பொது செய்தி

இந்தியா

அணுமின் நிலையம் இனி கெடுபிடி அதிகரிக்கும்

Added : மார் 29, 2011 | கருத்துகள் (10)
Advertisement
அணுமின் நிலையம் இனி கெடுபிடி அதிகரிக்கும்

புதுடில்லி : " இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் சான்றிதழ் அளித்த பின்னர் தான், இனிமேல் அணு மின் நிலையங்கள் அமைக்க அனுமதி அளிக்கப்படும்' என, பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.


பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது:ஜப்பானில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால், அங்கிருந்து அணுமின் நிலையங்களில் விபத்து ஏற்பட்டது. அணு உலையில் இருந்து கதிர்வீச்சு வெளியேறுவதால், அதை கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.இந்நிலையில், இந்தியாவில் உள்ள அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு தன்மை குறித்து, சிலர் சந்தேகம் எழுப்புகின்றனர். இந்தியாவில் உள்ள அணுமின் நிலையங்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இதன் ஒரு பகுதியாக, இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம், பலப்படுத்தப்படும்.


இது, தனித்து செயல்படும் அமைப்பாக்கப்படும். எதிர்காலத்தில் அமையவுள்ள அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு தன்மை குறித்து, இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் சான்றிதழ் அளிக்க வேண்டும். இந்த சான்றிதழ் பெற்றால் தான், புதிய அணு மின் நிலையங்கள் அமைக்க அனுமதி அளிக்கப்படும்.இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.


Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
T . Arulmony - Chennai ,இந்தியா
30-மார்-201112:10:30 IST Report Abuse
T . Arulmony இத்தனை ஆபத்து உள்ள அணு மின் உற்பத்திமுறை தவிர்த்து காத்து, சூரிய ஒளி, கடல் அலை , நீர் இவற்றால் மின் உற்பத்தி செய்வது நல்லது. ஒரு அனு உலை அமைக்கும் ஆகும் செலவில் மிக குறைவுதான் காத்தாலை , நீர் மின் உற்பத்தி , கடல் அலை மின் உற்பத்தி , சூர்ய ஒளி மூலம் மின் உற்பத்திக்கு ஆகும். மட்டும் இல்லாமல் ஆறுகள் இணைகபட வழி பிறகும்.ஆபத்துக்கு செலவு செய்வதை விட்டுவிட்டு வளர்ச்சி முறை மின் உற்பத்திக்கு செலவு செய்வது நல்லது. சொர்ணபில் ஜப்பான் அனு உலை நிகழ்வுகளை பார்த்துமா இன்னும் அப்பத்துக்கு அனுமதி துறை பத்தி சிந்திரீர்கள்.
Rate this:
Share this comment

Microsoft OLE DB Provider for SQL Server error '80040e31'

Query timeout expired

/xtralog_load_full_taboolabc.asp, line 393