காஷ்மீரில் கூட்டணி அமைத்து, ஆட்சியை பிடிக்க காங்., முடிவு| Dinamalar

காஷ்மீரில் கூட்டணி அமைத்து, ஆட்சியை பிடிக்க காங்., முடிவு

Added : நவ 21, 2018 | கருத்துகள் (8)
Advertisement
Mehbooba Mufti, Farooq Abdullah, Congress alliance, Kashmir,காஷ்மீர், காங்கிரஸ் கூட்டணி, மெகபூபா முப்தி, பா.ஜ., காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி,  பரூக் அப்துல்லா ,காங்.,  ஜம்மு காஷ்மீர், தேசிய மாநாட்டு கட்சி , 
  BJP, former Chief Minister of Kashmir, Mehbooba Mufti, Jammu Kashmir, National Conference Party,

ஜம்மு : காஷ்மீரில் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியுடன் கூட்டணி அமைத்து, ஆட்சி அமைக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

இந்த கூட்டணிக்கு பரூக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டு கட்சி வெளியில் இருந்து ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளது. 3 கட்சிகளின் தலைவர்களும் இன்று கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரவும் முடிவு செய்துள்ளனர்.

காஷ்மீரில் தற்போது அமலில் உள்ள ஜனாதிபதி ஆட்சி டிசம்பர் 19 ம் தேதியுடன் முடிவடைகிறது. இருப்பினும் 87 உறுப்பினர்களை கொண்ட சட்டசபை இதுவரை கலைக்கப்படவில்லை. இதற்கு முன் 2002 முதல் 2007 வரை மெகபூபாவின் மக்கள் ஜனநாயக கட்சியும், காங்கிரசும் கூட்டணி அமைத்து காஷ்மீரில் ஆட்சி நடத்தியது குறிப்பிடத்தக்கது. தற்போது மக்கள் ஜனநாயக கட்சிக்கு 28 எம்எல்ஏ.,க்களும், தேசிய மாநாட்டு கட்சிக்கு 15 எம்எல்ஏ.,க்களும், காங்கிரசுக்கு 12 எம்எல்ஏ.,க்களும் உள்ளனர். ஆட்சி அமைக்க போதிய பெரும்பான்மை உள்ளதால், ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளனர். பா.ஜ.,வுக்கு 25 எம்எல்ஏ.,க்கள் மட்டுமே உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-நவ-201815:25:25 IST Report Abuse
நக்கல் கம்முனிஸ்டுகள் கடைசி காலத்தில் இன்று யாருடனும் கூட்டு பொறியல் வெக்க தயார், அவர்கள் தீவிரவாதிகளாக இருந்தாலும். ஏனென்றால் அவர்களுக்கு இந்த தேசத்தின் மீது சிறிதும் அக்கறை இல்லை.. மக்கள் அவர்களை புறக்கணித்து விட்டார்கள்.. அதே நிலைதான் இன்று காங்ரெசுக்கு... சீக்கிரம் காணாமல் போவார்கள்..
Rate this:
Share this comment
Cancel
தெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர் - கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
21-நவ-201813:14:07 IST Report Abuse
தெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர் நேற்று வரை மெஹபூபா பாஜக வின் கைக்கூலி. இன்று முதல் அவர் ஒரு செக்யுலரிஸ்ட். வாருங்கள் மார்கத்திய சகோதரர்களே கூவுங்கள் ...இனிமே காஸ்மீரில் நடக்கும் எல்லா பிரச்சினைகளுக்கும் காங்கிரசை திட்டலாமா ? இல்லை அதற்கும் மோடியின் மத்திய அரசுதான் காரணம் என்று சொல்வீர்களா ?
Rate this:
Share this comment
Cancel
Rpalnivelu - Bangalorw,இந்தியா
21-நவ-201812:56:03 IST Report Abuse
Rpalnivelu கான் கிராஸ், தேசவிரோத சக்திகளுடன் கைகோர்ப்பதில் ஆச்சிரியமில்லை. இப்போதாவது நம்ம குருமாவுக்கு புரியுமா யார் பலசாலியென்று?
Rate this:
Share this comment
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
21-நவ-201813:23:11 IST Report Abuse
Ab Cdஇதே கட்சிகளுடன் பிஜேபி கூட்டணி வைத்திருந்த போது அது தேச விரோத கடசியாக தெரியவில்லையா?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X