போபால், என்னை எதிர்க்கும் பலம் இல்லாத தால், காங்கிரஸ் தலைவர்கள், என் தாயின் பெயரை இழுக்கிறார்கள், என, பிரதமர் நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்தார்.
முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமை யிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ள மத்திய பிரதேசத்தில், வரும், 28ல் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.
இதற்காக நடந்த பிரசார கூட்டத்தில், பிரதமர்
நரேந்திர மோடி பேசியதாவது:சமீபத்தில்,காங்கிரஸ் கட்சியின் ராஜ் பப்பர் பேசுகையில், 'அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வயது அளவு குறைந்துள்ளதாக, பா.ஜ.,வினர் கூறினர்.
ஆனால், தற்போது, மோடியின் தாய் வயது அளவு குறைந்துள்ளது' என்றுகூறியுள்ளார்.இத்தனை ஆண்டுகளாக நான், காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அரசியலில் பல வெற்றிகளைப் பெற்று உள்ளேன்.
ஆனால், என்னை எதிர்க்கும் பலம் காங்கிரசுக்கு
இல்லை. அதனால், 97 வயதாகும் என் தாயின் பெயரை, தேவையில்லாமல் அரசியலுக்கு இழுத்துள்ளது காங்கிரஸ்.என் தாய் பெயரை தேவையில்லாமல் இழுத்த காங்.,கட்சிக்கு, இந்தத் தேர்தலில், என் சார்பில், மக்கள் தக்க பதில் அளிப்பர்.இவ்வாறு, அவர் பேசினார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (37)
Reply
Reply
Reply