சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லஞ்சம் வாங்கிய எலக்ட்ரிக்கல் இன்ஸ்பெக்டர் கைது

Updated : நவ 25, 2018 | Added : நவ 24, 2018 | கருத்துகள் (2)
Advertisement

நாகர்கோவில்: குமரியில், மின் உபகரணங்களுக்கு தகுதி சான்றிதழ் வழங்க லஞ்சம் பெற்ற, எலக்ட்ரிக்கல் இன்ஸ்பெக்டர், லஞ்ச ஒழிப்பு துறையினரால் கைது செய்யப்பட்டார்.குமரி அடுத்த, அழகப்பபுரத்தைச் சேர்ந்தவர், ராஜா, 45. வெளிநாட்டில் வேலை செய்து திரும்பிய அவர், அழகப்பபுரத்தில், லாண்டரி கடை வைத்துஉள்ளார்.இந்தக் கடைக்கு தேவையான உபகரணங்கள், ஜெனரேட்டர் வாங்கியுள்ளார்.

அதற்கு அரசு மானியம் பெறுவதற்காக மனு செய்தும், ஆறு மாதமாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.எனவே, நெல்லை, துாத்துக்குடி, குமரி ஆகிய, மூன்று மாவட்டங்களுக்கான, எலக்ட்ரிக்கல் இன்ஸ்பெக்டராக பணிபுரியும் கொல்லங்கோட்டைச் சேர்ந்த, கிறிஸ்டோபர் சிகினி, 52, என்பவரிடம், அரசு ஒப்பந்தகாரர் ஒருவர் மூலம், ராஜா அணுகி உள்ளார். அப்போது, சான்றிதழ் தருவதற்கு, 50 ஆயிரம் ரூபாயை, கிறிஸ்டோபர் சிகினி, லஞ்சமாக கேட்டுள்ளார். முதல் தவணையாக, 20 ஆயிரம் ரூபாயை கொடுத்த, ராஜா, இது குறித்து, லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் செய்தார்.

இதையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையினர், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை, ராஜாவிடம் கொடுத்து, கிறிஸ்டோபர் சிகினியிடம் கொடுக்குமாறு கூறினர்.அதன்படி, நேற்று மாலை, அழகப்பபுரத்தில் உள்ள லாண்டரி கடையில், ரசாயனம் தடவிய, 8,000 ரூபாயை, கிறிஸ்டோபர் சிகினியிடம், ராஜா கொடுத்தார். அங்கு மறைந்திருந்த, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார், கிறிஸ்டோபரை கையும் களவுமாக பிடித்து, கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
25-நவ-201808:57:50 IST Report Abuse
Bhaskaran எல்லா மின்வாரிய அலுவலகங்களிலும் இடைத்தரகர் இருக்காங்கங்க
Rate this:
Share this comment
Cancel
Rajaram Kandalu - Madurai,இந்தியா
25-நவ-201803:26:00 IST Report Abuse
Rajaram Kandalu இந்த துறையில், லஞ்சம் வாங்காத எலக்ட்ரிகல் இன்ஸ்பெக்டர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். நடுவில் கான்ட்ராக்டர்கள் மூலம் தான் எல்லாவற்றையும் செய்ய முடியும் என்பதால் நிறைய பேர் மாட்டாமல் இருக்கிறார்கள். நான் ஒரு காண்ட்ராக்டர் ஆக இருந்ததினால் உறுதியாக சொல்ல முடியும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X