மும்பை:''அடுத்த ஆறு மாதங்களுக்கு, ரிசர்வ் வங்கியிடம் இருந்து, மத்திய அரசுக்கு எந்த நிதியும் தேவைப்படாது,'' என, மத்திய நிதியமைச்சர் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கியிடம், 9.59 லட்சம் கோடி ரூபாய் உபரி நிதி உள்ளது. இதில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்கவும், பொதுத் துறை வங்கிகளின் மூலதனத்தை உயர்த்தவும், மத்திய அரசு, 3.57 லட்சம் கோடி ரூபாய் கோருவதாக தகவல் வெளியானது.அடுத்த
ஆண்டு நடைபெற உள்ள, பொதுத் தேர்தலை முன்னிட்டு, மத்திய அரசு இந்நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டது.
இதையடுத்து, 'ரிசர்வ் வங்கியிடம் எந்த நிதியும் கோரவில்லை' என, மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.இருந்தபோதிலும், மோடி அரசு, ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தில் தலையிடுவ தாக எதிர்க்கட்சிகள் புகார் கூறின.முன்னாள் மத்திய நிதியமைச்சர், ப.சிதம்பரம், 'மத்திய அரசு, ரிசர்வ் வங்கியை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, அதன் கையிருப்பில் அதிகாரம் செலுத்த திட்ட மிட்டு உள்ளது' என, சமீபத்தில் குற்றஞ்சாட்டி இருந்தார்.
இந்நிலையில்,
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, தனியார், 'டிவி'க்கு அளித்த
பேட்டி:ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி உரிமையை, மத்திய அரசு மதிக்கிறது.அதில்
தலையிட விரும்பவில்லை.
அதேசமயம், ஒரு சில துறைகளில், பணப் புழக்கம் குறைந்தாலோ அல்லது கடன் பெற முடியாத நிலை ஏற்பட்டாலோ, அப்பிரச்னை களை கண்டு கொள்ளாமல் இருக்க முடியாது. அதன்படி, மத்திய அரசு, பிரச்னை களை ரிசர்வ் வங்கியின் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளது.அடுத்த ஆறு மாதங்களுக்கு, ரிசர்வ் வங்கியின் பணம் மத்திய அரசுக்கு தேவை படாது.இவ்வாறு அவர் கூறினார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (19)
Reply
Reply
Reply