பொது செய்தி

இந்தியா

சபரிமலை: பாஸ்போர்ட் ரத்து எச்சரிக்கை

Added : நவ 21, 2018 | கருத்துகள் (67)
Advertisement
Sabarimala, NRI, Police Commissioner Prakash,Social networks, சபரிமலை, வெளிநாட்டு வாழ் இந்தியர், சமூக வலைதளங்கள், பாஸ்போர்ட் ரத்து, திருவனந்தபுரம் போலீஸ் கமிஷனர், சபரிமலை பிரச்னை, சபரிமலை வன்முறை, போலீஸ் கமிஷனர் பிரகாஷ் , கேரளா போலீஸ், சபரிமலை போராட்டம் , சபரிமலை விவகாரம் , 
foreign resident Indian, passport cancel,
Thiruvananthapuram Police Commissioner, Sabarimala Violence, Kerala Police, Sabarimala Protest, Sabarimala affair,

திருவனந்தபுரம்: சபரிமலை பிரச்னையை தூண்டும் வகையில் சமூக வலை தளங்களில் கருத்துக்களை வெளியிட்டால், வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்படும் என திருவனந்தபுரம் போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


ஜாமினில் வெளியே வர முடியாது


இது குறித்து திருவனந்தபுரம் போலீஸ் கமிஷனர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

சபரிமலை பிரச்னையை தூண்டும் வகையில், வன்முறையில் ஈடுபடும்படி கேட்டும் சமூக வலை தளங்களில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களால், கருத்துக்களும், ' வாய்ஸ் மெசேஜ்'களும் வெளியிடப்பட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இது போன்ற கருத்துக்களை வெளியிடுபவர்கள் மீது ஜாமினில் வெளியே வர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும். வெளிநாடுகளில் இருந்து இதுபோன்ற கருத்துக்களை வெளியிடுபவர்களின் விவரங்களை சைபர் பிரிவு போலீசார் திரட்டி வருகின்றனர். அவதூறு கருத்துக்களை வெளியிடும் நபர்களின் பாஸ்போர்ட்கள் ரத்து செய்யப்படும், அவர்கள் உடனடியாக தாயகம் திரும்ப வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


போலீஸ் கமிஷனர் பேட்டி


இது குறித்து திருவனந்தபுரம் போலீஸ் கமிஷனர் பிரகாஷிடம் கேட்ட போது, ' சபரிமலை பிரச்னை குறித்து அவதூறு தகவல்களை வெளியிடுபவர்களை தடுக்கவே அந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து ஏராளமான அவதூறு கருத்துக்கள் சமூக வலை தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. எனவே, டி.ஜி.பி.,யின் சுற்றறிக்கையின் அடிப்படையில், பாஸ்போர்ட் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு கிரிமினல் வழக்கு. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தான் அப்படி ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (67)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
sumutha - chennai - Chennai,இந்தியா
22-நவ-201805:36:53 IST Report Abuse
sumutha - chennai ஆபீசர் அப்படியே இப்படியும் யோசிங்க இருமுடி கட்டி வர்றவங்களையும் சரணகோஷம் சொல்பவர்களையும் ஐயப்பன் மணிகண்டன் என்று பெயர் வைத்திருப்போரையும் நாடு கடத்த முதல்வருக்கு பரிந்துரை செய்யுங்கள். என்ன ஒரு புத்திசாலித்தனமான யோசனை உங்களுடையது.
Rate this:
Share this comment
Cancel
S Rama(samy)murthy - karaikudi,இந்தியா
21-நவ-201821:31:56 IST Report Abuse
S Rama(samy)murthy LDF அரசை முறைப்படி மத்திய அரசு கலைக்க வேண்டிய நேரம் கனிந்து விட்டது .சுபராம காரைக்குடி
Rate this:
Share this comment
Cancel
ravichs - Tiruchi,இந்தியா
21-நவ-201818:59:10 IST Report Abuse
ravichs மாநில அரசால் எப்படி கடவுசீட்டை றது செய்ய முடியும்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X