சடலம் தேட புது திட்டம்: போலீசார் பகீரத முயற்சி| Dinamalar

சடலம் தேட புது திட்டம்: போலீசார் பகீரத முயற்சி

Added : நவ 27, 2018
Share
பெ.நா.பாளையம்:துடியலுார் அருகே கொலை செய்யப்பட்டவரின் சடலத்தை கண்டுபிடிக்க, கிணற்றின் அடிப்பகுதியில் இருந்து மேல் நோக்கி கிடைமட்டமாக, பாதை அமைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.துாத்துக்குடி மாவட்டம், ஏரல் நகர அ.ம.மு.க., செயலாளர் ஜெயவேணு, 36, கடந்த அக்., 1ல் துடியலுார் அருகே வரப்பாளையத்தில் கொலை செய்யப்பட்டு, அங்குள்ள தோட்டத்து கிணற்றில் வீசி எறியப்பட்டார்.கிணற்றில்
 சடலம் தேட புது திட்டம்: போலீசார் பகீரத முயற்சி

பெ.நா.பாளையம்:துடியலுார் அருகே கொலை செய்யப்பட்டவரின் சடலத்தை கண்டுபிடிக்க, கிணற்றின் அடிப்பகுதியில் இருந்து மேல் நோக்கி கிடைமட்டமாக, பாதை அமைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.துாத்துக்குடி மாவட்டம், ஏரல் நகர அ.ம.மு.க., செயலாளர் ஜெயவேணு, 36, கடந்த அக்., 1ல் துடியலுார் அருகே வரப்பாளையத்தில் கொலை செய்யப்பட்டு, அங்குள்ள தோட்டத்து கிணற்றில் வீசி எறியப்பட்டார்.
கிணற்றில் இருந்து ஜெயவேணு உடலை மீட்க, கடந்த ஒரு வாரமாக போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டனர். ஆனால், 180 அடி ஆழமுள்ள அக்கிணற்றில், 60 அடிக்கு மேல் குப்பை கிடக்கிறது. அவற்றை எடுத்து விட்டு, உடலை தேடிக்கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.கிணற்றின் அடிப்பகுதியில் இருந்து மேல்நோக்கி கிடைமட்டமாக, 100 மீ., நீளத்தில் பாதை அமைத்து, அதன் வழியாக லாரி இறக்கி, குப்பையை அள்ளி விட்டு, உடலை தேட போலீசார் முடிவு செய்தனர். இப்பணி நேற்று துவங்கியது. அதனால், இரு நாட்களில் உடலை மீட்க முடியும் என, போலீசார் நம்பிக்கை தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X