திருப்பூர்:திருப்பூர் சுற்றுவட்டார நீர்நிலைகளில் வலசை வரும் பறவைகள், பார்வையாளர்களை வியக்க வைக்கின்றன.திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நல்லதங்காள் ஓடையில், ஒற்றை பூநாரை பறவையினம் தென்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், திருப்பூர் இயற்கை கழகத்தினர் அப்பகுதியில் முகாமிட்டனர். செந்தலை கூம்பலகன் எனும் புதர்ப்பறவை, இசபெல்லின் புதர்ச்சிட்டு உட்பட பல பறவையினங்களின் வருகை பதிவு செய்யப்பட்டது.-
திருப்பூர் இயற்கை கழக தலைவர் ரவீந்திரன் கூறுகையில், ''முதன் முறையாக, ஒரு கோணல் மூக்கு உள்ளான், செந்தலை கூம்பலகன் உட்பட பறவையினங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில், செந்தலை கூம்பழகன், மத்திய ஆசியாவில் இனப்பெருக்கம் செய்து வசிக்கும் பறவை. அதேபோல், இசபெல்லின் புதர்ச்சிட்டு தெற்கு ரஷ்யாவில், வசிக்கும் பறவை. 'புதர்ச்சிட்டு' பறவை, கிழக்கு ஐரோப்பா மற்றும் சைபீரிய பகுதிகளில் இருந்து வலசை வருபவை,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE