என்னை யாரும் ரிமோட்டால் இயக்கவில்லை : மன்மோகன் சிங்

Added : நவ 22, 2018 | கருத்துகள் (132)
Advertisement
Manmohan Singh,Madhya Pradesh election 2018, PM Modi, Rafale Deal ,மன்மோகன் சிங், ரிமோட் கன்ட்ரோல், ரபேல் ஊழல்,  பிரதமர் மோடி, மத்தியப் பிரதேசம் தேர்தல், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் , சோனியா, மத்தியப் பிரதேச தேர்தல் பிரசாரம், ரபேல் விவகாரம், மத்தியப் பிரதேசம் தேர்தல் 2018,காங்கிரஸ், நரேந்திர மோடி, ரபேல் ஒப்பந்தம், ம.பி.,மோடி, ரபேல்,
 Modi, Remote Control, Rafale, former Prime Minister Manmohan Singh, Sonia, Madhya Pradesh election campaign, Madhya Pradesh election, Rafale affair, Congress, Narendra Modi, Prime Minister Modi, Rafale Agreement, Rafale Corruption, MP, Rafale Deal Controversy,

இந்தூர் : நான் பிரதமராக இருந்த போது என்னை யாரும் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கவில்லை என முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ம.பி., தேர்தல் பிரசாரத்தில் பேசிய போது, சோனியாவின் கைப்பாவையாக மன்மோகன்சிங் அரசு இருந்ததாக பிரதமர் மோடி விமர்சித்திருந்தார். தற்போது மத்தியப் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் மன்மோகன்சிங் இந்தூரில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், எனது தலைமையிலான அரசை யாரும் பின்னணியில் இருந்து ரிமோர்ட் மூலம் இயக்கவில்லை. காங்கிரஸ் கட்சியும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும் இணைந்து ஒத்திசைவுடன் செயல்பட்டன. அரசுக்கும் கட்சிக்கும் கருத்து வேறுபாடு இல்லை என்பதால் தான் அது வெற்றிகரமான அரசாக இருந்தது.

ரபேல் விவகாரத்தில் கூட்டு பார்லி., குழு விசாரணை நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை மோடி அரசு தொடர்ந்து நிராகரித்து வருகிறது. இதிலிருந்தே அந்த ஒப்பந்தத்தில் ஏதோ முறைகேடு இருப்பது தெரிகிறது. மோடி ஆட்சியில் பார்லி.,யும், சிபிஐயும் தொடர்ந்து அவமதிக்கப்படுகிறது. ஜனநாயகம் பலவீனமடைந்துள்ளது. சட்ட திட்டங்கள் மீதான இந்த தாக்குதல் சூழலை மாற்றவில்லை என்றால் நமது தலைமுறையை வரலாறு மன்னிக்காது என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (132)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
29-நவ-201806:06:42 IST Report Abuse
Bhaskaran எங்க தமிழ்நாட்டிலிருக்கும் நடுநிலையாளர்கள் யாரும் உங்க கடைஞ்செடுத்த பொய்யை நம்பவேமாட்டாங்க ஐயா இது உங்களுக்கே நியாயமாகப் படுதா
Rate this:
Share this comment
Cancel
Sitaraman Munisamy - SALEM,இந்தியா
23-நவ-201810:18:57 IST Report Abuse
Sitaraman Munisamy இதுதான் எங்க அப்பன் குதிருக்குள் இல்லை என்பது. நீங்கள் ஒரு தலை ஆடி பொம்மை என்பது இந்த உலகிற்கே தெரியும். நீங்கள் பிரதமராக இருந்தபோது எதற்காவது வை திறந்து பேசியதுண்டா.ஐந்து ஆண்டுகளை நரசிம்ம ராவ் போல கடந்து விட்டர்கள் மக்களுக்கு உங்களால் என்ன நன்மை. சேவை வரியை கொண்டு வந்தது, ஆதார், GSt கு அஸ்திவாரம் போட்டது. பில்லியர் சுழி போட்டது நீங்கள் அவதிப்படுவது நாங்கள்.நீங்கள் ஏழாம் ஒரு மெத்த படித்த மேதாவிகள்.
Rate this:
Share this comment
Cancel
23-நவ-201805:59:07 IST Report Abuse
 SARKAR சோனியா ரிமோட்டால் இவரை இயக்கினார். அதுபோல தற்போது மோடியை RSS இயக்குகிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X