திருவனந்தபுரம்: சபரிமலையில், மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சர்ச்சைக்குரிய எஸ்.பி., யதீஷ் சந்திரா இடம் மாற்றம் செய்யப்பட்டார்.
கெடுபிடி காட்டும் போலீசார்
சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட பிறகு, அந்த உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் கேரள மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஆயிரக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டு அய்யப்ப பக்தர்கள் கெடுபிடிக்கு ஆளாகி வருகின்றனர்.
கடந்த வாரம் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் இருமுடி கட்டி சபரிமலைக்கு சென்ற போது நிலக்கல் பகுதியில் அவருடன் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.பி., சதீஷ் சந்திரா வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதை கண்டித்து கன்னியாகுமரியில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட ஆளும் கம்யூ., கட்சியினர் எஸ்.பி., செய்தது சரி தான் என்று விளக்கம் அளித்தனர். இந்த சூழ்நிலையில், நிலக்கல் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட புதிய போலீஸ் குழுவை கேரள அரசு அறிவித்துள்ளது. அதன்படி உளவுத்துறை ஐ.ஜி., அசோக் யாதவ் தலைமையில் புதிய போலீஸ் குழு நியமிக்கப்பட்டுள்ளது. எஸ்.பி., சதீஷ் சந்திரா வேறு பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE