பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
இடைத்தேர்தல்,விவகாரத்தில்,குழப்பம்,தீர்ந்தது!

தமிழகத்தில், காலியாக உள்ள, 20 சட்டசபை தொகுதிகளுக்கு, இடைத்தேர்தல் எப்போது நடக்கும் என்ற விவகாரத்தில், குழப்பம் தீர்ந்தது. புயல் எச்சரிக்கை காரணமாகவே, இடைத்தேர்தல் நடத்துவது ஒத்திவைக்கப்பட்டதாகவும், லோக்சபா தேர்தலுக்கு முன், 20 தொகுதிகளுக்கும், இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும், என, தலைமை தேர்தல் கமிஷனர், ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார்.
தி.மு.க., தலைவர் கருணாநிதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., போஸ் ஆகியோர் மறைவு காரணமாக, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. 'இந்த தொகுதிகளுக்கு, ஐந்து மாநில சட்டசபை பொதுத் தேர்தலுடன், இடைத்தேர்தல் நடத்தப்படும்' என, எதிர்பார்க்கப்பட்டது.

தேர்தல் வேண்டாம்


இதற்கிடையில், 'திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் செல்லாது என, அறிவிக்கக் கோரி, தி.மு.க., தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில், கன மழை பெய்யும் வாய்ப்புள்ளது. எனவே, தற்போது இடைத்தேர்தல் நடத்த வேண்டாம்' என, தமிழக அரசின் தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், தேர்தல் கமிஷனுக்கு, கடிதம் எழுதியிருந்தார்.

அதனால், இரு தொகுதிகளுக்கும், இடைத்தேர்தல் நடத்துவது ஒத்தி வைக்கப்பட்டது.
ஐந்து மாநில சட்டசபை தேர்தல் அறிவிப்பின் போதும், இரு தொகுதிகளுக்கும், தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.இந்தச் சூழ்நிலையில், 'தினகரன் ஆதரவு, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், 18 பேரை, சபாநாயகர் தனபால், தகுதி நீக்கம் செய்தது செல்லும்' என, சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால், தமிழகத்தில் காலியாக உள்ள, சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை, 20 ஆக உயர்ந்தது.சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு நகல், கடந்த வாரம், சபாநாயகருக்கு அனுப்பப்பட்டது.
அதை, சட்டசபை செயலக அதிகாரிகள், டில்லியில் உள்ள தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.அடுத்த ஆண்டு ஏப்ரலில், நாடு முழுவதும், லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது.

எனவே, காலியாக உள்ள, 20 சட்டசபை தொகுதிகளுக்கும், லோக்சபா தேர்தலுடன் சேர்த்து, தேர்தல் நடக்க வாய்ப்புள்ளதாக, தகவல் வெளியானது.

தனியாக தேர்தல்


அதேநேரத்தில், லோக்சபா தேர்தல், நாடு முழுவதும் நடத்தப்பட வேண்டியது இருப்பதால், இடைத்தேர்தல்களை தனியாக நடத்தவே, தேர்தல் கமிஷன் திட்டமிடும் என்ற, தகவலும் வெளியானது.இதன் காரணமாக, 20 தொகுதிகளுக்கும், எப்போது இடைத்தேர்தல் வரும் என்பதில், குழப்பம் நீடித்தது. ஒரே நேரத்தில், 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டால், மினி சட்டசபை தேர்தலாக இருக்கும் என்பதால், இதை அனைத்து கட்சிகளும், ஆவலோடு எதிர்பார்த்தபடி உள்ளன.
இந்த சூழ்நிலையில், இடைத்தேர்தல் எப்போது என்ற குழப்பத்திற்கு,

தலைமை தேர்தல் கமிஷனர் ராவத், நேற்று முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தனியார், 'டிவி'க்கு, அவர் அளித்த பேட்டி:லோக்சபா தேர்தலுக்கு முன், தமிழகத்தில் காலியாக உள்ள, 20 சட்டசபை தொகுதிகளுக்கும், இடைத்தேர்தல் நடத்தப்படும்.

கட்சிகள் தீவிரம்


'கஜா' புயல் எச்சரிக்கை காரணமாகவே, இடைத்தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. அதை, அரசியல் கட்சியினர் விமர்சித்தனர். ஒருவேளை, தேர்தலை ஒத்திவைக்காமல் நடத்தியிருந்தால், அந்த இடைத்தேர்தலும் பாதிக்கப்பட்டிருக்கும். திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தல் விஷயத்தில் மட்டும், நீதிமன்ற வழக்கின் முடிவை எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.லோக்சபா தேர்தலுக்கு முன், இடைத்தேர்தல் உறுதி என்பதால், களப் பணிகளில், தமிழக கட்சிகள், இனி தீவிரம் காட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

20 தொகுதிகள்

திருப்பரங்குன்றம், நிலக்கோட்டை, பெரியகுளம், ஆண்டிபட்டி, பரமக்குடி, மானாமதுரை, சாத்துார், ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம், அரூர், குடியாத்தம், பாப்பிரெட்டிப்பட்டி, அரவக்குறிச்சி, பெரம்பூர், சோளிங்கர், திருப்போரூர், பூந்தமல்லி, தஞ்சை, ஆம்பூர், திருவாரூர்


- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
22-நவ-201815:20:56 IST Report Abuse

skv<srinivasankrishnaveni>ஐயா புயல் வரும் என்றுதான் கணிக்கமுடியும் அதன் வேகம் வீரியம் எப்படி எவ்ளோ இருக்கும் என்று சொல்லவேமுடியாதே

Rate this:
skv - Bangalore,இந்தியா
22-நவ-201815:18:30 IST Report Abuse

skv<srinivasankrishnaveni>தேர்தலா எப்படிங்க நடக்கும் பாதிக்கபட்டமக்களின் நிலை தெரிஞ்சும் என்னாத்துக்கு கலாட்டா அவள் பார்த்தால் பாவமா இல்லைய்யா ஒரே நாளில் எல்லாம் இழந்து பரிதாபமா அடுத்தவேளை சோற்றுக்கும் தவிக்கும்போது தேர்தல்னா என்னங்க செய்வாங்க ஒன்னு சொல்றேனுக நடந்தால் வரும்விழும் எல்லா வோட்டுகளுமே கள்ள ஓட்டுக்களேதான் என்று உறுதியா சொல்லமுடியும் எப்போது கண்டவனை நம்பிண்டு இந்த ர்=இருவதும் தினகரன் பின்னாடிபோனானுகளோ அதுவே மாபெரும் தப்பு அதுக்கேத்தான் தண்டனை , நல்ல தீர்ப்பு வழங்கிய கோர்ட்டுக்கு கொடிக்கல்லே நன்றி

Rate this:
PANDA PANDI - Aththipatti,இந்தியா
22-நவ-201805:51:37 IST Report Abuse

PANDA PANDITheernthathAAAAA? SOLLAVEA ILLAI

Rate this:
மேலும் 28 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X