அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
போட்டி,..!
'கஜா' புயலை வைத்து அரசியல் கட்சிகள்...
நிவாரண பொருட்கள் மீது பெயர் அச்சடிப்பு

'கஜா' புயலை வைத்து, மக்களிடம் செல்வாக்கு பெறுவதில், அரசியல் கட்சிகள் இடையே, கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. தாங்கள் செய்யும் உதவி, மக்களுக்கு தெரிய வேண்டும்என்பதற்காக, நிவாரணப் பொருட்கள் மீது, பெயர், சின்னம் அச்சடித்து, வினியோகம் செய்கின்றனர். தேர்தலில் ஓட்டை அள்ள, ஆளாளுக்கு வியூகம் அமைத்து செயல்படு கின்றனர். சென்னையில் வெள்ளம் ஏற்பட்ட போது, நிவாரணப் பொருட்கள் மீது, ஜெ., படம் ஒட்டப்பட்டதை,மக்கள் கடுமையாக திட்டி யதை மறந்து, எல்லா கட்சிகளும் இப்போது, இந்த தில்லாலங்கடி வேலையில் ஈடுபட்டுள்ளன.

கஜா புயல், அரசியல் கட்சிகள்,போட்டி, நிவாரண பொருட்கள், பெயர் அச்சடிப்பு

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே, 16ம் தேதி அதிகாலை, 'கஜா' புயல் கரை கடந்தது.பலத்த காற்று காரணமாக, நாகை,, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உட்பட, 15 மாவட்டங்களில், பெரும் சேதம் ஏற்பட்டது. மக்கள், வாழ்வாதாரங்களை இழந்து, தவித்து வருகின்றனர். அவர்களின் நிலையை கண்டு, தமிழகம் முழுவதுமிருந்து, பொது மக்கள், தங்களால் முடிந்த நிவாரணப் பொருட்களை, பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு, அனுப்பி வருகின்றனர்.

வாய்ப்பு



விரைவில், 20 சட்ட சபை தொகுதிகளுக்கான

இடைத்தேர்தலும், லோக்சபா தேர்தலும்வர உள்ளது. புயல் பாதிப்புக்குள்ளான நாகையிீல், ஆறு; திருவாரூரில், நான்கு; தஞ்சாவூரில், எட்டு; புதுக்கோட்டையில், ஆறு சட்டசபை தொகுதிகள் என, நான்கு மாவட்டங்களில், 24 சட்டசபை தொகுதிகளும், நான்கு லோக்சபா தொகுதிகளும் உள்ளன.இதில், தஞ்சாவூர், திருவாரூர் சட்டசபை தொகுதிகள்,காலியாக உள்ளன. இவற்றுக்கு, விரைவில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது.இந்த சூழ்நிலையில், இப்பகுதிகள் புயல் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு, உதவி செய்வதன் வாயிலாக, 24 சட்டசபை தொகுதிகளிலும், அரசியல் கட்சிகள், தங்களுடைய செல்வாக்கை உயர்த்திக் கொள்ள, ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.அதனால், புயலால் பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களின் ஓட்டுகளை கவர, அரசியல் கட்சிகள் இடையே, கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்சியும், தனித்தனியே நிவாரணப் பொருட்களை அனுப்பி வருகிறது.

தங்கள் கட்சி சார்பில், நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுவது,பொதுமக்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக, பொருட்கள் மீது, தங்கள் கட்சி பெயர், சின்னம், தலைவர் படம் ஆகியவற்றை அச்சிட்டு வழங்குகின்றனர்.அரசியல் கட்சி துவக்க உள்ள, நடிகர் ரஜினி சார்பில், அவரது ரசிகர்களும், நிவாரணப் பொருட்களை அனுப்பி வருகின்றனர். அவர்களும், நிவாரணப் பொருட்கள் மீது,ரஜினி படத்தை ஒட்டினர்.இதை அறிந்த ரஜினி, ரசிகர்களை கண்டித்தார். ஆனால், மற்ற கட்சித் தலைவர்கள் யாரும், 'ஸ்டிக்கர்' ஒட்டுவதை தடுக்கவும் இல்லை; கண்டுகொள்ளவும் இல்லை.

விமர்சனம்



சென்னையில், 2015ல் பெருவெள்ளம்

Advertisement

ஏற்பட்டது. அப்போது, நிவாரணப் பொருட்கள் மீது, ஜெ., படம் ஒட்டி வழங்கியதற்கு, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன; பொது மக்களும் கடுமையாக விமர்சித்தனர். அன்று, ஜெ.,வை திட்டியதை மறந்து, இன்று தங்கள் படத்தை போட்டு, ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என, எல்லா கட்சிகளும், தில்லாலங்கடி வேலையில் ஈடுபட்டு வருகின்றன.

அதேபோல், ஒவ்வொரு கட்சி தலைவர்களும், மக்களின் ஓட்டுகளை கவர, தனித்தனியே வியூகம் அமைத்து, செயல்பட்டு வருகின்றனர். எதிர்க்கட்சி தலைவர்கள், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து, ஆறுதல் கூறுவதுடன், அரசை கடுமையாக விமர்சிக்கின்றனர்.

அதை பொருட்படுத்தாமல், ஆளும் கட்சியினர், தங்கள் பங்கிற்கு, அரசு இயந்திரம் உதவியுடன், மக்களுக்கு உதவிகளை செய்து வருகின்றனர். அத்துடன், ஆளும் கட்சி சார்பிலும், நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றனர்.போட்டி போட்டு விளம்பரம் செய்தாலும், மக்களுக்கு உதவிகள் சென்று சேருவது,ஆறுதலான விஷயமாக உள்ளது.
- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
25-நவ-201820:36:24 IST Report Abuse

Pugazh Vஅன்று ஜெயலலிதா படம் மக்களின் வரிப்பணத்தில் வாங்கிய அரசு நிவாரண பொருட்கள் மீது போட்டதை திமுக கண்டித்தது. இப்போது ஸ்டாலின் படம் திமுகவின் பணத்தில் வாங்கிய பொருட்கள் மீது போடப்படுகிறது. இதை ப.சா.சேகர் அறிய.

Rate this:
S sankaran - TIRUVIDAIMARUDUR ,இந்தியா
25-நவ-201816:49:04 IST Report Abuse

S sankaranகொடுக்கும் பொருளை வைத்து வோட்டு போடமாட்டார்கள்

Rate this:
புதிய தமிழ்மைந்தன் - Dindigul India,இந்தியா
25-நவ-201813:21:01 IST Report Abuse

புதிய தமிழ்மைந்தன்திமுக குழு கொடுக்கும் பொருட்களில் கருணாநிதி படம் இல்லையா? என்ன கொடுமை இது ஆறு மாதம் கூட ஆகவில்லை அதற்குள்........

Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X