சுலப தொழில் நாடுகளில் 'டாப் - 50' இந்தியா: மோடி

Added : நவ 20, 2018 | கருத்துகள் (21)
Advertisement
புதுடில்லி : ''உலகளவில், சுலபமாக தொழில் புரியும் 'டாப் - 50' நாடுகளில் ஒன்றாக, இந்தியாவை உயர்த்துவதே லட்சியம்,'' என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.அவர், டில்லியில், தொழிலதிபர்கள் கூட்டத்தில் மேலும் பேசியதாவது:இந்தியாவில், சிவப்பு நாடா முறையால், தொழில் துவங்குவது கடினமாக இருந்தது. அரசின் கொள்கைகள் முடங்கிக் கிடந்தன. கடந்த, 2014ல் நான் பிரதமராக பதவியேற்ற போது, உலக
India,Modi,Narendra modi,இந்தியா,நரேந்திர மோடி,மோடி

புதுடில்லி : ''உலகளவில், சுலபமாக தொழில் புரியும் 'டாப் - 50' நாடுகளில் ஒன்றாக, இந்தியாவை உயர்த்துவதே லட்சியம்,'' என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.அவர், டில்லியில், தொழிலதிபர்கள் கூட்டத்தில் மேலும் பேசியதாவது:இந்தியாவில், சிவப்பு நாடா முறையால், தொழில் துவங்குவது கடினமாக இருந்தது. அரசின் கொள்கைகள் முடங்கிக் கிடந்தன. கடந்த, 2014ல் நான் பிரதமராக பதவியேற்ற போது, உலக வங்கியின் அறிக்கைப்படி, சுலபமாக தொழில் புரியும் வசதி உள்ள, 190 நாடுகளில், இந்தியா, 142வது இடத்தில் இருந்தது.

என் தலைமையிலான மத்திய அரசு, கொள்கை முடக்கத்திற்கு முடிவு கட்டியது. கொள்கை சார்ந்த நிர்வாக நடைமுறைகளை அறிமுகப்படுத்தியது. தொழில் துவங்குவதற்கான நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டன. இதனால், தொழில் புரிவது சுலபமானது.கடந்த நான்கு ஆண்டுகளில், மேற்கொள்ளப்பட்ட தீவிர கொள்கை திட்டங்களால், இந்தியா, சுலபமாக தொழில் புரியும் நாடுகளில், 65 இடங்கள் முன்னேறி, 77வது இடத்தை பிடித்துள்ளது.

அடுத்து, இந்தியாவை, 'டாப் - 50' நாடுகளில் ஒன்றாக முன்னேறச் செய்ய வேண்டும்; நாட்டின் பொருளாதார வளர்ச்சியை, 5 லட்சம் கோடி டாலராக உயர்த்த வேண்டும் என்பதே என் இலட்சியம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
samuelmuthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
20-நவ-201818:53:19 IST Report Abuse
samuelmuthiahraj உண்மைதான் 1 ) வெளிநாட்டு பயணங்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது 2 ) பயணம் மேற்கொண்ட தொடர்பு செலவீனங்களும் உயர்ந்துள்ளது 3) இந்திய நாட்டின் பணவீக்கம் உயர்ந்துள்ளது 4) பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது 5) பொருட்களின் விற்பனை வரி உயர்ந்துள்ளது 6 ) வங்கியில் கண்டபடி கடன் பணம் பெற்றுக்கொண்டு திருப்பி கடடாமலிருப்போர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது 7) கடன் பணம் திருப்பி செலுத்தாமல் சுருட்டிக்கொண்டு வெளிநாடு சென்றோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது 8) ஜாதி மத பேதமற்ற நாட்டில் மத பேதமும் மத வாதமும் உயர்ந்துள்ளது 9)வாய்க்கால் புறம்போக்குகள் சாலைகள் ஆகியவற்றில் ஆக்கிரமிப்புகள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது 10)சிபிஐ விசாரணையில் சிக்குவோர் எண்ணிக்கையும் பின் திடீரென அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காததும் உயர்ந்துள்ளது 11)சிலை நிறுவுதலை பெரிய சாதனையாக எண்ணுதலும் அதற்காக செலவழிக்கப்படட தொகை எண்ணிக்கையும் எக்கச்சக்கமாக உயர்ந்துள்ளது 12 )களவு கற்பழிப்பு கையாடுதல் விதிகள் மீறல் நீதியான மற்றும் விதிப்படி உரிய நடவடிக்கைள் எடுக்காமலிருத்தலும் உயர்ந்துள்ளது ஆக இப்படி எத்துணையோ உயர்வுகள் இந்தியாவிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதை எவரும் மறுக்க முடியாது மறைக்கவும் முடியாது தற்போது ஆட்சியிலுப்போரால் மாற்றவும் முடியாது எனவே ஆட்சி மாற்றம் அல்லது மனமாற்றம் விரைவில் நடைபெற வேண்டும்
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
20-நவ-201814:40:14 IST Report Abuse
Natarajan Ramanathan நான் கூடுமானவரை அம்பானியின் RELIANCE கடைகளில்தான் அரிசி உள்பட அனைத்து மளிகை மற்றும் பால், காய்கறி வாங்குகிறேன்.அதானியின் FORTUNE sunflower, AMUL butter, ice cream என்று அனைத்துமே குஜராத் தயாரிப்புகள்தான். Dressகூட Reliance Mart, JIO phone, Parle biscuits. ONLY Gujarat make மட்டுமே
Rate this:
Cancel
Suga Devan - Theni,இந்தியா
20-நவ-201812:41:13 IST Report Abuse
Suga Devan ஆமாமா .... அம்பானி, அதானி, ரிலையன்ஸ்.... எல்லாருமே காங்கிரஸ் பீரியட்ஸ்ல ரயில்வே ஸ்டேசன்ல பிச்சை எடுத்திட்டு திரிஞ்சாங்க.... மோடி வந்தப்புறம் தான் ஜயோ பாவம் ரயில்வே ஸ்டேஷன் ல பிச்சை எடுக்கிறாங்களே...னு அவங்க மேல பரிதாபப்பபட்டு அவங்கள கூட்யாந்து கோடீஸ்வரனாக்குனாரு...... தேனை களவாடி நக்குன கை காங்கிரஸ் கை....தேனடி வாங்குறது பாஜக... மோடி பிரதமராகலைனா அவருக்கு நட்டமில்லை... நம்மளோட வருங்கால சந்ததிக்கு தான் நட்டம்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X