திருநெல்வேலி : அரசு போக்குவரத்து கழகத் தில் பணியாற்றி, ஓய்வு பெற்ற தொழிலாளர் கள், அம்மா குடிநீர் விற்பனை மையங்களில், தினக்கூலி அடிப்படையில் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இப்பணியில், 2 ஆண்டுகளாக, ஓ.பி., அடித்த அண்ணா தொழிற்சங்க நிர்வாகி கள், மீண்டும் பணிக்கு திரும்புகின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன், முதல்வராக இருந்த ஜெயலலிதா, பஸ் பயணியருக்கு குறைந்த விலையில் குடிநீர் வழங்கும் திட்டத்தை துவங்கினார். இதன்படி, தமிழகம் முழுவதும், 500க்கும் மேற்பட்ட பேருந்து நிலையங்களில், அம்மா குடிநீர் விற்பனை மையங்கள் திறக்கப்பட்டு,
1 லிட்டர் தண்ணீர் பாட்டில், 10 ரூபாய்க்கு விற்கப் பட்டது.கண்டக்டர், டிரைவர்களாக புணிபுரிந்த அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகளே, மாற்று பணி யாக இந்த மையங்களில் நியமிக்கப்பட்டனர்.
ஒருவருக்கு, எட்டு மணி நேரம் வீதம்3 , 'ஷிப்ட்' முறையில், ஒரு
குடிநீர்மையத்திற்கு மூன்று பேர் பணியமர்த்தப்பட்டனர்.
தினமும், 1,000 முதல், 1,500 ரூபாய் வரை சம்பளம் பெற்ற இவர்களுக்கு, ஓ.பி., அடிக்கும் வகையில், இந்த பணி வழங்கப்பட்டது.தினமும், 5,000 ரூபாய் வரை விற்பனையாகும் குடிநீர் மையங்களில் பணிபுரியும் மூன்று பேருக்கு, தினசரி சம்பளமாக, 4,500 ரூபாய் வரை வழங்கப்பட்டது. இதனால், பஸ்கள் இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளில் ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டது.
இதையடுத்து, போக்குவரத்து கழக செயலர் மற்றும் அமைச்சர் விஜய பாஸ்கர்ஆலோசனை நடத்தி, அம்மா குடிநீர் மையத்தில் பணியாற்றிய, அண்ணா தொழிற்சங்க
நிர்வாகிகளை மீண்டும் பணிக்கு செல்ல அறிவுறுத்தினர். இதன்படி,
1,000த்துக்கும் மேற்பட்ட கண்டக்டர், டிரைவர் மீண்டும் பணிக்கு
திரும்பினர். மாற்று ஏற்பாடாக, போக்கு வரத்து
கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற கண்டக்டர், டிரைவர் கள், தினக்கூலி அடிப் படையில்,ரூ. 300 சம்பளத்தில், அம்மா குடிநீர் மையங்களில் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
இதில், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகளாக இருந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளது.நாள் ஒன்றுக்கு,ரூ. 4,500 சம்பளத்தில், மூன்று நபர்கள் இருந்த இடத்தில், வெறும், 300 ரூபாய்க்கு ஒரு நபரை நியமித்து உள்ளனர். மேலும், 24 மணி நேரமும் செயல்பட்ட அம்மா குடிநீர் விற்பனை மையங்கள், 12 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளன.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (8)
Reply
Reply
Reply