அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வர் பதில் சொல்ல வேண்டும்: ஸ்டாலின்

Added : நவ 20, 2018 | கருத்துகள் (16)
Advertisement
ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி, கஜா புயல்,  எடப்பாடி பழனிசாமி, கனமழை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தென்னை மரங்கள், வாழை மரங்கள், திமுக, DMK, Stalin, Chief Minister Palanisamy, Gaja Storm,  Edappadi Palanisamy, Heavy rain, Chief Minister Edappadi Palanisamy, Coconut trees, Banana trees,


சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலின் கூறியதாவது: மக்களின் குற்றச்சாட்டுக்கு முதலில் முதல்வர் பதில் சொல்லட்டும். பிறகு நான் சொல்கிறேன்.

புயல் காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர். வீடுகள் சேதமடைந்துள்ளன. தென்னை, வாழை மரங்கள் நாசமடைந்துள்ளன. அந்த மாவட்ட மக்கள் உணவின்றி, இருக்க இடமின்றி, குடிக்க தண்ணீரின்றி, நடுத்தெருவில் நிற்கும் கொடுமை நடந்து வருகிறது.

அங்கு முதல்வர் உடனடியாக சென்றிருக்க வேண்டும். அதனை தவிர்த்து விட்டு, சேலத்தில் ஆடம்பரமாக அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு ஏன் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லவில்லை என மீடியா, அரசியல் கட்சி தலைவர்கள், மக்கள் எழுப்பிய கேள்விக்கு பயந்து 5 நாட்களுக்கு பின் எடப்பாடி இன்று பறப்பட்டார்.

குறிப்பிட்ட 2 அல்லது 3 இடங்களுக்கு அமைச்சர்கள், ஆளுங்கட்சியினர் புடைசூழ சென்று, நாடகம் நடத்திவிட்டு, ஏற்கனவே தேர்வு செய்து வைத்திருந்த ஆளுங்கட்சியினருக்கு மட்டும் நிவாரணத்தை வழங்கியுள்ளார். கனமழை காரணமாக அவரது பயணம் ரத்து செய்யப்பட்டிருந்தாலும், அங்கேயே தங்கியிருந்து மக்களை சந்தித்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முன்னதாக அவர் வெளியிட்ட அறிக்கையில், அமைச்சர்கள், ஆளுங்கட்சி எம்எல்ஏக்களை மக்கள் விரட்டுவதால், முதல்வர் வான்வெளி பயணத்தை தேர்வு செய்துள்ளார். சில கி.மீ., தூரமே காரில் பயணம் செய்துள்ளார். அந்த சாலையில் பொது மக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டது.

முதல்வருக்கு பல அடுக்கு தரப்பட்டுள்ளது. இதனை தாண்டி பொது மக்கள் எப்படி கோரிக்கை வைக்க முடியும். மக்களிடம் நேரில் குறைகேட்பது தான் குறைகேட்பு பயணமாக இருக்க முடியும். ஹெலிகாப்டரில் செல்வது கண்துடைப்பு பயணம். இதற்கு முதல்வர் வராமலேயே இருந்திருக்கலாம் என்பது மக்களின் எண்ணம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kanthi - Dallas,யூ.எஸ்.ஏ
20-நவ-201819:58:12 IST Report Abuse
Kanthi முதல்வர் பதில் சொல்ல வேண்டும்: ஸ்டாலின் | ஸ்டாலின் வாயை மூடவேண்டும் : முதல்வர்
Rate this:
Share this comment
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
20-நவ-201818:33:16 IST Report Abuse
வெகுளி அட்டக்கத்திய கூட்டிக்கிட்டு போகாம தனியா புலம்ப வச்சுட்டியே தல......
Rate this:
Share this comment
Cancel
Gopi - Chennai,இந்தியா
20-நவ-201818:00:35 IST Report Abuse
Gopi இருவரும் பதில் சொல்லாமல். தற்பொழுது பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தங்களின் கட்சி தொண்டர்களை (குண்டர்களை அல்ல ) அனுப்பி மக்களுக்கு தேவையான எல்லா சௌகரியங்களை செய்ய சொல்லுங்கள். ஒருவகையில் மாறி மாற்றி ஆட்சி செய்த நீங்களும் உங்கள் பிணம் தின்னி அரசியல் பிரமுகர்களும் அவரவர் ஆட்சி காலத்தில் மக்களின் ரத்தத்தை உறிஞ்சி கொழுத்தவர்களே. ஒருமுறை ஹார்லிக்ஸ் பாட்டில் திருடியதை போன்றும், நிவாரண பொருட்களில் அம்மா ஸ்டிக்கர் ஒட்டியதை போன்றும் தரம் தாழ்ந்து நடவாமல் அனைத்து வகை உதவிகளையும் செய்து நேர்பெயர் எடுக்க வழிவகை பாருங்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X