ஊழலை ஒழிக்க கசப்பு மருந்து: பிரதமர்

Updated : நவ 20, 2018 | Added : நவ 20, 2018 | கருத்துகள் (99)
Advertisement
Demonetization,PM Modi, Black money, Madhya Pradesh election 2018, ரூபாய் நோட்டு வாபஸ், பிரதமர் மோடி, காங்கிரஸ்,கருப்பு பணம், கசப்பு மருந்து, முத்ரா யோஜனா, மத்திய பிரதேச தேர்தல் 2018, பா.ஜ.,காங்கிரஸ், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், பாரதிய ஜனதா , 
 Prime Minister Modi, Congress,
 bitterness, mudra yojana, Madhya Pradesh election , BJP, Congress, chief minister Shivraj Singh Chouhan, Bharatiya Janata,

ஜபுவா: நாட்டில் அடிவேர் வரை ஊடுருவியுள்ள ஊழலை ஒழிக்கவும், கருப்பு பணத்தை வங்கி நடைமுறைக்கு கொண்டு வரவும், ரூபாய் நோட்டு வாபஸ் என்ற கசப்பு மருந்தை பயன்படுத்தியதாக பிரதமர் மோடி கூறினார்.


4 ஆண்டில்

மத்திய பிரதேச மாநிலத்தில் ஜபுவா என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது: பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் 14 கோடி பேருக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. காங்கிரசால் 10 ஆண்டுகளாக செய்ய முடியாததை, பா.ஜ., 4 ஆண்டில் செய்து முடித்துள்ளது.


தாரக மந்திரம்மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியின் போது மக்களின் நிலை பற்றி அனைவரும் சிந்திக்க வேண்டும். மக்கள் நலன்கள் பற்றி சிந்திக்காத அரசு தான் இங்கு இருந்தது. 55 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் காலத்தில் 1,500 பள்ளிகள் மட்டுமே கட்டப்பட்டன. ஆனால், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், தனது 15 ஆண்டு ஆட்சியில் 4 ஆயிரம் பள்ளிகள் கட்டி கொடுத்துள்ளார். ஆண்கள், பெண்களுக்கு கல்வி, இளைஞர்களுக்கு வருமானம், விவசாயிகளுக்கு நீர்ப்பாசன வசதி , முதியவர்களுக்கு மருத்துவம் ஆகியவற்றை அளிப்பதே எங்களின் தாரக மந்திரம்.
கனவு


கர்நாடகாவில், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வோம் என காங்கிரஸ் கூறியது. ஆனால், அவர்களை மிரட்டி சிறைக்கு அனுப்புகிறது. 2022க்குள் விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்குவதே மத்திய அரசின் லட்சியம். 2022க்குள் நாட்டில் அனைவருக்கும் குடியிருப்புகள் வழங்குவதே எனது கனவு. இதுவரை 1.25 கோடி பேருக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (99)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.Navarajan - Coimbatore ,இந்தியா
21-நவ-201800:14:49 IST Report Abuse
A.Navarajan சில்லறையாக ( 1000 ,500 ) இருந்த கருப்பு பணத்தை வெள்ளையாக்க உதவியது மட்டுமல்லாமல், இப்போது இன்னும் வசதியாக 2000 ரூபாய்களாக கருப்பு பணம் மாறி உள்ளதே உண்மை. வெட்கமும், வேதனையும் பட வேண்டிய விஷயம். மக்கள் யாரும் மறக்க போவதும் இல்லை மன்னிக்கப் போவதும் இல்லை.
Rate this:
Share this comment
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
21-நவ-201809:32:36 IST Report Abuse
Chowkidar NandaIndiaஅடடா, சாருக்கு நிறைய நஷ்டம் போலயே. சாரிடம் நிறைய நோட்டுகள் இருந்தது மோடிஜிக்கு தெரியாமல் போயிட்டது. போகட்டும். மன்னித்து விடுங்கள் ஐயா....
Rate this:
Share this comment
Cancel
Gnanam - Nagercoil,இந்தியா
20-நவ-201821:19:03 IST Report Abuse
Gnanam நமது முன்னாள் மன்னர்களுக்கு வழங்கிவந்த கவ்ரவ மான்யம் நிறுத்தப்பட்டுவிட்டது. ஆனால் இன்றிய மந்திரிகள், பாராளுமன்ற, மற்றும் சட்டசபை உறுப்பினர்களின் ஊதியம், மற்றும் படி விவரங்களை பார்க்கும்போது, மன்னர்களே பரவாயில்லை என்று தோன்றுகிறது. ஊதியம் எதிர்பார்க்காத தன்னலமற்ற அரசியல் தலைவர்கள் நமக்கு கிடைப்பார்களா? எப்போது அந்த ராமராஜ்யம் வரும்?
Rate this:
Share this comment
Cancel
Saravanan stalin - Kuwait city,குவைத்
20-நவ-201821:18:32 IST Report Abuse
Saravanan stalin வெட்கக்கேடான பேச்சு .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X