எதிர்க்கட்சிகள் கூட்டம் ஒத்திவைப்பு: சந்திரபாபுநாயுடு

Added : நவ 20, 2018 | கருத்துகள் (25)
Share
Advertisement
எதிர்க்கட்சிகள்,கூட்டம்,ஒத்திவைப்பு,சந்திரபாபுநாயுடு

கோல்கட்டா: நவ.22ல் நடக்கவிருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சந்திரபாபுநாயுடு தெரிவித்துள்ளார். பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைப்பில் இது பின்னடைவாக கருதப்படுகிறது.

அடுத்தாண்டு ஏப்ரல் - மே மாதங்களில் லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. இதில் மத்தியில் ஆளும், பா.ஜ.,வை வீழ்த்த, அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர மாநில முதல்வருமான சந்திரபாபு நாயுடு தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

சமீபத்தில் தமிழக எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க., தலைவருமான ஸ்டாலின், மதச் சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த, கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். நேற்று திரிணமுல் காங்., தலைவரும், மேற்கு வங்க மாநில முதல்வருமான மம்தா பானர்ஜியை, கோல்கட்டாவில் சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசினார்.

பின்னர் சந்திரபாபு கூறியதாவது: எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் 22ல் நடப்பதாக இருந்தது. ஒருசில காரணங்களால் தற்போது ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டம் பார்லி., குளிர் கால கூட்டத்தொடருக்கு முன் நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
samuelmuthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
20-நவ-201818:36:55 IST Report Abuse
samuelmuthiahraj ஜெபத்துடன் விதையை விதையுங்கள் சோர்வடையாதீர்கள் வெற்றி உமதே
Rate this:
Cancel
20-நவ-201812:31:34 IST Report Abuse
ருத்ரா குடும்ப வாரிசு அரசியல், பல வருடஙகளாக ஊழல் செய்தே காய்த்துப் போன கைகளுடன் கூட்டணி இறை நம்பிக்கையை ஏளனம் செய்யும் அதிமேதாவிகள் நிறைந்தவருடன் கூட்டணி மொத்தத்தில் தனி நபரை தனியே சந்திக்க திராணி இல்லாத நாட்டின் வளர்ச்சி பற்றி கவலை இல்லாத கூட்டணி. ஒன்று மட்டும் உண்மை. மோடியை எதிர்ப்பதை தாண்டி வளமான இந்தியா, இறை நம்பிக்கையை கேரளா போல் கூறு போடாதவர்கள் கூட்டணியில் உள்ளார்களா? என்று யோசித்து பார்க்கவும்.
Rate this:
Cancel
SUNA PAANA - Chennai,இந்தியா
20-நவ-201812:09:14 IST Report Abuse
SUNA PAANA இந்த நாரதர் நாயுடு அவன் ஊர்ல தோத்தே ரொம்ப இசுத்துகினு இருக்குது. கடைசீல உள்ளது போச்சு நொள்ள கண்னானு ஆயிடுவான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X