பொது செய்தி

தமிழ்நாடு

பருத்தி வரத்து 434 லட்சம் பேல்! நம்பிக்கையில் மில் உரிமையாளர்கள்

Added : நவ 20, 2018 | கருத்துகள் (1)
Share
Advertisement
 பருத்தி வரத்து 434 லட்சம் பேல்! நம்பிக்கையில் மில் உரிமையாளர்கள்

பருத்தி வரத்து குறித்துடில்லியில் இயங்கி வரும் பருத்தி ஆலோசனை குழு கணித்து வெளியிட்டிருக்கும் தகவல், ஸ்பின்னிங் மில் அதிபர்களை, நிம்மதி பெருமூச்சுவிட வைத்திருக்கிறது.கடந்தாண்டு சீசன் துவக்கத்தில் கண்டி (355.62 கிலோ) 39 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட பஞ்சு, கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து, கடந்த செப்டம்பரில் 53 ஆயிரம் ரூபாய் என உச்சம் தொட்டது. அதனால், ஸ்பின்னிங் மில் உரிமையாளர்கள் கலக்கம் அடைந்தனர்.
நுாலுக்கு உரிய விலை கிடைக்காததால், நஷ்டத்தை தவிர்க்க மில்களில் ஷிப்ட்களை குறைத்தனர்.அக்டோபரில் பருத்தி சீசன் துவங்குவதால், பஞ்சு விலை குறைவாக கிடைக்கும் என்று மில் உரிமையாளர்கள் காத்திருந்தனர். ஆனால், பருத்தி வரத்து இருந்தும், அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு விலை குறையவில்லை. கண்டி, 47 ஆயிரத்து 500 ரூபாய் வரை விற்பனையானது.இப்போதுதான், வட மாநிலங்களில் இருந்து பருத்தி வரத்து சற்றே அதிகரித்துள்ளது. இருப்பினும் விலை எதிர்பார்த்த அளவுக்கு குறையவில்லை. அதற்கு காரணம், பருத்தி வரத்து குறித்த நிலையற்ற தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்ததுதான். சமீபத்தில், பருத்தி ஆலோசனைக்குழு, 'பருத்தி வரத்து திருப்திகரமாக இருக்கும்' என்று தெரிவித்துள்ளது.அதிக விளைச்சல்இந்த பருத்தியாண்டில், 373 லட்சம் பேல் (ஒரு பேல் = 170 கிலோ) பருத்தி உற்பத்தி இருக்கும் என்று பருத்தி ஆலோசனை குழு கணித்துள்ளது. ஆரம்ப இருப்பாக, 43 லட்சம் பேல் இருக்கும் என்றும், இறக்குமதி வாயிலாக, 18 லட்சம் பேல் வரத்து இருக்கும் என்று கணித்துள்ளது. மொத்த பருத்தி வரத்து, 434 லட்சம் பேல் ஆக இருக்கும்.மில்கள் உட்பட அனைத்து வகையான நுகர்வில், 320 லட்சம் பேல் செலவிடப்படும் என்றும், 60 லட்சம் பேல் ஏற்றுமதி செய்யப்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. மொத்த தேவை 380 லட்சம் பேல் போக, 54 லட்சம் பேல் இருப்பு வைக்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 2.94 கோடி ஏக்கர் பரப்பளவில் பருத்தி பயிரிடப்பட்டுள்ளது. இது கடந்த பத்தாண்டு சராசரியை விட அதிகம். மழைப்பொழிவும் நன்றாகவே இருக்கிறது. பூச்சித்தாக்குதலும் குறைவாக இருக்கிறது. கடந்த பத்தாண்டுகளின் சராசரியைவிட இந்தாண்டு அதிகளவில் விளைச்சல் உள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புரோக்கர்கள் புரளிஸ்பின்னிங் மில் உரிமையாளர்கள் கூறுகையில், ''பருத்தியை இருப்பு வைத்திருக்கும் இடைத்தரகர்கள்தான்,தட்டுப்பாடு இருக்கிறது என்று தவறான தகவல்களை பரப்பி, பருத்தி விலையை ஏற்றி வருகின்றனர். தற்போது பருத்தி வரத்து குறித்த நம்பிக்கையாக தகவல்கள் வந்துள்ளதால், பருத்தியின் விலையில் ஒரு நிலைத்தன்மை வர வாய்ப்புள்ளது, பருத்தி விலை குறைந்து, நியாயமான விலையில் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது,'' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Elil Arasan Dhani - Melbourne,ஆஸ்திரேலியா
20-நவ-201806:57:29 IST Report Abuse
Elil Arasan Dhani பருத்தி பருத்தி சந்தைக்கு வரும்வரை உற்பத்தி நிலவரம் தெரியாது . பூச்சி , காய் பூச்சி பத்தி அரசாங்கத்திற்கும் தெரியாது . அமெரிக்கா , ஆஸ்திரேலியா நாடுகளை பார்த்து கர்த்துக்கொள்ள வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X