அடிக்கடி காணாமல் போகுது ஜீப்பு...அதிகாரிகளுக்கு தெரிந்தே நடக்குது தப்பு!

Added : நவ 20, 2018
Share
Advertisement
'கஜா' புயல் மழையால், காய்ச்சலில் அவதிப்பட்ட மித்ரா, வீட்டில் ஓய்வெடுத்து கொண்டிருந்தாள். ''என்ன மித்து, ''லேசான புயல் தாக்கம், மழைக்கே உனக்கு காய்ச்சல் வந்து விட்டது. இப்போது பரவாயில்லையா?'' என்ற சித்ரா, மூங்கில் கூடையுடன் பழங்களை கொடுத்தாள்.''அக்கா...எதுக்குங்க. இதெல்லாம். நாளைக்கு ரெடியாயிடுவேன். நீங்க உட்காருங்க,''அதே கட்டிலில் அமர்ந்து கொண்ட சித்ரா,
 அடிக்கடி காணாமல் போகுது ஜீப்பு...அதிகாரிகளுக்கு தெரிந்தே நடக்குது தப்பு!

'கஜா' புயல் மழையால், காய்ச்சலில் அவதிப்பட்ட மித்ரா, வீட்டில் ஓய்வெடுத்து கொண்டிருந்தாள். ''என்ன மித்து, ''லேசான புயல் தாக்கம், மழைக்கே உனக்கு காய்ச்சல் வந்து விட்டது.
இப்போது பரவாயில்லையா?'' என்ற சித்ரா, மூங்கில் கூடையுடன் பழங்களை கொடுத்தாள்.''அக்கா...எதுக்குங்க. இதெல்லாம். நாளைக்கு ரெடியாயிடுவேன். நீங்க உட்காருங்க,''அதே கட்டிலில் அமர்ந்து கொண்ட சித்ரா, ''நல்லா ரெஸ்ட் எடு. எங்கு பார்த்தாலும், டெங்கு, 'ஸ்வின்புளூ'ன்னு ஒரே காய்ச்சல் மயமாயிருக்கு. டாக்டர் சொல்றதை கேளு. அப்பத்தான் குணமாகும்,'' என்றாள்.
''ஏக்கா... நீங்க சொல்றத பார்த்தால், நானென்னவோ, டெபுடி கலெக்டர் புகாரை மதிக்காத போலீஸ் மாதிரியா நடந்துக்கறேன்,'' என்றாள்.''என்னடி, புதிர் போடுற. விளக்கமா சொல்லு''''கலெக்டர் ஆபீசில், வழக்கமாக, பைக் மட்டும்தான் காணாமல் போய் கொண்டிருந்தது. யார் திருடுறாங்கன்னு, போலீஸ் கண்டுபிடிக்கலை. அங்கே... இங்கே... சுத்தி, இப்ப, டி.எஸ்.ஓ., ஜீப் மேலயே கையை வச்சுட்டாங்களாம்,''
''இது என்ன பெருங்கூத்தா இருக்குது?''''தீபாவளி வந்தப்போ, வெளியாள் ஒருத்தர் வந்து, கலெக்டர் ஆபீஸ் காம்பவுன்ட்ல இருந்த டி.எஸ்.ஓ., ஜீப்ப எடுத்துட்டு போயிருக்காரு. நைட் புல்லா ரவுண்ட் அடுச்சுட்டு, காலையில கொண்டு வந்து 'ஜீப்'பை நிறுத்திட்டு, அந்நபர் எஸ்கேப் ஆயிட்டாரு,''''இதை தெரிஞ்சுகிட்ட, டி.எஸ்.ஓ., பக்கத்தில் இருக்கிற வீரபாண்டி ஸ்டேஷனில் புகார் கொடுத்தாரு. ஆனா, அதைப்பத்தி போலீஸ் கண்டுக்கவே இல்லையாம். இதனால, டி.எஸ்.ஓ., ரொம்ப டென்ஷனா இருக்கிறாராம். இது சம்பந்தமாக, கலெக்டர்கிட்ட சொல்லவும் முடிவு செஞ்சிருக்காராம்,''''ஏன்.. போலீஸ் கண்டுக்கலையாம்?''
''இல்லக்கா. ஜீப்பில் ஏதாவது முக்கிய ஆவணங்களை கொண்டு போய், எங்காவது வெச்சிட்டு வந்து, இவங்களே இப்படி பண்ணலாமுன்னு, போலீசில் சொல்றாங்களாம். அதனால், விட்டுப்பிடிப்போம்னு காத்திருக்காங்களாம்,'' என்றாள் மித்ரா.அப்போது வந்த மித்ராவின் அம்மா, ''சித்து... இந்தாம்மா. ஜூஸ் குடி. மித்துக்கு கஞ்சி,'' என்று டேபிளில் வைத்து விட்டு சென்றார்.
'நானும் ஒரு ரெவின்யூ ஆபீஸ் மேட்டர் சொல்றேன் கேளு. ரெவின்யூ ஆபீசர்களோட ரிலேட்டிவ்ஸ், அடிக்கடி திருப்பூர் வர்றாங்களாம். அவிநாசி ரோட்ல உள்ள ஸ்டார் ஓட்டலில் தங்கும் அவர்களுக்கு, ரெவின்யூ அலுவலர்கள் வேற, தனியா சேவை செய்ய வேண்டியிருக்குதாம்,''''என்ன சேவைங்க்கா?''
''ஆமா... உயர் அதிகாரி சொன்னா, மாட்டேன்னு சொல்ல முடியுமா. தீபாவளி நேரத்துல, 'ஸ்டார்' ஓட்டலில் வந்து தங்கிய ஒரு ஆபீசரோட ரிலேட்டிவ்ஸ், 'டிரை புரூட்ஸ்' கேட்டிருக்காங்க. போய் வாங்கிட்டு, பில் கேட்டதற்கு, தலையே சுத்திடுச்சாம். மொத்தம், 10 ஆயிரம் ரூபாயை தாண்டிடுச்சாம்,''''எப்படியும், 2 ஆயிரத்துக்குள்ளதானே வருமுன்னு போன ஒருத்தர், கடன் சொல்லிட்டு வந்துட்டு, அடுத்த நாள் செட்டில் பண்ணாராம்,''''அட.. கொடுமையே..!''
''நிர்வாகத்துறை'ன்னு பெருமையா சொல்லிக்கறோம். ஆனா, இதுமாதிரி கடனுக்கு எல்லாம் வேலை செய்ய வேண்டியிருக்குதே'ன்னு, புலம்பல் சத்தம், பழைய பஸ் ஸ்டாண்ட் வரைக்கும் கேட்குதாம்,''என்று கூறி சிரித்தாள் சித்ரா.வீட்டுக்கு வெளியே, ''மல்லிகை பூ வேணுமாம்மா?'' என்ற குரல் கேட்டது. ''வேண்டாம் ஆன்ட்டி. உடம்பு சரியில்லை. அடுத்த வாரம் வாங்கிக்கிறேன்,'' என்ற மித்ரா சொன்னதும், பூக்காரம்மா சென்றார்''பூக்கள் அப்படின்னதும், பூ மார்க்கெட்ல லட்சக்கணக்கான ரூபாய் புரளுதானு, எல்லோரும் ஆச்சரியமா பேசிக்கறாங்க மித்து.''
''ஆமாங்க்கா, சீசன் நேரத்துல, ஒரு கிலோ மல்லி, 1,500 ரூபாய்க்கு போகுது,''''அட.. அதில்லைடி. அங்க இருக்கற கடை வாடகை பத்தி சொல்றேன். கார்ப்ரேஷன் கடைகளுக்கு, வாடகை ரொம்ப கம்மி. அதை எடுத்த, ஆளுங்கட்சிக்காரங்க, உள்வாடகைக்கு பல ஆயிரம் ரூபாய்க்கு விட்டிருக்காங்க. இதனால, கார்ப்ரேஷனுக்கு பல லட்சம் நஷ்டமாம். புதுசா ஏலம் நடத்தினா, கார்ப்ரேஷன் வருவாய் ஈட்டலாம். ம்...ம்... கரெக்டா.. பங்கு போறதால, அதிகாரிகளும் 'கப்...சிப்'ன்னு இருக்காங்க,'' என்றாள் சித்ரா.
''அக்கா.. சொல்ல மறந்துட்டேன். என் பிரண்டோட ரிலேட்டிவ் ஒருத்தர், தனது கணவர் மீது போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லையாம். என்ன பண்றதுன்னு தெரியலைன்னு புலம்பறாங்க,''''என்ன பிரச்னை, எந்த ஸ்டேஷன்?''''பெருமாநல்லுாரை சேர்ந்த ஒரு பெண், தனது கணவர் ரொம்ப கொடுமைப்படுத்துறாருன்னு சொல்லி அவிநாசி மகளிர் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். போலீசார் என்கொயரிக்கு போனப்ப, சத்தியமங்கலத்திலிருந்து ஒரு போலீஸ் அதிகாரி, இன்ஸ்பெக்டரிடம், 'எந்த நடவடிக்கையும் வேண்டாம்,'னு அழுத்தம் கொடுத்திருக்கார். இதனால, விசாரணை பண்ணலையாம்,''
''அடடா... அப்புறம் என்ன ஆச்சு மித்து?'
''வேறு வழியின்றி, அந்தப்பெண், எஸ்.பி., ஆபீசில் புகார் கொடுத்தார். அங்கிருந்த அதிகாரிகள், 'அவிநாசி டி.எஸ்.பி., யை போய் பாருங்க. அவருக்கு தகவல் சொல்றோம்'னு திரும்பி அனுப்பியிருக்காங்க. அந்தப்பெண்ணும், தனது குழந்தையோட அலைஞ்சி, திரிஞ்சு, அவிநாசிக்கு போனாங்க. 'டி.எஸ்.பி., சென்னைக்கு போயிட்டாரும்மா,'ன்னு சொல்லி அனுப்பிட்டாங்களாம்,''''இதெல்லாம் எங்க போய் சொல்றது? எஸ்.பி.,க்கு தெரிஞ்சு, நடவடிக்கை எடுத்தா பரவாயில்லை. ம்... ம்.. பார்ப்போம். ஏண்டி மித்து, 'டாஸ்மாக்' ஆபீசில், கணக்கில் வராத பணத்தை பிடிச்சாங்களே. அதில், ஏதாவது நடவடிக்கை இருக்குதா?''
''பணம் பிடிச்ச அடுத்த நாளே ெஹட் ஆபீசுக்கு ரிப்போர்ட் போட்டுட்டாங்க. ஆனா, இதுவரைக்கும் 'நோ... ரெஸ்பான்ஸ்'. கீழிலிருந்து மேல வரைக்கும், வைட்டமின் 'ப' பாயுறதால, ஒண்ணும் நடக்காதுங்க்கா,'' என்று மித்ரா சலித்து கொண்டாள்.
திடீரென்று மின் இணைப்பு துண்டிக்கவே, ''அம்மா... பவர் கட்டாயிடுச்சு. ஹாலில் லைட் ஆப் பண்ணுங்க,''என்றதும், ''ஏம்ப்பா... இந்த இ.பி., அதிகாரிங்க சிலரால், ஒட்டுமொத்த டிபார்ட்மென்ட்டுக்கே கெட்ட பேர் வருது தெரியுமா?''
''ஏங்க்கா... யாரை சொல்றீங்க?''
''தாராபுரத்தில், அக்ரிக்கு 'லைன்' கொடுப்பதற்கு, இ.இ., ஒருத்தர், போர்மேன் கூட சேர்ந்திட்டு, இஷ்டத்துக்கு 'வாரி' குவிச்சாங்களாம். ஒரு 'லைனுக்கு' 20 முதல் 50 ஆயிரம் வாங்கு வாங்குன்னு வாங்கி, பல லட்சம் 'செல்வத்தை' சேர்த்துட்டாங்க.''ஏன்.. ைஹயர் அபிஷியல்ஸ்க்கு தெரியாதா?''''சொல்றதை முழுசா கேளு. அதிகாரிங்க நடவடிக்கை எடுக்காததால், பலரும் 'வாட்ஸ்அப்'பில் போட்டு தாக்கிட்டாங்க. அந்த மேட்டர் பரவியதால், வேறு வழியில்லாம, ரெண்டு பேரையும் டிரான்ஸ்பர் பண்ணாங்களாம்,''
''ஊருக்கு ரெண்டு பேர் இப்படி இருந்தா போதும், வெளங்கிடும்,'' என்ற மித்ரா சொன்ன போதோ, சித்ராவின் மொபைல் போன் 'ரவிக்குமார் காலிங்' என்ற பெயரை வெளிச்சத்துடன் உமிழ்ந்தது. ''ஹலோ, கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. செல்வத்தையும், அப்பாவையும் கூட்டிட்டு இப்ப வந்திடறேன்,'' என்றாள்.
அப்போது, டிவியில், போலீஸ் அணிவகுப்பு காட்சி ஒளிபரப்பானது. அதைப்பார்த்த மித்ரா, ''அக்கா... மப்டியில் வந்த போலீசை, டிராபிக் வார்டன் வெளுத்துட்டாராம். தெரியுமா?''''ஆமாண்டி. எம்.ஜி.ஆர்., சிலை சிக்னலில், போலீசுடன், டிராபிக் வார்டன் நின்று போக்குவரத்தை சீரமைத்துக்கு கொண்டிருந்தார். அப்போது, பார்க் ரோட்டில் இருந்து 'ஒன்வே'யில் அதுவும் போதையில், ஒருவர் டூவீலரில் வந்தார்,''''அவரை தடுத்து நிறுத்தி கேள்வி கேட்ட 'டிராபிக் வார்டனை', போதை நபர் 'பளார்' கொடுத்தார். கோபமுற்ற டிராபிக் வார்டன், லத்தியை எடுத்து, ஆசாமியை பிரித்து மேய்ந்து விட்டார். போலீசார் விசாரித்ததில், 'மப்புடன் மப்டி'யில் வந்தது, வீரபாண்டி ஸ்டேஷன் போலீஸ்காரர் என்பது தெரிந்ததாம்,''
''அப்புறம் என்னாச்சுங்க?'' மி்த்ரா, ஆர்வமாக கேட்டாள்.
''வழக்கம்போலதான்... சும்மா, சத்தம் போட்டுட்டு, 'கப்..சிப்..'ன்னு அமுக்கிட்டாங்களாம்,''''அக்கா... டிராபிக் வார்டன் அடி பின்னி எடுக்கிறாரு. ஆனா, 'பாத்திர' ஸ்டேஷன் எஸ்.ஐ., ஒருத்தர், வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பதில், பல்வேறு முறைகேட்டில் ஈடுபடுறாரு,''''எப்படி சொல்றே?''''வாகன சோதனையில், குடிபோதையில் வருபவர்களை பிடித்து, 'வித்அவுட் ஹெல்மெட் கேஸ்' போட்டுட்டு, மீதி பணத்தை, லவட்டிடறாராம். இது, சம்பந்தப்பட்ட ஸ்டேஷன் அதிகாரிக்கு தெரிஞ்சும் கண்டுக்கறதில்லையாம்,''''இதுமாதிரி 'வருவாய்' ஈட்டுபவர்களை, 'செந்தில் முருகனே வருவாய்'ன்னு வேண்டுவதை தவிர வேறு வழியில்லை மித்து''
''அக்கா... திருப்பூரில், பத்திரிகைகாரங்க ரெண்டு கோஷ்டியா இருக்காங்க தெரியுமா?'' ''அப்படியா என்னாச்சு?''
''அதில் ஒரு கோஷ்டி, டவுன்ஹால் அருகே கார்ப்ரேஷனுக்கு சொந்தமான கட்டடத்தில் இயங்கும் 'பிரஸ் கிளப்', அடிக்கடி 'பார்' ஆக மாறிடுதாம்,''''இதை பார்த்த இன்னொரு கோஷ்டியை சேர்ந்த ஒரு நிருபர், வீடியோ எடுத்துருக்காரு. ஆவேசமாகி, அவர் கேமரா உடைச்சுட்டாங்களாம். விவகாரம் போலீஸ் வரைக்கும் போய், சி.எஸ்.ஆரும், கொடுத்திட்டாங்க,''
''ஆனால், இந்த விஷயத்தில் என்ன செய்யறதுன்னு, தெரியாம போலீசும் கையை பிசையறாங்களாம். கார்ப்ரேஷனில் சொல்லி, கட்டடத்தை கையகப்படுத்தி, வேறு ஏதாவது மக்கள் பயன்பாட்டுக்கு கொடுங்கன்னு, ஒரு குரூப் சொல்றாங்க''''ஓகே மித்து... நான் கெளம்பறேன். டேக் கேர்,'' என்ற சித்ரா கிளம்பினாள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X