பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
 27ம்தேதி!, அரசிடம் , புயல் பாதிப்பு, அறிக்கை, சமர்ப்பிப்பு

சென்னை: புயல் சேதங்களைப் பார்வையிட, தமிழகம் வந்துள்ள மத்திய குழுவினர், நேற்று, முதல்வர் பழனிசாமி மற்றும் அதிகாரிகளை சந்தித்து, ஆலோசனை நடத்தினர். பின், புதுக்கோட்டை சென்ற குழுவினர், சேதங்களை ஆய்வு செய்யும் பணியை, அங்கிருந்து துவக்கினர்.நான்கு மாவட்டங்களிலும், புயல் வேகத்தில், மத்திய குழுவினர் ஆய்வு செய்ய உள்ளதால்,27ம் தேதியே, சேத மதிப்பு அறிக்கை, மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படலாம் என,எதிர்பார்க்கப்படுகிறது.'கஜா' புயலால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட, 12 மாவட்டங்கள் கடும் பாதிப்பு அடைந்துள்ளன. டெல்டா மாவட்டங்களில், இதுவரை காணாத அளவிற்கு, பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.டில்லியில் பிரதமரை சந்தித்த, முதல்வர் பழனி சாமி, சேதங்களைப் பார்வையிட, மத்திய குழுவை அனுப்பும்படி கோரினார்.அதை ஏற்று, மத்திய உள்துறை இணை செயலர், டேனியல் ரிச்சர்டு தலைமையில், ஏழு பேர் குழுவை, மத்திய அரசு, தமிழகத்திற்கு அனுப்பி உள்ளது.
மத்திய குழுவினர், நேற்று முன்தினம் இரவு, சென்னை

வந்தனர். சென்னை, அண்ணா சாலையில் உள்ள, தனியார் ஓட்டலில் தங்கினர். நேற்று காலை, 10:45 மணிக்கு, தலைமைச் செயலகத்தில், முதல்வர் பழனிசாமியை சந்தித்தனர். அமைச்சர்கள், ஜெயகுமார், சி.வி.சண்முகம், உதயகுமார், தலைமைச் செயலர், கிரிஜா வைத்திய நாதன் மற்றும் பல்வேறு துறை செயலர்கள் உடனிருந்தனர்.
புயலால் ஏற்பட்டுள்ள சேதங்களை, மாவட்ட வாரியாக, புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகளுடன், மத்திய குழுவிற்கு, அதிகாரிகள் விளக்கினர். புயல் சேதம் மற்றும் அரசு எடுத்து வரும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து, முதல்வர் எடுத்துரைத்தார். மேலும், பாதிப்புகளை பார்வையிட்டு, விரைவாக மத்திய அரசிடம், அறிக்கை அளிக்கும்படி, குழுவினரிடம் கேட்டுக்

கொண்டார்.
காலை, 11:45 மணிக்கு, முதல்வர் அறையிலிருந்து வெளியே வந்த மத்திய குழுவினர், தலைமைச் செயலர் அறைக்கு சென்றனர்.அங்கு நடந்த, ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய குழுவினர் செல்ல உள்ள மாவட்டங்கள், அங்கு பார்வையிட உள்ள பகுதிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.இக்கூட்டம் முடிந்ததும், குழுவினர், ஓட்டலுக்கு சென்றனர். அங்கு, மதிய உணவை முடித்து, மதியம், 2:45 மணிக்கு, விமானத்தில், திருச்சி சென்றனர். அவர்களுடன், தமிழக வருவாய் துறை நிர்வாக ஆணையர், சத்யகோபால் மற்றும் அதிகாரிகள் சென்றனர்.
மாலை, திருச்சி சென்ற மத்திய குழுவினர், அங்கிருந்து, காரில், புதுக்கோட்டை சென்றனர். அங்கு, குளத்துார் புதுக்கோட்டை, ஆலங்குடி, வடக்காடு, வடக்குபட்டி,

பழைய கந்தர்வ கோட்டை, மதுகுளம், புதுப்பட்டி பகுதிகளில், புயல் சேதங்களைப் பார்வையிட்டனர். சேத மதிப்பு மற்றும் பாதிப்பு விபரங்களை கணக்கெடுத்தனர்.அங்கிருந்து, நேற்றிரவு தஞ்சாவூர் சென்றனர்.
அங்கு, சங்கம் ஓட்டலில் தங்கினர்.இன்று காலை, தஞ்சாவூர் மாவட்டத்தில், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், மதியம், திருவாரூர் மாவட்ட பகுதிகளையும் பார்வையிடுகின்றனர்.
இரவு, நாகப்பட்டினம் செல்கின்றனர். நாளை காலை, நாகப்பட்டினம் மாவட்டத்தில், பாதிப்புகளை பார்வையிடுகின்றனர். மாலை, காரைக்கால் சென்று, அங்கு பாதிப்புகளை பார்வையிடுகின்றனர். இரவு, புதுச்சேரியில் தங்கு கின்றனர்.வரும், 27ம் தேதி டில்லி புறப்பட்டு செல்கின்றனர்.
தமிழக அதிகாரிகள், சேதம் தொடர்பான, அனைத்து தகவல்களையும் அளித்துள்ளதாலும், சேத மதிப்பு விபரங்களை, நேரில் பார்த்து அறிந்துள்ளதாலும், மத்திய குழுவினர், 27ம் தேதியோ அல்லது அதற்கு அடுத்த நாளோ, மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கலாம் என, தமிழக அரசு தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா
25-நவ-201810:39:09 IST Report Abuse

Syed Syedபுயல் வேகத்தில் ஏப்பம் விடுவார்கள்.

Rate this:
blocked user - blocked,மயோட்
25-நவ-201808:05:02 IST Report Abuse

blocked userநிவாரணம் நேரடியாக செல்லும் அளவில் இல்லை என்றால் அதிகம் சாப்பிட்டு விடுவார்கள்...

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X