பணக்கட்டால் கிழிந்தது பனியன்... | Dinamalar

பணக்கட்டால் கிழிந்தது பனியன்...

Added : நவ 19, 2018
Share
கஜா புயல் கடந்து சென்ற மறுநாள். சிட்டியில் சாரல் மழை சிலுசிலுத்துக் கொண்டிருந்தது. கலெக்டர் ஆபிசுக்கு ஒரு வேலையாக சென்ற சித்ராவும், மித்ராவும், வேலை முடிந்து வெளியே வந்தனர். அங்கிருந்த ஒரு பேக்கரிக்குள் நுழைந்தனர்.''மாவட்ட சுகாதார துறைக்கும், மாநகராட்சி சுகாதார துறைக்கும் எப்போதும் சேரவே, சேராது போல,''''ஏன் என்னாச்சு'' என்றாள் மித்ரா.''நம்மூர்ல டெங்கு,
 பணக்கட்டால் கிழிந்தது பனியன்...

கஜா புயல் கடந்து சென்ற மறுநாள். சிட்டியில் சாரல் மழை சிலுசிலுத்துக் கொண்டிருந்தது. கலெக்டர் ஆபிசுக்கு ஒரு வேலையாக சென்ற சித்ராவும், மித்ராவும், வேலை முடிந்து வெளியே வந்தனர். அங்கிருந்த ஒரு பேக்கரிக்குள் நுழைந்தனர்.''மாவட்ட சுகாதார துறைக்கும், மாநகராட்சி சுகாதார துறைக்கும் எப்போதும் சேரவே, சேராது போல,''''ஏன் என்னாச்சு'' என்றாள் மித்ரா.''நம்மூர்ல டெங்கு, பன்றிக்காய்ச்சல் இறப்பு அதிகமாகிட்டுருக்கு. இதுக்கு பிரைவேட் ஆஸ்பத்திரில இருந்து கடைசி நேரத்துல, நோயாளிகளை கவர்மென்ட் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கறதுதான் காரணம்னு, புகார் சொல்லியிருக்காங்க,''''ஆமா...நானும் கேள்விப்பட்டேன். அதுக்கென்ன இப்ப?''''இதுக்குப் பிறகு கலெக்டர் ஆபிசுல நடந்த கூட்டத்துல, பிரைவேட் ஆஸ்பத்திரிகளை 'வார்ன்' பண்ணுனாங்க. ஆனா, சிட்டி சுகாதாரப் பணிகள்ல, முக்கிய பங்கு வகிக்கற கார்ப்பரேஷன் சுகாதார துறை சார்புல யாரும் கலந்துக்கலை. மாவட்ட மற்றும் மாநகராட்சி சுகாதார துறைக்கு இடையே, இருக்கற உரசல் இதுல வெளிப்படையா தெரிஞ்சுச்சு'' என்றாள் சித்ரா.''அப்ப ரெண்டு தரப்பும் ஒண்ணா வேலை பார்த்து, காய்ச்சலை ஒழிக்கறதா சொல்லிக்கறதெல்லாம் சும்மாதானா...இவங்கள நம்பியிருக்கற ஜனங்க கதி?'' என்று கவலையாக முகத்தை வைத்துக் கொண்டாள் மித்ரா.''கார்ப்பரேஷன்காரங்க கலந்துக்கறாங்களோ இல்லையோ...நம்ம சி.இ.ஓ., இது மாதிரி கூட்டங்கள்ல இப்பல்லாம் 'டாண்'னு முன்வரிசைல ஆஜராகிடுறார்'' என்றாள் சித்ரா.''கவனிச்சேன்...கலெக்டரேட்ல போனவாரம் நடந்த டெங்கு கூட்டத்துல கூட முன்வரிசைல உட்கார்ந்து, சீரியசா நோட்ஸ் எடுத்துக்கிட்டிருந்தாரே'' என்றாள் மித்ரா.''ஒரு கால்நடை காய்ச்சல் சமாச்சாரம் சொல்றேன்...சிங்காநல்லுார்ல இருக்கற கவர்மென்ட் வெட்டரினரி ஆஸ்பத்திரில, கால்நடைகளுக்கு சாதாரண காய்ச்சல், வயிற்றுப்போக்குன்னு போனாக்கூட, வெளியே உள்ள பார்மசிகள்லதான் மருந்து, மாத்திரை வாங்க சீட்டு எழுதித்தர்றாராம், அங்க இருக்கற டாக்டர்'' என்றாள் சித்ரா.''அப்ப கவர்மென்ட் தரப்புல தர்ற மருந்து, மாத்திரைலாம் எங்கதான் போகுது?'' என்று கேட்டாள் மித்ரா.''நல்லா கேட்டே போ...இன்னொரு ஆஸ்பத்திரி மேட்டர். பொதுவா சந்தேக மரண வழக்குகள இன்ஸ்பெக்டர், நேரடி எஸ்.ஐ., தான் விசாரிக்கணும். இவங்க தான் இறந்தவங்களேட போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டை, ஆஸ்பத்திரில வாங்கி, நிஜமான காரணத்தை தெரிஞ்சு வழக்கு விசாரணையை முடிக்கணும்...''''சரி...அதுக்கென்ன இப்போ?''''ஆனா, சில ஸ்டேஷன்கள்ல, இதை பாலோ செய்றதில்லை. ஏட்டு, சிறப்பு எஸ்.ஐ.,களை அனுப்பி, பிரேத பரிசோதனை அறிக்கையை வாங்கறாங்க''''சரி...பாயின்டுக்கு வா''''இதுல என்ன முக்கிய விசயம்னா, இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., வராம, ஏட்டு மாதிரி ஆளுங்க போறதால, அவங்க கிட்ட பணம் வாங்கிட்டு, ஏனோதானோனு அறிக்கையை தர்றாங்க...இதனால பல கேஸ்கள்ல டாப் போலீஸ் ஆபிசர்கள், ஈசியா வழக்குல இருந்து தப்பிச்சிர்றாங்க''''ஓகோ''''பல சந்தேக மரணங்கள், கொலை வழக்கா மாற அதிக சான்ஸ் இருக்கு... இன்னிக்கு இல்லை ஒரு நாள் அப்படி மாறும்போதுதான், அலட்சியமா இருக்கற அதிகாரிங்க மாட்ட போறாங்க...'' என்றாள் சித்ரா.''ஆனா, கோவில் உண்டியல் பணத்தை பப்ளிக்கா லவட்டுனவங்க, சீக்கிரமே மாட்டுவாங்க'' என்று 'சஸ்பென்ஸ்' வைத்தாள் மித்ரா.''டீட்டெய்ல்ஸ் ப்ளீஸ்'' என்றாள் சித்ரா.''நம்ம கோனியம்மன் கோவில்ல, சில நாட்களுக்கு முன்னால உண்டியல் எண்ணுனாங்க. அப்ப எல்லார் முன்னாடியும், எண்ணி தனியா வச்சிருந்த ஒரு 500 ரூபாய் கட்டை எடுத்து, ஊழியர் ஒருத்தரு உள்பனியனுக்குள் சொருகியிருக்காரு, இதுல பனியனே கிழிஞ்சு போச்சாம்.''''என்ன தைரியம் பாரு''''இதை நேர்ல பார்த்த, அறநிலையத்துறை உதவி கமிஷனர் சரவணன், உடனே அந்த ஆளை பிடிச்சு, பணக்கட்டை பிடுங்கி, கோவில் கணக்குல சேர்க்க டிரை பண்ணியிருக்காரு. அதுக்குள்ளே அந்த பணியாளருக்கு ஆதரவா, அங்கிருந்த இன்னொரு 'ஆக்ஷன்' அதிகாரி, வக்காலத்து வாங்கியிருக்காரு''''ம்ம்...அப்புறம்?''''இது பற்றி கேட்டதுக்கு, 'அப்புறம் மேல் அதிகாரிகளை யார் கவனிப்பதாம்'னு சொல்லி நியாயப்படுத்தினாராம்''''அட...''''பிரச்னை இணை கமிஷனர் ராஜமாணிக்கத்துக்கிட்ட போச்சு. விசாரிச்சு நடவடிக்கை எடுக்கறதா சொன்னாராம். பணத்தை எடுத்தவரும், சப்போர்ட் பண்ணுனவரும் அவரோட ஆதரவாளர்களாம். அதனால ஆக்ஷன் எடுக்கறது டவுட்தான்னு பேசிக்கறாங்க''''ஓகோ''''நடுநிலை தவறாத ஏ.சி., நடந்த மேட்டரை அப்படியே வீடியோவா பதிவு பண்ணி, பென் டிரைவ்ல காப்பி பண்ணி வச்சிருக்காராம்''''வெரிகுட்''''இது தெரியாத பணத்தை எடுத்தவர், கோவில் வீடியோ காட்சிகள்ல பூரா மேட்டரையும் அழிச்சுட்டாங்க. நியாயத்தை நிலைநிறுத்த டிரை பண்ண ஏ.சி.,யோட முயற்சி அப்போதைக்கு முடிஞ்சுட்டாலும், பென் டிரைவ்ல இன்னும் 'லைவ்' ஆக இருக்காம். சரியான நேரத்துல பயன்படுத்த திட்டம் போட்டிருக்காராம்'' என்றாள் மித்ரா.அப்போது சிணுங்கிய போனை எடுத்த சித்ரா, ''என்னது...மணி மயங்கி விழுந்துட்டானா...உடனே பிரகாஷூக்கு தகவல் சொல்லிரு'' என்று யாரிடமோ பேசினாள்.அப்போது மித்ரா, ''மயக்கம்னு சொன்னவுடனேதான் ஞாபகம் வருது...மத்திய ஆர்.டி.ஓ.,ஆபிஸ்ல ரீசன்டா லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தினப்போ, பாபுங்கற மோட்டார் வாகன ஆய்வாளர், சுருண்டு விழுந்து பலியானாருல்ல...''குறுக்கிட்ட சித்ரா, ''ஆமா...மறக்க முடியுமா'' என்றாள்.''அவரு பலியானதுக்கு, லஞ்ச ஒழிப்புத்துறைகாரங்க கடுமையா மிரட்டுனதுதான் காரணம்னு பேசிக்கிட்டாங்கள்ல...இந்த மேட்டர்ல, சம்பந்தப்பட்டவங்க மேல ஆக்ஷன் எடுக்கணும்னு, மனித உரிமை கமிஷன்கிட்ட, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் போயிருக்காங்களாம்'' என்றாள் மித்ரா.''இப்போதைக்கு பிரச்னை முடியாதுன்னு சொல்லு'' என்று கூறியபடி எழுந்த சித்ரா, டீக்கு பணம் கொடுத்தாள். ெஹல்மெட் அணிந்தபடி இருவரும், ரயில்வே ஸ்டேஷன் மார்க்கமாக ஸ்கூட்டரில் பறந்தனர்.''நேத்து தெலுங்குபாளையத்துல, ரெய்டு நடத்தி ரூ.12 லட்சம் மதிப்புள்ள குட்காவை பிடிச்சாங்களே...கேள்விப்பட்டியா?''''ஆமா...இப்படி பிடிக்கறதெல்லாம் சும்மா பிஸ்கோத்துதான். மெகா முதலைங்கள காப்பாத்தறதுக்குதான், இப்படி சின்ன சின்ன பார்ட்டிங்கள அப்பப்ப பிடிச்சு, கணக்கு காட்டுறாங்கன்னு பேசிக்கிறாங்க...'' என்றாள் சித்ரா.அதற்கு மித்ரா, ''உண்மையும் அதுதான். ரூரல்ல பல குடோன்கள்ல பண்டல் பண்டலா பதுக்கி வச்சு, சிட்டிக்குள்ளே கொஞ்சம் கொஞ்சமா கொண்டு வர்றாங்க. எங்கெங்கே எவ்வளவு பதுக்கி வச்சிருக்காங்கன்னு, சகல விபரமும் தெரிஞ்சும் பெயரளவுக்குதான் ஆக்ஷன் எடுக்குறாங்கன்னு, நம்ம உணவு பாதுகாப்பு துறை 'பட்சி' சொல்லுது'' என்றாள்.''போலீசும் உணவு பாதுகாப்பு துறையும் இணைஞ்சு ரெய்டு போனாதான், ஓரளவுக்காவது வெளியே கொண்டு வர முடியும். அதுவரையும் எல்லா பெட்டிக்கடையிலயும் தடையில்லாம கிடைக்கும்'' என்றாள் சித்ரா.''நம்ம மாநகராட்சி அதிகாரிங்க, திடீர்னு பக்திமயமா ஆனது பத்தி தெரியுமா?'' என்றாள் மித்ரா.அதற்கு சித்ரா, ''ரொம்ப சஸ்பென்ஸ் வைக்காதே. சீக்கிரம் சொல்லு,'' என்றாள்.''கணபதி மணியகாரன்பாளையம் பகுதியில, கொஞ்ச நாளைக்கு முன்னால நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற, கார்ப்பரேஷன் டி.பி.ஓ., வும் அதிகாரிங்களும் காலையிலேயே ஆஜர் ஆகிட்டாங்க. ஒவ்வொரு குடியிருப்பா இடிச்சுக்கிட்டு வந்தாங்க. ஒரு இடத்துல கோவிலை பார்த்ததும் திடீர்னு நின்னுட்டாங்க''''ஏன்?''''ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்த கோவில்கள் தான் காரணம். கோவிலை இடிச்சா சாமிக்குத்தம் ஆகியிரும்னு நினைச்சாங்களோ இல்லையோ, பயபக்தியோட சாமி கும்பிட்டு, பூசாரி தட்டுல பத்து ரூபா தட்சணை போட்டாரு டி.பி.ஓ., அப்புறம், கோவிலை இடிக்க உத்தரவு போட்டாரு. பூஜையில ஆஜராகி, சாமியையும் கும்பிட்டவரு, உடனே அதே கோவிலை இடிக்க சொன்னதை பார்த்து, கூட வந்தவங்களுக்கு சிரிப்பு தாங்க முடியலை'' என்று முடித்தாள் மித்ரா.இருவரும் குலுங்கி சிரித்தபடியே ஸ்கூட்டரில் பறந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X