பொது செய்தி

தமிழ்நாடு

கோடை கால இறகுபந்து பயிற்சி

Added : மார் 29, 2011
Advertisement

தர்மபுரி: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தர்மபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் கோடைகால இறகுபந்து பயிற்சி நடக்கிறது.
மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகுநாதன் வெளியிட்ட அறிக்கை:தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாõர்பில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கோடைகால இறகு பந்து பயிற்சி ஏப்ரல் 4ம் தேதி முதல் 24ம் தேதி வரை வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். பயிற்சி 21 நாட்கள் நடக்கும். காலை 6.30 மணியில் இருந்து 8 மணி வரை, 10.30 மணியிலிருந்து 12.30 மணி வரை மற்றும் மாலை 4.30 மணியில் இருந்து 6.30 மணி வரை என பயிற்சி நேரங்கள் பிரித்து மாணவர்களின் வசதிக்கு ஏற்ப பயிற்சியளிக்கப்படவுள்ளது. பயிற்சி குறித்து மேலும் விபரங்கள் அறிய மாவட்ட விளையாட்டு அலுவலரை 04342-260936 மற்றும் 98426-39066 என்ற மொபைல்ஃபோனில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X