அரசியல் செய்தி

தமிழ்நாடு

கேட்கிற விதத்தில் கேட்டால் பணம் கிடைக்கும்: துரைமுருகன்

Added : நவ 21, 2018 | கருத்துகள் (11)
Advertisement
 கேட்கிற விதத்தில் கேட்டால்  பணம் கிடைக்கும்: துரைமுருகன்

சென்னை, ''மத்திய அரசிடம், கேட்கிற விதத்தில் கேட்டால், நிதி வரும். நெளிவு, சுழிவு காட்டினால், மத்திய அரசு பணியாது,'' என, தி.மு.க., பொருளாளர், துரைமுருகன் தெரிவித்தார்.'தி.மு.க., அறக்கட்டளை சார்பில், புயல் நிவாரண பணிகளுக்கு, ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும்' என, அக்கட்சியின் தலைவர், ஸ்டாலின் அறிவித்திருந்தார்.அதன்படி, பொருளாளர் துரைமுருகன், எம்.எல்.ஏ., சேகர்பாபு ஆகியோர், நேற்று முதல்வர் பழனிசாமியை, அவரது இல்லத்தில் சந்தித்தனர். தி.மு.க., அறக்கட்டளை சார்பில், 1 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினர்.பின், துரைமுருகன் அளித்த பேட்டி:அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற, நல்லெண்ண அடிப்படையில், முதல்வர் வீடு தேடி சென்று, 1கோடி ரூபாய் வழங்கி உள்ளோம். தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்களின், ஒரு மாத சம்பளத்தை வழங்க உள்ளோம்.அரசு நடவடிக்கைகளுக்கு, உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதற்காக, மாவட்ட செயலர்களுக்கு, ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளார்.

பாதிப்பு விஷயத்தில், அரசியல் கூடாது என, தி.மு.க., கருதுகிறது. எதிர்க்கட்சிகள், போராட்டத்தை துாண்டி விடுவதாக கூறும் அமைச்சர்களுக்கு, போதிய அனுபவம் இல்லை. அரசியல் தெளிவும் இல்லை. அவர்கள், இதிலும் அரசியல் செய்கின்றனர்.கேட்கிற விதத்தில், மத்திய அரசிடம் கேட்டால், நிதி வரும். கேட்கிறபோது, அதிகார தோரணை இருக்க வேண்டும்; தைரியம் இருக்க வேண்டும். 'கொடுக்கிறாயா, இல்லையா...' என்று, கேட்க வேண்டும். நெளிவு, சுழிவு காட்டினால், மத்திய அரசு பணியாது. முதல்வருக்கு வீரம் இருக்கிறதா என்று பார்ப்போம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
narayanan iyer - chennai,இந்தியா
22-நவ-201816:33:34 IST Report Abuse
narayanan iyer இந்த துரைமுருகன் தி மு க வின் பொருளாராக வந்தவுடன் கட்சிக்கு நிதி இல்லை வசதிபடைத்தவர்கள் வாரி வழங்கவேண்டும் என்றார் . நான் கேட்கிறேன் இவர் சொல்கிறபடி கேட்கிற விதத்தில் கேட்டுத்தான் நிதியை திரட்டி ஒரு கோடி கொடுத்தார்களா? ஏன் ஒரு நூறு கோடி கொடுக்கலாமே? ஒரு ஐம்பது வருடம் கட்சியும் ஆட்சியையும் தமிழ்நாட்டில் நடத்தி சேர்த்தப்பணத்தில் நூறுகோடி ஒன்று பெரிய காசே இல்லை துரைமுருகன் அவர்களே
Rate this:
Share this comment
Cancel
rajan. - kerala,இந்தியா
22-நவ-201812:36:26 IST Report Abuse
rajan.  எப்படி கேட்கணுமாம் உங்க தலை சொன்ன மாதிரி அள்ளி எடுத்து கிள்ளி கொடுக்கிற பாணியோ.
Rate this:
Share this comment
Cancel
Sadagopan Varadhachari - Hosur,இந்தியா
22-நவ-201811:16:15 IST Report Abuse
Sadagopan Varadhachari எப்படி அந்த பிரியாணி கடையில் பிரியாணி வாங்கியதை போலவா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X