பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
அயோத்தியில் பிரமாண்ட ராமர் சிலையா?
உ.பி., அரசுக்கு சாதுக்கள் கடும் கண்டனம்

வாரணாசி:உத்தர பிரதேசத்தில், ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ள நிலையில், அங்கு, பிரமாண்ட ராமர் சிலை நிறுவ திட்டமிட்டுள்ள, மாநில அரசை கண்டித்து, வாரணாசியில் நடந்த சாதுக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அயோத்தி, ராமர் சிலை, உ.பி., அரசு சாதுக்கள், கண்டனம்

உத்தர பிரதேசத்தில்,அயோத்தியில் உள்ள, சர்ச்சைக்குரிய இடத்தை, ஹிந்துக்கள், முஸ்லிம்கள் என, இரு தரப்பினரும் உரிமை கோரி வருவதால், இது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், அயோத்தியில், வி.எச்.பி., எனப்படும், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பை சேர்ந்த லட்சக்கணக்கானோர், சமீபத்தில் ஒன்று கூடி, 'விரைவில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும்' என, வலியுறுத்தினர்.

இதற்கிடையே, அயோத்தியில், 211 மீட்டர் உயர

பிரமாண்ட ராமர் சிலையை நிறுவ, மாநில அரசு திட்டமிட்டுஉள்ளதாக, முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.மாநில அரசின் இந்த அறிவிப்புக்கு, நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சாதுக்கள், கண்டனம் தெரிவித்துள்ளனர்.


துவாரகா பீட சங்கராச்சாரியார் ஸ்வரூபானந்த சரஸ்வதி தலைமையில், வாரணாசியில்நடந்த சாதுக்கள் கூட்டத்தில், ராமர் சிலை அமைக்க திட்டமிட்டுள்ள, உ.பி., அரசை கண்டித்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இந்த கூட்டத்தில், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த,1,000க்கும் மேற்பட்ட சாதுக்கள் பங்கேற்றனர்.


இது குறித்து, கூட்டத்தில் பங்கேற்ற சாதுக்கள் சிலர் கூறியதாவது:ஹிந்துக்கள், கடவுளாக வழிபடும் ராமரின் சிலை, கோவிலுக்குள் தான் இருக்க வேண்டும். அவரது சிலை, வழிபாட்டுக்கு உரியதே அன்றி, காட்சிப் பொருளாக வைக்கப்படக் கூடாது.

குஜராத் மாநிலத்தில் அமைக்கபட்டுள்ள,பிரமாண்ட படேல் சிலை போல், அயோத்தியில், ராமர் சிலையை அமைக்க நினைக்கும் மாநில அரசின் எண்ணம் தவறானது.ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துஉள்ள நிலை யில், அதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல், சிலை அமைக்கும் திட்டத்தை முன்மொழிந்து

Advertisement

உள்ளது, வேதனை அளிக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

'நீதிபதிகளால் தாமதம்':

ராமர் கோவில் விவகாரம் தொடர்பாக, ஆர்.எஸ். எஸ்., தேசிய செயற்குழு உறுப்பினர், இந்திரேஷ் குமார், சண்டிகரில் பேசியதாவது: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சிலரால், தாமதம் ஏற்பட்டுள்ளது.ராமஜென்ம பூமி குறித்த வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள், விரைவில் தீர்ப்பளிக்க வேண்டும். தீர்ப்பு தேதிக்காக, நாட்டு மக்கள் காத்திருக்கின்றனர். ராமர் கோவில் கட்டுவதற்கு ஆதரவாக தீர்ப்பு வந்தால்,நாடு தீப்பற்றி எரியப் போவதில்லை. ராமஜென்ம பூமி குறித்த வழக்கில், தீர்ப்பளிக்க தாமதித் தால், நீதிபதிகள் ராஜினாமா செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
29-நவ-201815:05:04 IST Report Abuse

Natarajan Ramanathanஇறைவனின் விக்ரகங்கள் வழிபாட்டுத்தலங்கள் உள்ளே இருப்பதுதான் சிறப்பு. (அவை பறவைகளின் கழிப்பிடம் அல்ல) அதுவே இந்துக்களின் விருப்பம் கூட.

Rate this:
INDIAN - Mamallpuram ,இந்தியா
29-நவ-201813:41:43 IST Report Abuse

INDIANமக்களை மேலும் மேலும் முட்டாளா ஆக்க தான் பார்க்கிறார்கள் இந்த மானம் கெட்ட கொள்ளைக்கார அரசியல்வாதிகள். ஆனால் மக்கள் தான் விழித்துக் கொள்ள வேண்டும்.

Rate this:
GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா
29-நவ-201812:21:43 IST Report Abuse

GB.ரிஸ்வான் சலிச்சு போச்சி... ராமரை வைத்து தேர்தல் நேரத்தில் மட்டும் விளையாடும் ஒரே கட்சி பாஜக மட்டுமே... ஆனால் கோவில் மட்டும் கட்டுவதாக இல்லை

Rate this:
Ansari - Thanjavur,இந்தியா
29-நவ-201817:51:07 IST Report Abuse

Ansari மஹாபாரத காவியத்தில் ராமபிரான் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்ததாக சொல்லப்படுகிறது மேல போடப்பட்டுள்ள இந்த ராமரின் புகைப்படம் எந்த டிஜிட்டல் காமீராவில் எடுக்கப்பட்டது? ...

Rate this:
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
29-நவ-201818:20:06 IST Report Abuse

வல்வில் ஓரிஉனக்கேன் அக்கறை? ...

Rate this:
29-நவ-201822:52:05 IST Report Abuse

செந்தில்நீ உண்னுடைய வேலைய மட்டும் பாா் ...

Rate this:
மேலும் 30 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X