காங்கிரசுக்கு அதிகாரம் மட்டுமே முக்கியம்: பிரதமர் தாக்கு

Added : நவ 23, 2018 | கருத்துகள் (48)
Advertisement
Mizoram election, Bharatiya Janata, PM Modi, மோடி, காங்கிரஸ்,பாஜ, மிசோரம் தேர்தல், பிரதமர் மோடி, மோடி தேர்தல் பிரசாரம் , நரேந்திர மோடி, பிரதமர் நரேந்திர மோடி, பாரதிய ஜனதா, மிசோரம், மிசோரம் தேர்தல் பிரசாரம், 
Modi, Congress, BJP,  Prime Minister Modi, Modi election campaign, Narendra Modi, Prime Minister Narendra Modi, Mizoram, Mizoram election campaign,

லுங்லெய்: காங்கிரசுக்கு அதிகாரம் மட்டுமே முக்கியமாக உள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.


கவலையில்லை


மிசோரமின் லுங்லெய் பகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
இந்த பகுதிக்கு வருவது எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும். 4 ஆண்டுகளில் வடகிழக்கு மாநிலங்களுக்கு 27 முறை பயணம் செய்துள்ளேன். வட மாநிலத்தவர் அணியும் உடையை வெளிநாட்டை சேர்ந்தது எனக்கூறி அவமானப்படுத்திய காங்கிரசின் செயலை கண்டு, கோபமும், வருத்தமும் ஏற்பட்டது. உங்களின் நம்பிக்கையும், லட்சியமும் பற்றி காங்கிரசுக்கு கவலையில்லை. அதிகாரம் மட்டுமே காங்கிரசிற்கு முக்கியம். மாநில மக்களை பற்றி கவலைப்படவில்லை.


வாய்ப்பு

காங்கிரசின் பிரித்தாளும் கொள்கையை மக்கள் நன்றாக புரிந்து கொண்டுள்ளனர். இதனால், தான் காங்கிரஸ் ஒரு சில மாநிலங்களுக்குள் சுருங்கியுள்ளது. தற்போது, காங்கிரசின் கலாசாரத்திலிருந்து வெளியேற மிசோரம் மக்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது வடகிழக்கு பிராந்தியம் வளர்ச்சி பெறும்போது, இந்தியாவும் வளர்ச்சி பெறும். வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு பா.ஜ., உறுதிபூண்டுள்ளது. சாலை இணைப்பு, நெடுஞ்சாலை, ரயில்வே, விமானம் மற்றும் நீர்வழிப்போக்குவரத்தில் கவனம் செலுத்தி வருகிறோம். இந்த பிராந்திய வளர்ச்சிக்கு, போக்குவரத்து மூலம் மாற்றம் என்பதே மத்திய அரசின் திட்டம்.


கவலையில்லை


கிழக்கு பகுதிக்காக வேகமாக செயல்பட்டு, இந்த பிராந்தியத்தை வளர்ச்சி பெற செய்துள்ளோம். பந்த், துப்பாக்கி மற்றும் தடுப்புகளை மட்டுமே வடகிழக்கு மாநில மக்கள் அனுபவித்தனர். அமைதி மற்றும் வளர்ச்சிக்காக மத்திய அரசு செயல்படுகிறது. இந்த பகுதியில் ரயில்வே பணிகளின் வளர்ச்சி 3 மடங்கு அதிகரித்துள்ளது. மிசோரமில் காங்கிரசால் மக்கள் பயன்பெறவில்லை. மாநிலத்தை பற்றியும் காங்கிரஸ் கவலைப்படவில்லை.


ஆதரவு தேவை


காங்கிரசின் செயல்பாடு காரணமாக, பல திட்டங்கள் தாமதமாகியது. இதனால், உள்கட்டமைப்பு பாதிக்கப்பட்டது. ஆனால், அண்டை மாநிலங்கள் சிறந்த சாலைவசதிகளை பெற்றுள்ளன. மாநிலத்தின் வளர்ச்சியை அதிகரிக்க ஊழல் அற்ற அரசை மக்கள் ஏற்படுத்த வேண்டும். உங்களின் ஆதரவையும் ஆசியையும் பா.ஜ., எதிர்பார்க்கிறது. மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து மிசோரத்தை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
makkal neethi - sel,இந்தியா
23-நவ-201823:53:04 IST Report Abuse
makkal neethi மிசோரத்தை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும்...பார்டா மிசோராமை காஸ்மீர் ஆக்கப்போறாராம் ..அப்போ மக்களுக்கு நல்ல ஆப்பிள் வாழைப்பழம் போன்ற பழ வகைகள் கிடைக்கும்..செழிப்பு செழிப்பா செழிப்பு ..1500000 வேண்டுமா காஸ்மீரக்கவேண்டுமான்னு கேக்குறாரு அண்ணாத்தை
Rate this:
Share this comment
Cancel
Sheri - korbotz,பிரிட்டிஷ் கன்னித் தீவுகள்
23-நவ-201823:50:04 IST Report Abuse
Sheri 2019 தேர்தலுக்கு பிறகு 15 லட்ச ரூபாய் கோட்டு கிடைக்குமா கிடைக்காதா? இதுதான் இப்போது மில்லியன் டாலர் கேள்வி. வாழ்க வளமுடன்.
Rate this:
Share this comment
Cancel
அப்பாவி - coimbatore,இந்தியா
23-நவ-201823:44:31 IST Report Abuse
அப்பாவி அதிகாரம் மட்டுமே காங்கிரசிற்கு முக்கியம். தலைவரே நமக்கு எல்லாம் புகைப்படத்திலயும் நாம வருவது முக்கியம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X