பொது செய்தி

இந்தியா

டிரம்பை கிண்டல் செய்த அசாம் கல்லூரி மாணவி

Added : நவ 28, 2018 | கருத்துகள் (20)
Share
Advertisement
கவுகாத்தி:அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், காலநிலைக்கும், பருவநிலைக்கும் வேறுபாடு புரியாமல், 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில், பதிவிட்ட கருத்துக்கு, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மாணவி, கிண்டல் செய்து அனுப்பிய பதில், பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில், சமீபத்தில், வெப்ப நிலை, 'மைனஸ் 2 டிகிரி செல்ஷியசாக' பதிவானது. இதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு
 டிரம்ப், கிண்டல், அசாம், கல்லூரி மாணவி, காலநிலை, வானிலை,

கவுகாத்தி:அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், காலநிலைக்கும், பருவநிலைக்கும் வேறுபாடு புரியாமல், 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில், பதிவிட்ட கருத்துக்கு, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மாணவி, கிண்டல் செய்து அனுப்பிய பதில், பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில், சமீபத்தில், வெப்ப நிலை, 'மைனஸ் 2 டிகிரி செல்ஷியசாக' பதிவானது. இதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தன் டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருந்தார்.

அதில் 'கொடூரம்...அதிகபட்சமான பனியும், குளிரும், அனைத்துச் சாதனைகளையும் முறியடிக்கப் போகிறது. புவி வெப்பமயமாதலால், என்னென்ன நடந்திருக்கிறது!' என, கூறியிருந்தார்.
இதை விமர்சித்து, அசாம் மாநிலம், ஜோர்ஹாத் பகுதியைச் சேர்ந்த, அஸ்தா சர்மா, 18, என்ற கல்லுாரி மாணவி, 'ரீடுவிட்' செய்திருந்தது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவர் பதிவிட்டிருந்ததாவது:உங்களை விட நான், 54 வயது சிறியவள். பள்ளிப்படிப்பை, சராசரி மதிப்பெண்கள் வாங்கித் தான், முடித்திருக்கிறேன். ஆனால், என்னால் கூட, காலநிலை மற்றும் பருவ நிலைக்கும் வித்தியாசம் சொல்ல முடியும்.உங்களுக்குப் புரிந்து கொள்வதில், ஏதேனும் சிக்கல் இருந்தால், நான், 2-ம் வகுப்பு படிக்கும் போது வாங்கிய, 'என்சைக்ளோபீடியா' புத்தகத்தை அனுப்பி வைக்கிறேன். அந்தப் புத்தகத்தில், படங்களும், விளக்கங்களும் இருக்கின்றன.இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

மாணவி அஸ்தா சர்மாவின் பதிலை, 22 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாராட்டியுள்ளனர்.மாணவியின் டுவிட்டுக்கு, 5,000க்கும் அதிகமானோர், ரீடுவிட் செய்து, வாழ்த்து தெரிவித்துள்ளனர்.ஆங்கிலத்தில், 'கிளைமேட்' எனப்படும் காலநிலைக்கும், 'வெதர்' எனப்படும், பருவநிலை அல்லது வானிலைக்கும் உள்ள வேறுபாடு, பலருக்கு தெரிவதில்லை.

காலநிலை அல்லது தட்ப வெப்பநிலை என்பது, ஒரு குறிப்பிட்ட இடத்தில், நீண்ட கால அடிப்படையிலான தட்ப வெப்பம், மழை, குளிர், ஈரப்பதம் ஆகியவற்றைக் குறிப்பதாகும்.வானிலை என்பது, வளிமண்டலத்தில் குறிப்பிட்ட நேரத்தில் ஏற்படும், மாறுதல்களைக் குறிக்கும்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Naam thamilar - perth,ஆஸ்திரேலியா
29-நவ-201815:19:28 IST Report Abuse
Naam thamilar நாங்க மோடியை தினமும் கழுவி ஊத்திறோம். இது எல்லாம் ஒரு பெரிய செய்தியா
Rate this:
Cancel
Rajesh - Chennai,இந்தியா
29-நவ-201810:56:58 IST Report Abuse
Rajesh 2 ம் வகுப்பு என்சைக்ளோபீடியா க்கு அப்புறம் வேற எதையுமே அந்தப்பெண் படிக்கவில்லை போல. புவி வெப்பமயமாதல் ன்னா என்ன? எல் நினோ ன்னா என்ன? அது அமெரிக்காவில் எம்மாதிரியான பருவநிலை மாற்றங்களை உண்டாக்கிக்கொண்டு இருக்கிறது என்பதையெல்லாம் அந்த மாணவி தெரிந்துகொண்டு பேச வேண்டும்.
Rate this:
Cancel
Muthu Kumarasamy - Mettupalayam, Coimbatore Dist.,இந்தியா
29-நவ-201810:19:12 IST Report Abuse
Muthu Kumarasamy திருக்குறள், கம்ப ராமாயணம் எழுதியவர்களை தெரியாத தலைவர்களும் இருக்கிறார்கள். அதை பெரிது படுத்த வேண்டியதில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X