சென்னை : 'புயல் பாதித்த இடங்களை பார்வை யிட, முதல்வர் பழனிசாமி, ஹெலிகாப்டரில் சென்றது, கண்துடைப்பு பயணம்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:அமைச்சர்களையும், அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ.,க்களையும் பார்த்தாலே, டெல்டா மக்கள் விரட்டுகின்றனர். அதனால் தான், கார் பயணம் செல்லாமல், வான் பயணத்தைத் தேர்ந்தெடுத்தார்,
முதல்வர். அவரிடம் கோரிக்கை மனு தரப் போகிறேன் என சொல்லிய, பொன்னவராயன் கோட்டை, வீரசேனன் என்ற விவசாயியை,
அநியாயமாக கைது செய்துள்ளனர். இந்த மிரட்டல் நடவடிக்கை, மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது. முதல்வர் பழனிசாமி, ஹெலிகாப்டரில் சென்றது,
கண்துடைப்பு பயணம். இதற்கு, முதல்வர் வராமலேயே இருந்திருக்கலாம் என்பது
தான், மக்களின் எண்ணம்.புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடாமலேயே, நிவாரண பணிகளுக்கு, 1,000 கோடி ரூபாய் அறிவித்துள்ளார்.
கலெக்டர்கள், வருவாய் துறை அதிகாரிகளிடம், தனித்தனியாக அறிக்கை பெற்று, சேத மதிப்பை முழுமையாக அறிந்த பின், முழுமையான நிதி அறிவிப்பை செய்ய வேண்டும்.மத்திய அரசின் கவனத்துக்கும் எடுத்துச் செல்ல வேண்டும். புயல் பாதித்த பகுதிகளில், முதல்வர், அமைச்சர்கள் தங்கி, சேதங்களை முழுமையாக உணரவேண்டும். இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,
அறிவாலயத்தில், ஸ்டாலின் அளித்த பேட்டி:மக்கள் சொல்லும்
குற்றச்சாட்டுக்கு, முதல்வர் பழனிசாமி பதில் சொல்லட்டும். பின், என் மீது
சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு, பதில்
சொல்கிறேன். டெல்டா மாவட்டங்களில், மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டு இருக்கிறது.
எட்டு மாவட்ட மக்கள், உணவு, தண்ணீர் இன்றி, வாழ இடமின்றி, நடுத்தெருவில் நிற் கும் கொடுமை உள்ளது. மழையை காரணம் காட்டி,முதல்வர், சென்னை திரும்பி விட்டார். மழை காரணத்தை ஏற்கிறேன். ஆனாலும், அங்கேயே தங்கி, அவர் பார்வையிட்டிருக்க வேண்டும். இவ்வாறு, ஸ்டாலின் கூறினார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (40)
Reply
Reply
Reply