பொது செய்தி

தமிழ்நாடு

இன்று வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியீடு : சுயேச்சைகள் தீவிர பிரச்சாரத்துக்கு முடிவு

Added : மார் 29, 2011
Advertisement

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் ஐந்து தொகுதிக்கான வேட்பாளர் இறுதி பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. இதை தொடர்ந்து சுயேச்சைகளுக்கு சின்னம் ஒதுக்கீடும் இன்று நடப்பதால், நாளை முதல் சுயேச்சைகள் வீதிகளில் இறங்கி பிரச்சாரத்தில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் ஐந்த தொகுதியிலும் கடந்த ஒரு வாரமாக அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தி.மு.க., கூட்டணியில் முதல் கட்டமாக ராமதாஸ் கடந்த இரு நாட்களுக்கு முன் கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்று சென்றார்.


அ.தி.மு.க., கூட்டணியில் அ.தி.மு.க., பேச்சாளர் நடிகர் ஆனந்தராஜ் பாலக்கோடு தொகுதி முழுவதும் கிராம பகுதியில் தீவிர பிரச்சாரத்தை முடித்து சென்றுள்ளார். நேற்று அ.தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பாலக்கோடு, தர்மபுரி, நல்லம்பள்ளி ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்து விட்டு சென்றுள்ளார்.
பென்னாகரம் தொகுதியில் நேற்று தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து நடிகர் வாகை சந்திரசேகர் பிரச்சாரம் செய்தார். ஐந்து தொகுதியிலும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் சத்தம் இல்லாமல் வீதிகளில் இறங்கி தொடர்ந்து ஓட்டு சேகரிப்பு பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.


அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் படு உற்சாகத்துடன் இறங்கிய நிலையில், வேட்பு மனு தாக்கல் செய்த சுயேச்சைகள் தங்களுக்கு சின்னம் ஒதுக்கீடு இன்று தான் முடிவாகிறது என்பதால், தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட முடியாலம் இருந்தனர். தர்மபுரி மாவட்ட ஐந்து தொகுதியிலும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் உள்ளிட்ட 60 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர். வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாளான இன்று சுயேச்சைகளுக்கு சின்ன ஒதுக்கீடு நடக்கிறது. சின்னத்தை பெற்றவுடன் சுயேச்சைகள் நாளை முதல் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட வாய்ப்புள்ளது. சுயேச்சை வேட்பாளர்கள் தங்கள் உறவினர்கள், தங்களுக்கு ஆதரவு கிடைக்கும் இடங்களில் பிரச்சாரம் செய்வார்கள். அதே நேரம் தேர்தல் பிரச்சாரத்தில் தேர்தல் கமிஷன் கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில், கிராம பகுதியில் மட்டும் சுவர் விளம்பரங்கள் செய்யும் நிலையில், கிராம பகுதியில் கூட அரசியல் கட்சிகள் பெரும் அளவில் தேர்தல் சின்னங்களை வரையாமல் உள்ளனர்.


சுயேச்சைகள் சின்னம் இன்று கிடைத்து விடும் என்பதால், சுயேச்சைகள் சின்னம் அதிக அளவில் சுவர் விளம்பரங்களில் இடம் பிடிக்கலாம் என தெரிகிறது. நாளை முதல் சுயேச்சைகளும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்குவதால், தர்மபுரி மாவட்ட ஐந்து தொகுதியிலும் தேர்தல் பிரச்சாரம் கடந்த நாட்களை விட தீவிரமடையும் என தெரிகிறது. தேர்தல் பிரச்சாரத்துக்கு மிக குறுகிய நாட்கள் இருப்பதால், அரசியல் கட்சி வேட்பாளர்கள் வரும் நாட்களில் இருந்து அதிகாலையில் இருந்து தங்கள் பிரச்சாரத்தை துவங்குவதோடு, இரவு நேரங்களில் அதிக ஓட்டு வங்கியிருக்கும் கிராமங்களில் முகாமிட்டு தங்களுக்கு ஆதரவை நாடுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. கொளுத்தும் கோடை வெயில் உக்கிரம் அதிகரித்துள்ள நிலையில் வேட்பாளர்கள் வெயிலையும் பொருட்படுத்தால், வீதிகளில் இறங்கி வலம் வரத்துவங்கி விட்டதால், தர்மபுரி மாவட்டத்தில் தேர்தல் பரபரப்பு அதிகரித்துள்ளது.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X