கலகலன்னு கடலை போடுவேன் - அம்சமான ஆசிகா| Dinamalar

'கலகல'ன்னு கடலை போடுவேன் - அம்சமான ஆசிகா

Added : நவ 26, 2018 | |
பீகார் பெற்றெடுத்தாலும், வளர்த்தது என்னவோ தமிழகம் தான். வளமான உடலமைப்பு; நளினமான உடலசைவு... சினிமா எனும் கோட்டைக்குள் புக, மாடலிங் துறைக்குள் புகுந்த மாடர்ன் மங்கை, ஆசிகா. ஸ்டைலான 'ரேம்ப் வாக்'கில் போட்டியாளர்களை விய(ர்)க்க வைத்தவர். பூப்போன்று பொலிவு காட்டும் அமைதியான பெண். ஆனால், போட்டி என்று வந்துவிட்டால், 'கஜா' புயலாக மாறி, போட்டியாளரை துவளச் செய்து விடுவார்,
'கலகல'ன்னு கடலை போடுவேன் - அம்சமான ஆசிகா

பீகார் பெற்றெடுத்தாலும், வளர்த்தது என்னவோ தமிழகம் தான். வளமான உடலமைப்பு; நளினமான உடலசைவு... சினிமா எனும் கோட்டைக்குள் புக, மாடலிங் துறைக்குள் புகுந்த மாடர்ன் மங்கை, ஆசிகா. ஸ்டைலான 'ரேம்ப் வாக்'கில் போட்டியாளர்களை விய(ர்)க்க வைத்தவர். பூப்போன்று பொலிவு காட்டும் அமைதியான பெண். ஆனால், போட்டி என்று வந்துவிட்டால், 'கஜா' புயலாக மாறி, போட்டியாளரை துவளச் செய்து விடுவார், இந்த ஆசிகா சரண். அவர் பேட்டி இதோ:

* சினிமா வாய்ப்பு...
நிறைய வருது; நல்ல கதைக்காக காத்திருக்கிறேன். ஒரு படம் நடிச்சாலும் 'நச்'சுனு மக்கள் மனசுல, இடம் பிடிக்கறமாதிரி நடிக்கணும்.
* பிடிச்சவங்க...எப்போ கேட்டாலும் ஒரே ஒரு பெயரைத் தான் சொல்லுவேன்... அவர் தான் நடிகை நயன்தாரா. என்னமா நடிக்கிறாங்க... சான்ஸே இல்ல.
* மாடலிங் எப்படி...சினிமாவுக்கு வருவதற்கு மாடலிங் ஒரு வழி; நான் மாடலிங் வர்றதுக்கு என் நண்பர்கள் தான் காரணம். இதில், 'ரேம்ப் வாக்' தான் என்னோட சிறப்பு. 'மிஸ் பேஷன் ஐகான், மிஸ் தமிழ்நாடு' விருதெல்லாம் வாங்கியிருக்கேன்னா பார்த்துக்கங்க...
* உங்க கேரக்டர்...நான் ரொம்ப அமைதியான பொண்ணு; பேசினா உடனே பேசிட மாட்டேன். ஆனா, பேசி பழகிட்டேனா, அப்புறம் ஒரே, 'கலகல'தான். 'போதும் தாயே'ன்னு ஓடுமளவுக்கு பேசிடுவேன்.
* 'மீ..டூ..' லஎல்லா இடத்துலயும் இருக்குது. சினிமாவில் மட்டும் வெளியில் தெரியுது. இங்கே திறமை இருந்தால் வாய்ப்பு தேடி வரும். தேடி போயி 'மீ... டூ...' பிரச்னையில் சிக்கத் தேவையில்லை.
* நடனம் வருமாஎன்ன இப்படி கேட்டுட்டீங்க.. நான் நல்ல டான்ஸருங்க. சினிமாவுல நடிக்கணும்னா சும்மாவா... கொஞ்சமாச்சும் டான்ஸ்சு தெரிஞ்சிருக்கணும்ங்க.
* டிப்ஸ் ப்ளீஸ்பெண்களே... சோம்பேறியா இருக்காதீங்க. திறமையை வெளியே கொண்டு வாங்க. அய்யய்யோ, நமக்கு வயசாச்சுனு நினைக்காதீங்க. திறமைக்கு வயசு இல்ல. எத்தனை வயதிலும் சாதிக்கலாம்.இவரை டாழ்த்த Modolyashika@gmail.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X