டம் முழுமை பெற்று உள்ளது.

அதிகரிப்பு


நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்கள் நிறைவேறாமல், முந்தைய, காங்., அரசு பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வந்தது. இந்த திட்டம், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பே நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். காங்., போட்ட முட்டுக்கட்டைகளால், இந்த திட்டத்துக்கான செலவு, 1,200 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.ஹரியானாவில், கே.எம்.பி., திட்டமும், மெட்ரோ ரயில் திட்டமும், நகரங்கள் இணைப்பில் புரட்சியை ஏற்படுத்தும். இதனால், இப்பகுதிகளை சேர்ந்த மக்கள் அதிகளவில் பயன் அடைவர்.இவ்வாறு அவர் பேசினார்.

'அர்ப்பணிப்புடன் செயல்படுவோம்'


உலக கழிப்பறை தினத்தையொட்டி, 'டுவிட்டர்' சமூக தளத்தில், பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளதாவது:கடந்த நான்கு ஆண்டுகளில்,நாடு முழுவதும், துாய்மை திட்டங்கள் சிறப்பான முறையில் நிறைவேற்றப்பட்டுள்ளன. கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மக்களுக்கு ஏற்படுத்தி தருவதில், மத்திய அரசு உறுதியாக உள்ளது. உலக கழிப்பறை

Advertisement

தினமான இன்று, துாய்மை, கழிப்பறை வசதிகளை, நாடு முழுவதும் ஏற்படுத்தி தருவதில், அர்ப்பணிப்புடன் செயல்படுவோம் என உறுதி கூறுகிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

'முடியாத திட்டத்துக்கு திறப்பு விழா'

டில்லியில், காங்., செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: ஹரியானாவில், முழுமையாக முடிக்கப்படாத, கே.எம்.பி., எக்ஸ்பிரஸ் வே திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்துள்ளார். தேர்தலை மனதில் வைத்து, விளம்பரத்துக்காக, இவ்வாறு செயல்படுவது, மக்கள் உயிருடன் விளையாடுவதாகும். கே.எம்.பி., திட்டம் முடிக்கப்படாதது குறித்து, விசாரணை நடத்த, பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட வேண்டும். இந்த திட்டத்தை முழுமையாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajasekar K D - Kudanthai,இந்தியா
20-நவ-201821:15:55 IST Report Abuse

Rajasekar K Dசிரிப்பு தாங்கமுடியாத

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
20-நவ-201821:08:01 IST Report Abuse

Pugazh Vமுந்தைய ஆட்சி காங்கிரஸ். அப்புறம் எப்படி அவர்களே அவர்களின் திட்டங்களை நிறைவேற்ற தடையாக இருந்திருப்பார்கள்? மாநில அரசின் திட்டம் நிறைவேற்ற ம.அரசு எப்படி தடை போட முடியும்? என்ன சார் பேசறார் இவர்?

Rate this:
Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா
20-நவ-201818:10:28 IST Report Abuse

Ramakrishnan Natesan'திட்டம் நிறைவேற்ற காங். தடை' இன்னுமா உன்னை உலகம் நம்புது நீ பிரதமரா இல்லை காங்கிரஸ் காரண ஆட்சியில் நீ இருக்கும்போது அவன் எப்படி தடையா இருப்பான் இன்னும் நீர் பீலா விடும் தொழிலை விடவில்லை

Rate this:
மேலும் 25 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X