கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தமிழக அரசு, உயர் நீதிமன்றம்,குட்டு!

சென்னை: இலவச ரேஷன் அரிசி விவகாரத்தில், தமிழக அரசுக்கு, 'குட்டு' வைத்த, சென்னை உயர் நீதிமன்றம், இது தொடர்பாக, காரசார கேள்விகளை எழுப்பி உள்ளது. 'அரசியல் ஆதாயங்களுக்காக, இலவசங்களை அளித்து, மக்களை கையேந்த வைப்பதா' எனவும், கடும் கண்டனம் தெரிவித்தது.
வேலுார் மாவட்டத்தைச் சேர்ந்த, அமர்நாத் என்பவர், ரேஷன் அரிசி கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், அத்தியாவசியப் பொருட்கள் கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்டார். இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், அமர்நாத் சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கு பதிவு


மனுவை விசாரித்த, நீதிபதி கிருபாகரன் தலைமையிலான, 'பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:ரயில் பெட்டிகளில், வெளிமாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக, செய்திகள் வருகின்றன. அதிகாரிகளின் துணை இல்லாமல், இது நடக்காது. ஆனால், சிறிய அளவில் அரிசி எடுத்துச் செல்வோரைத் தான், அதிகாரிகள் குறி வைக்கின்றனர்.இலவச அரிசி, எத்தனை குடும்ப அட்டைதாரர்களுக்கு, எவ்வளவு வழங்கப்படுகிறது;
பொது வினியோகத்துக்காக, ஆண்டுதோறும், இலவச அரிசி எவ்வளவு ஒதுக்கப்படுகிறது; இலவச அரிசியை திசை திருப்பி விடும் சம்பவத்தில், எத்தனை அதிகாரிகளுக்கு எதிராக, வழக்குப் பதிவு

செய்யப்பட்டுள்ளது?எந்த அடிப்படையில், இலவச அரிசிவழங்கப்படுகிறது; இந்த திட்டத்தின் கீழ் வருவோருக்கு, என்ன அளவுகோல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது; இந்த விபரங்களை, அரசு தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்த வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்துாஸ் அடங்கிய, டிவிஷன் பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, பதில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

முறைகேடு


பொது வினியோக திட்டத்தில் நடக்கும் முறைகேடு தொடர்பாக, ௪௪௨ பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக, மனுவில் கூறப்பட்டு உள்ளது. குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டோர், கீழ்மட்ட அதிகாரிகளா அல்லது உயர்மட்ட அதிகாரிகளா என்பது தெளிவாக இல்லை.குண்டர் சட்டத்தின் கீழ், எத்தனை அதிகாரிகள் கைது

செய்யப்பட்டனர் என்பதை, ஆண்டு வாரியாக, வகித்த பதவி விபரங்களுடன் அளிக்க வேண்டும்.
அனைவருக்கும் இலவச அரிசி வழங்கப் படுவதாக வும், 2017 - 18ம் ஆண்டில், இலவச அரிசிக்காக, 2,110 கோடி ரூபாய் செலவழிக் கப்பட்டதாகவும் கூறப் பட்டுள்ளது. இவ்வளவு பெரிய தொகையை, உள்கட்டமைப்பு வசதி உள்ளிட்ட விஷயங்களுக்கு செலவிட வேண்டும்.உண்மையில், பொருளாதார ரீதியில் பின்தங்கிய, ஏழை எளியோருக்கு, இலவச அரிசி வழங்குவதை, நாங்கள் எதிர்க்கவில்லை. ஏழை எளியோராக இல்லாதோரும், வறுமை கோட்டுக்கு கீழ் அல்லாதோரும், பலன் அடைந்தால், அது சரியாக இருக்காது.
எனவே, வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு மட்டுமே, இலவச அரிசி வழங்கப்பட வேண்டும்.கீழ்கண்ட விபரங்களை, அரசு அளிக்க வேண்டும்:
* வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களை அடையாளம் காண, ஆய்வு ஏதும் நடத்தப்பட்டதா?

* அவ்வாறு நடத்தப்பட்டிருந்தால், எத்தனை குடும்பங்கள், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளன?
* அவர்களுக்கு மட்டுமே இலவச அரிசி வழங்கப் பட்டால், எவ்வளவு அரிசி தேவைப்படும்; அதன் மதிப்பு என்ன?ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் இலவச அரிசி திட்டம் உள்ளதால், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளோருக்கு மட்டுமே என, கட்டுப்படுத்த வேண்டிய தருணம் இது. திட்டத்தில் மாற்றம் ஏற்படுத்துவது குறித்து, அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிப்பதாக, அட்வகேட் ஜெனரல் கூறியுள்ளார்.

எதிர்பார்ப்பு


அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள், ஏழை எளியோருக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும். அரசியல் ஆதாயங்களுக்காக, அடுத் தடுத்து வந்த அரசுகள், அனைவருக்கும் என, விரிவுபடுத்தி விட்டது. மக்கள் மன நிலையும் மாறி, அரசிடம் இருந்து அனைத்தையும் இலவசமாக பெறுவது என்கிற, எதிர்பார்ப்பு வந்து விட்டது.
அதனால், அவர்கள் சோம்பேறிகளாக ஆகி, சிறு வேலைக்கு கூட, வட மாநில தொழிலாளிகளை இறக்குமதி செய்யும் நிலை ஏற்பட்டு விட்டது. பொது வினியோகத்துக்கான, 3,000 மூட்டை அரிசி கெட்டு விட்டதாக, தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்தும், தமிழ்நாடு உணவு பொருள் வாணிப கழகம் அறிக்கை அளிக்க வேண்டும்.விசாரணை, வரும், 30ம் தேதிக்கு தள்ளி வைக்கப் படுகிறது.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


Advertisement

வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
23-நவ-201822:53:46 IST Report Abuse

Girijaநீதிமன்றத்தின் இதுபோன்ற தட்டி கேட்க்கும் விதத்தைதான் இத்தனை நாளும் மக்களை எதிர்பார்த்தார்கள், இது இனி வளரும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால நடப்பவைகளுக்கு நீதிமன்றங்களும் ஒரு காரணம் . வீட்டையும் கொளுத்தி தண்ணீரையும் ஊற்றி அணைக்கும் செயல் தான் நீதி மன்றம் செயகிறது நாட்டில் கல்வியும் , வேலையும் வருவாய் அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதை மண்டல் கமிஷன் உருவாக்கும் போது ஏன் தடுக்கவில்லை , சொல்லவில்லை? . கவித்துறையில் களவாணி தந்தைகள் உருவாவதை தடுக்க வில்லை . கல்வித்துறையில் தனியார் நுழைவதை தடுக்கவில்லை கல்வித்துறையில் இருக்கும் களவாணி தந்தைகளை போலி கல்லூரி அதுவும் மருத்துவ கல்லூரி நடத்துபவரும் இதில் அடக்கம் என்று தெரிந்தும் தாமாக முன்வந்து கோர்ட் வழக்கு பதிவு செய்து விசாரித்திருக்கிறதா என்றால் இல்லை கார்த்திக் சிதம்பரம் , 2G வழக்குகள் நீர்த்து போனதற்கு நீதிமன்றத்தின் இடையூறுகளே காரணம் சபரிமலை இதில் கோர்ட் தலையிட்டு இருக்கவேண்டுமா? "இது மாதிரி நடுவில் சில பக்கங்களை காணோம்" என்பது மாதிரி நீதிமன்றங்கள் செயல்பட்டுவிட்டு இப்போது தான் மக்களை கையேந்த வைப்பதா என்று அரசை நோக்கி கேள்வி கேட்பது வினோதம் பதினெட்டு எம் எல் ஏ வழக்கில் தீர்ப்பு எதனை வருடம் கொடுத்து சொன்னீர்கள்? இதே அக்கறை உங்களுக்கு மக்களை மீது இருந்தால், தகுதி நீக்கம் செய்த எம் எல் ஏ க்களுக்கு இனி அரசை எடுத்து ஓட்டெடுப்பில் பங்கு கொள்ள தகுதி இல்லை ஆனால் அவர்கள் தங்கள் பணியை தொடரலாம் என்று சம்மோக அக்கறையுடன் ஏன் மூன்றாம் தீர்ப்பில் யோசனை சொல்லவில்லை? ஒரு சிலர் சரியான நோக்கத்துடன் பொதுநல வழக்குகள் தொடர்ந்தால் கூட அபராதம் விதிக்கின்றீர்கள். சகாயம் அறிக்கையின் மீது எப்போது நடவடிக்கை ? பொன்.மாணிக்கவேலிற்கு இப்படி டார்ச்சர் கொடுத்தால் அவர் என்ன செய்யமுடியும் ? இதுவரை உள்ள அத்தனை விசாரணை கமிஷன்களை உடனே ரத்து செய்ய வேண்டும், இனிமேல் விசாரணை கமிஷன்கள் அமைக்க கூடாது என்று உத்தரவிட்டு கோர்ட்டே விசாரிக்கவேண்டும் . செய்வீர்களா ?

Rate this:
புதிய தமிழ்மைந்தன் - Dindigul India,இந்தியா
23-நவ-201820:45:58 IST Report Abuse

புதிய தமிழ்மைந்தன்அரிசியை இலவசமாக முதன்முதலில் கொடுத்த அந்த மனிதகுல மாணிக்கத்தை அன்றே இந்த நீதிமன்றம் கேட்டிருந்தால் தமிழ்நாடு இருண்ட காலத்திற்கு சென்றிருக்கிறது.............

Rate this:
Dalda - Varanasi,இந்தியா
24-நவ-201800:36:53 IST Report Abuse

Daldaஎந்த திட்டமும் நல்ல நோக்கத்துடன் கொண்டுவர பட்டதே எங்கும் எதிலும் குறுக்கே புகுந்து கொள்ளையடிக்க வழி கோலுபவர்கள் மனித இனத்தில் மலிந்து விட்டதே என்ன செய்ய? தமிழ்நாடு மட்டுமே அல்ல உலகமே இருண்ட காலத்திற்கு சென்றிருக்கிறது.பல நாடுகளிலும் ஊழல் மந்திரி ஜனாதிபதிகளுக்கெதிரான போராட்டங்கள் நடந்து தூக்கியடிக்கப் படுகிறார்களே ...

Rate this:
mohan - chennai,இந்தியா
23-நவ-201818:22:44 IST Report Abuse

mohanமக்களுக்கு எங்கே போச்சு அறிவு....நாமெல்லாம் வெளி நாட்டினருக்கு அடகு வைக்க படுகிறோம்...ஒருத்தருக்கும் தெரிவதில்லை... அரசியல் வாதிகள் ஒன்றும் செய்ய முடியாது... மக்கள் தான் போட்டி போட்டி கொண்டு லஞ்சம் கொடுக்கின்றனர்... மக்கள் லஞ்சம் கொடுப்பதை நிறுத்தி மக்கள் தொகையை கட்டு படுத்தி தன்னால் என்ன செய்ய முடியுமோ அதை செய்தால் நாடு நன்றாக இருக்கும்....

Rate this:
மேலும் 35 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X