பாலியல் புகார்: கம்யூ., எம்.எல்.ஏ., கட்சியில் இருந்து சஸ்பெண்ட்| Dinamalar

பாலியல் புகார்: கம்யூ., எம்.எல்.ஏ., கட்சியில் இருந்து சஸ்பெண்ட்

Updated : நவ 26, 2018 | Added : நவ 26, 2018 | கருத்துகள் (20)
Advertisement
  கேரளா எம்எல்ஏ, பாலியல் புகார்,  மார்க்சிஸ்ட் எம்எல்ஏ பிகே சசி, கேரளா மார்க்சிஸ்ட் எம்எல்ஏ , மார்க்சிஸ்ட் எம்எல்ஏ, பிகே சசி சஸ்பெண்ட், கேரளா, Kerala, Marxist, Kerala MLA, Sexual complaint,PK Sasi Suspended, Marxist MLA PK Sasi, Kerala Marxist MLA,

திருவனந்தபுரம்: பாலியல் புகார் தொடர்பாக, கேரள மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., பி.கே.சசி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


பாலியல் புகார்

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், சோரனூர் தொகுதியின் மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., பி.கே.சசி. இவர் மீது இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பெண் உறுப்பினர் ஒருவர் பாலியல் புகார் கூறினார். அது தொடர்பான ஆடியோ பதிவுகளையும் புகாரில் இணைத்து இருந்தார்.

துவக்கத்தில் இந்த விஷயத்தில் கட்சியின் மாநில தலைமை சுணக்கம் காட்டியது. அந்த பெண், பிருந்தா கரத் உள்ளிட்ட கட்சியின் தேசிய தலைவர்களுக்கும் புகார் அனுப்பி விட்டதால், நிலைமை மாறியது. இப்புகார் குறித்து விசாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டது.

குழு விசாரணை நடத்தி சமர்பித்த அறிக்கையில், பி.கே.சசி பாலியல் ரீதியாக எந்த தவறும் செய்யவில்லை. எனினும், போனில், அந்த பெண் தவறாக பேசியுள்ளார் என்று தெரிவித்துள்ளது. இதையடுத்து எம்.எல்.ஏ., சசியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்வதாக மாநில தலைமை அறிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sitaraman Munisamy - SALEM,இந்தியா
27-நவ-201810:11:39 IST Report Abuse
Sitaraman Munisamy இவரை ஏன் கைது செய்ய வில்லை.
Rate this:
Share this comment
Cancel
26-நவ-201820:00:51 IST Report Abuse
ஆப்பு கட்சிலேருந்து தான் சஸ்பெண்ட்... எம்.எல்.ஏ பதவிக்கு ஒரு ஆபத்தும் இல்லை. வேணும்னா ஆதார் கார்டையும் ரத்து பண்ணுவாங்க...ஆனா பதவியை இல்லை.
Rate this:
Share this comment
Cancel
சுந்தரம் - Kuwait,குவைத்
26-நவ-201818:43:51 IST Report Abuse
சுந்தரம் சஸ்பெண்ட் செய்யப்பட எம் எல் ஏயின் சரியான பெயர் என்ன?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X