பொது செய்தி

இந்தியா

புதிய டெபிட், கிரெடிட் கார்டு ஜன., 1 முதல் அமல்

Added : நவ 25, 2018 | கருத்துகள் (12)
Advertisement
டெபிட், கிரெடிட் கார்டு

புதுடில்லி: அடுத்தாண்டு, ஜன., 1 முதல், புதிய, 'சிப்' பொருத்தப்பட்ட, 'டெபிட், கிரெடிட்' கார்டுகள் மட்டுமே செயல்படும் என்பதால், வங்கி வாடிக்கையாளர்கள் உடனடியாக, தங்கள் கார்டுகளை புதுப்பித்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறது.

நாட்டில், சமீப காலமாக, 'டெபிட், கிரெடிட்'கார்டுகள் மூலம், ஏராள மான மோசடிகள்நடக்கின்றன.இதை தடுக்கும் நோக்கில், அனைத்துவங்கிகளும், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு, 'சிப்' பொருத்தப்பட்ட, புதிய, 'டெபிட், கிரெடிட்' கார்டுகளை வழங்கும்படி, 2015 ஆகஸ்டில், ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. இதற்கான பணிகளை மேற்கொள்ள, மூன்று ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்பட்டது.இதையடுத்து, தங்கள் பழைய, 'டெபிட், கிரெடிட்' கார்டுகளுக்கு பதில், புதிய, 'டெபிட், கிரெடிட்' கார்டுகளை, டிச., 31க்குள் பெற்றுக் கொள்ளும்படி, வாடிக்கையாளர்களை, எஸ்.பி.ஐ., எனப்படும், பாரத ஸ்டேட் வங்கி, ஆகஸ்ட் மாதத்தில் அறிவுறுத்தியது. இதன்படி, இந்த வங்கி யின் பெரும்பாலான வாடிக்கையாளர்கள், புதிய, 'சிப்' பொருத்தப்பட்ட, 'டெபிட், கிரெடிட்' கார்டுகளை பெற்று வருகின்றனர். பிற வங்கிகளின் வாடிக்கையாளர்களும், புதிய கார்டுக்கு மாறிவருகின்றனர்.
'சிப்' இல்லாத, 'டெபிட், கிரெடிட்' கார்டுகள், 2019 ஜன., 1 முதல் செயல்படாது. எனவே, வங்கி வாடிக்கையாளர்கள், தங்களது வங்கியின் அதிகாரபூர்வ இணையதளத்தில், புதிய, 'சிப்' பொருத்தப்பட்ட, 'டெபிட், கிரெடிட்' கார்டுகள் கோரி விண்ணப்பிக்கலாம்; அல்லது சேமிப்பு கணக்கு வைத்துள்ள வங்கிக்குச் சென்று, புதிய கார்டுகளை பெற்றுக் கொள்ளலாம். புதிய, 'சிப்' பொருத்தப்பட்ட கார்டு, இ.எம்.வி.,எனப்படும், 'யூரோபே, மாஸ்டர் கார்டு, விசா கார்டு' என, அழைக்கப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Viswam - Mumbai,இந்தியா
25-நவ-201814:21:59 IST Report Abuse
Viswam பாரத ஸ்டேட் வங்கி இந்த வருடம் தொடக்கம் வரை கொடுத்த டெபிட் கார்டுகளில் முடிவு தேதி கன்னாபின்னாவென்று (உதாரணம் 2035) இருந்து வந்தது. வாடிக்கையாளர்களை அடிக்கடி கார்டு மாற்றும் செலவில் இருந்து பாதுகாக்கவே செய்யப்பட்டது. பிறகு வந்த டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மோசடிகளைக்கண்டு சிப் பொருத்திய கார்டுக்கு வந்துவிட்டார்கள். புது சிப் கார்டில் முடிவு தேதி 2023 வரை (5 வருஷம்) ஆகிவிட்டது. பழைய கார்டுகளில் உள்ள மேக்னெட்டிக் டேப்பை ஸ்கேனர் மூலம் பதிவு செய்துவிடலாம். இந்த மாதிரி பணம் இழந்தவர்கள் ஏராளம். சிப் கார்டில் அது போல நடக்க வாய்ப்பில்லாததால் சிப் கார்டிற்கு மாறுவது நம்முடைய கொஞ்சம் நஞ்சம் சம்பாத்தியத்தை பாதுகாப்பதற்கு உண்டான வழி. ஸ்டேட்வங்கி எல்லோருக்கும் இலவசமாகவே புது சிப் பொருத்திய டெபிட் கார்டு தரப்படும் என்று சொல்லிவருகிறார்கள். எதோ தண்டச்செலவு என்று கூசாமல் கருத்து போடுபவர்கள் கொஞ்சம் அடக்கி வாசிக்கலாம். கிரெடிட் கார்டிற்கு சிப் வந்து சில வருடங்கள் ஆகிவிட்டது. ஏற்கனவே சிப் உள்ள டெபிட் கார்டுகளை மாற்ற தேவை இல்லை.
Rate this:
Share this comment
Cancel
BJRaman - Chennai,இந்தியா
25-நவ-201813:13:21 IST Report Abuse
BJRaman HDFC வங்கி, ATM கார்டு கொடுக்கிறது. இதை வைத்து ATM மெஷின்மூலம் பணம் மட்டும் எடுக்க முடியும். இன்டர்நெட் சேவைக்கு பயன் படுத்த முடியாது. இதற்கு கட்டணம் எதுவும் இல்லை
Rate this:
Share this comment
Cancel
Rajesh Rajan - bangalore,இந்தியா
25-நவ-201812:51:07 IST Report Abuse
Rajesh Rajan அடுத்த அனுமதிக்க பட்ட கொள்ளை.... வருட கட்டணம் - சாதா கார்டு 150 மற்றும் வரி ஆனால் இந்த கார்டு 450 மற்றும் வரி....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X