முத்தமிழின் தமிழ் வரிகள்

Added : நவ 26, 2018
Advertisement
மனிதன் தன் வாழ்க்கையில் பிறப்பு முதல் இறப்பு வரை பாடல்களின் வழியே தான் பயணித்து முடிக்கின்றான். மகிழ்ச்சி, சோகம், காதல், உறவு, பிரிவு, காமம், தத்துவம் என பாடல்களில் தடம் பதிக்கிறான். மனித உணர்வு, வாழ்க்கை முறை அனைத்தையும் அனுபவித்தோ அல்லது உள்வாங்கியோ கவிஞர்கள் பாடல் வரிகளை படைக்கின்றனர். அவை கேட்போர் ஒவ்வொருவருக்கும் ஒருவிதமான ஈர்ப்பை ஏற்படுத்த தவறுவதில்லை. அதனால்
முத்தமிழின் தமிழ் வரிகள்

மனிதன் தன் வாழ்க்கையில் பிறப்பு முதல் இறப்பு வரை பாடல்களின் வழியே தான் பயணித்து முடிக்கின்றான். மகிழ்ச்சி, சோகம், காதல், உறவு, பிரிவு, காமம், தத்துவம் என பாடல்களில் தடம் பதிக்கிறான். மனித உணர்வு, வாழ்க்கை முறை அனைத்தையும் அனுபவித்தோ அல்லது உள்வாங்கியோ கவிஞர்கள் பாடல் வரிகளை படைக்கின்றனர்.

அவை கேட்போர் ஒவ்வொருவருக்கும் ஒருவிதமான ஈர்ப்பை ஏற்படுத்த தவறுவதில்லை. அதனால் தான் ரூ. பலகோடிகளில் தயாரிக்கப்படும் சினிமாவின் வெற்றியை பாடல்களும் நிர்ணயிக்கின்றன.

வா மச்சானே மச்சானே (இறுதிசுற்று), டசக்கு டசக்கு (விக்ரம் வேதா) என்று ஆட வைக்கவும், காதல் கனவே தள்ளி போகதே போகதே (முண்டாசுபட்டி), கண்ணம்மா கண்ணம்மா காதலிச்சாலாம் (ஜிகர்தண்டா) என்று காதல் மயக்கத்தில் ஆழ்த்தவும் முடியும் என்கிறார், பாடலாசிரியர் முத்தமிழ்.

அவர் கூறியதாவது: திருச்சியில் பள்ளி, கல்லுாரி படிப்பை முடித்தேன். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தேன். சினிமாவில் சந்தோஷ் நாராயணன், அருண்ராஜா காமராஜ், சிவகார்த்திகேயன் ஆகியோர் என்னுடைய ஜூனியர்கள். கை தட்டல்கள் வாங்க பள்ளி காலங்களில் இருந்தே மேடைகளில் என்னுடைய திறமைகளை வெளிக்காட்ட துவங்கினேன். அது கல்லுாரி காலங்களிலும் தொடர்ந்தது.

நடனம், இசை, பாடல், நாடகம், மிமிக்கிரியில் பங்கேற்றேன். முறையாக கற்றுக்கொண்டேன். தற்காப்பு கலையான கராத்தேவையும் விட்டு வைக்கவில்லை. பிளாக் பெல்ட் வாங்கினேன். சிறுவயதில் வயல்வெளிகளில் நாட்டுபுற பாடல்கள் பாடுவதை, ரேடியோவில் பாடல்கள் கேட்பதை விருப்பமாக கொண்டிருந்தேன். எழுத்து, வாசிப்பு மீது பெரிய ஆர்வம் அப்போது ஏற்படவில்லை.

கல்லுாரி படிப்பை முடித்துவிட்டு ஓராண்டு தனியார் நிறுவனத்தில் பணியாற்றினேன். நமக்கு கலைத்துறை சரிப்பட்டு வரும் என முடிவு செய்து சென்னைக்கு கிளம்பினேன். வருமானத்திற்காக மெல்லிசை கச்சேரிகளில் பாட துவங்கினேன்.

அப்படியே சினிமா வாய்ப்புகளையும் தேடினேன். சினிமாவில் முதல் வாய்ப்பு கேட்டது, நடிப்பதற்காக; அது அவ்வளவு எளிதாக இல்லை. அதனை தொடர்ந்து 2011 முதல் சினிமாவிற்கு பாடல் எழுதும் வாய்ப்பு கிடைத்து.

அட்டக்கத்தி, பீட்சா, சூதுகவ்வும், முண்டாசுபட்டி, ஜிகர்தண்டா, இறுதிசுற்று, இறைவி உள்ளிட்ட 35 படங்களில் பாடல்கள் எழுதியுள்ளேன். அதில் 'டூரிங் டாக்கிஸ் 'என்ற படத்தில் இளையராஜாவின் இசையில் எழுதும் வாய்ப்பு கிடைத்ததை பெரும் விருதாக நினைக்கிறேன். இதுமட்டுமில்லாது, டார்லிங் -2, ஆங்கிலப்படம், காலா ஆகிய படங்களில் 3 பாடல்களை பாடியுள்ளேன். கமல் ரசிகனாக இருந்தாலும், பாடலாசிரியர் அவதாரத்திற்கு நான் குருவாக கருதுவது நடிகர் டி.ராஜேந்தர் தான்.

அவருடைய பாடல்களில் மிகவும் வசீகரிக்கப்பட்டேன். எப்படியான காட்சிகளும் கதைகளுக்கும் தேவையான பாடல்களை சந்தம் கொடுத்தால் தாளகட்டில் எழுதி விடுவேன். இயற்கையாகவே என்னுள் இசை இருப்பதாக கருதுகிறேன். அதனால் அதற்கேற்றபடி பாடல் வரிகளை என்னால் கொடுக்க முடிகிறது என்றார். இவரை பாராட்ட 99416- 28656

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X