ஜாபுவா: ''கரையான்களைப் போல, அனைத்து துறைகளிலும், அடிவேர் வரை பீடித்துள்ள ஊழலை ஒழிப்பதற்கான, கசப்பான மருந்து தான், செல்லாத ரூபாய் நோட்டு திட்டம்,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
மத்திய பிரதேசத்தில், சட்டசபைக்கு, வரும்,
28ல் தேர்தல் நடக்க உள்ள நிலையில், நேற்று நடந்த பிரசார கூட்டத்தில்,
பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:கரையான்களை அழிக்க, வீரியம் மிகுந்த
மருந்தை பயன்படுத்துகிறோம்.
அதுபோல, நாடு முழுவதும் பரவியிருந்த ஊழலை ஒழிப்பதற்காக அறிவிக்கப்பட்டதே, செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு.இதுவரை பணத்தை பதுக்கி வைத்தவர்கள், தற்போது, அதை வங்கியில் சேர்த்துள்ளனர்; அதற்கு வரி செலுத்த வைத்து உள்ளோம். இந்தப் பணம், ஏழை, மக்களுக்கான திட்டத்துக்கு பயன்படுத்தப்படுகிறது.
'விவசாய கடன்களை தள்ளுபடி செய்வோம்' என,
காங்கிரஸ் கூறியுள்ளதை பார்த்து,ஏமாந்து விட வேண்டாம். சமீபத்தில், கர்நாடகாவில் நடந்த தேர்தலில் கூட, கடன் தள்ளுபடி
செய்வ தாகக் கூறினர். ஆனால், விவசாயிகளை சிறைக்கு அனுப்பி வருகின்றனர்.
கடந்த, 2008ம் ஆண்டில் கூட, கடன் தள்ளுபடி செய்வதாக பொய்யான வாக்குறுதிகளை அளித்து,மக்களை ஏமாற்றிய கட்சி, காங்கிரஸ். விவசாய கடன் தள்ளுபடி என்ற பெயரில், காங்., அரசு மோசடி செய்ததாக, சி.ஏ.ஜி., எனப்படும், மத்திய கணக்கு தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தில் மட்டும், 15 நீர்ப்பாசன திட்டங்களை, முந்தைய காங்கிரஸ் அரசு, முடக்கி வைத்திருந்தது. பா.ஜ., ஆட்சியில் தான், இவை நிறைவேற்றப்பட்டன.அதே நேரத்தில், 2022க்குள் விவசாயிகளின் வருமா னத்தை இரட்டிப்பாக்கும் முயற்சியில், பா.ஜ., அரசு ஈடுபட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (35)
Reply
Reply
Reply