குழந்தை ஆபாச படம் வைத்திருந்தால் 5 ஆண்டு சிறை

Updated : நவ 25, 2018 | Added : நவ 24, 2018 | கருத்துகள் (7) | |
Advertisement
புதுடில்லி, :குழந்தைகளை ஆபாசமாக சித்தரிக்கும் படம்-, வீடியோ வைத்திருந்தால், ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்கும் வகையில் சட்ட திருத்தத்தை அமல்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.நாட்டில், குழந்தைகள் தொடர்பான ஆபாச புகைப்படங்களை, வணிக ரீதியாக சேமிப்பதும், வினியோகிப்பதும் மிகப்பெரிய குற்றம்.இந்த விவகாரத்தில், பிரதமர் அலுவலகம் மிகவும் கவலை அடைந்துள்ளது. இதை
குழந்தை ஆபாச படம், சிறை, மத்திய அரசு,

புதுடில்லி, :குழந்தைகளை ஆபாசமாக சித்தரிக்கும் படம்-, வீடியோ வைத்திருந்தால், ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்கும் வகையில் சட்ட திருத்தத்தை அமல்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நாட்டில், குழந்தைகள் தொடர்பான ஆபாச புகைப்படங்களை, வணிக ரீதியாக சேமிப்பதும், வினியோகிப்பதும் மிகப்பெரிய குற்றம்.இந்த விவகாரத்தில், பிரதமர் அலுவலகம் மிகவும் கவலை அடைந்துள்ளது. இதை ஒழித்துக் கட்ட, கடும் நடவடிக்கைகளை எடுப்பது குறித்து, பிரதமர் அலுவலகம் ஆலோசித்து வருகிறது.

இந்நிலையில், குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்கள் மற்றும் வீடியோவை வைத்திருக்கும் அல்லது சேமித்து வைக்கும் நபர்களுக்கு, 'போக்சோ' சட்டத்தின் கீழ், ஐந்து ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கக் கூடிய வகையில், சட்ட திருத்தம் மேற்கொள்ள, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.மேலும், இந்த விவகாரத்தில் கைது செய்யப்படும் நபர்களுக்கு, ஜாமின் வழங்கப்பட மாட்டாது. இரண்டாவது முறை இதே குற்றத்தை செய்தால், சம்பந்தப்பட்ட நபருக்கு, ஏழு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.சமூக வலைதளமான, 'வாட்ஸ் ஆப்'பில், குழந்தைகள் ஆபாச படங்கள், வீடியோக்கள் வைத்திருந்தால், ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.

திருத்தம் மேற்கொள்ளப்பட்ட சட்ட திருத்த மசோதா, மத்திய சட்ட அமைச்சகம், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் ஆகியவற்றின் ஒப்பதலுக்காக காத்திருக்கிறது.'இது குறித்து, அடுத்த வாரத்தில், மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்' என, தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
25-நவ-201822:17:06 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN ரைட் நல்ல நல்ல திட்டங்களை கொண்டுவாரும் .நாட்டு நலனுக்கு . மக்கள் விருப்புவார்கள். எவ்வளவு நல்ல எண்ணம் இருந்தால் உங்களை அகற்ற எல்லாம் ஒண்ணாசேர்ராங்களாம் கடவுள் உம்பக்கம் உள்ளார் வெற்றி பா.ஜ.க்கே...
Rate this:
Cancel
Kailash - Chennai,இந்தியா
25-நவ-201811:17:14 IST Report Abuse
Kailash நிச்சயம் வரவேற்கலாம் ஆனால் இனி போலீசார் ஒருவரை போலியாக கைது செய்ய நினைத்தால் அவர் மொபைல் எண்ணுக்கு ஒரு வீடியோவை வாட்ஸ்ஆப் அனுப்பி அதை பார்க்கும் முன் உடனே கைது செய்து உள்ளே தள்ளிவிடலாம்... முன்பு போதை மருந்து வீட்டில் லாவகமாக வைத்து கைது செய்வார்கள் இப்போது வீடியோ.... சென்னை தாம்பரம் அருகே உள்ள பிரபல தனியார் பள்ளியில் பத்தாவது படிக்கும் மாணவிகள் 4 பேர் வகுப்பறையில் மது அருந்தி உடனே பிடிபட்டுள்ளனர் அந்த மாணவிகளின் சீட்டு உடனே கிழித்து பெற்றோர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர் கடந்த வாரம் நடந்த செய்தி இப்போதைய மாணவிகள் குழந்தைகள் அல்ல அதற்கும் மேல்... அந்த மாணவிகளுக்கு யார் மது வாங்கி கொடுத்தனர்? எப்படி பணம் கிடைத்து? அந்த பள்ளியில் படிக்கும் இதர பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளனர் அதாவது ஸ்மார்ட் போன் வாங்கி கொடுக்க கூடாது என்று கண்டிஷன் போட்டு உள்ளனர் அதோடு குழந்தைகளை கண்காணிக்க வேண்டும் என்று அறிவுரை கூறி உள்ளனர் இந்த தைரியம் எப்படி குழந்தைகளுக்கு வந்தது? நாளை தலைமுறை நினைத்தால் வருத்தமாக உள்ளது..
Rate this:
Cancel
25-நவ-201810:43:46 IST Report Abuse
ருத்ரா வேண்டியவர் ,வேண்டாதவர் பாரபட்சம் பார்க்காமல் ஜாமீன் தராமல் தண்டனை தர வேண்டும். இத்தனைக்கும் பாதிக்கு மேல் பெண் குழந்தை உள்ளவனாகத்தான் இருப்பான். கொடுமைக்கு முற்றுப் புள்ளி வந்தால் சரி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X