காளையார்கோவில் தெப்பக்குளம் சுற்றுச்சுவர்; முதல்வர் அறிவித்தபடி உயர்த்தப்படுமா

Added : நவ 28, 2018 | |
Advertisement
காளையார்கோவில்:சிவகங்கையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில் முதல்வர் பழனிசாமி அறிவித்தபடி காளையார்கோவில் தெப்பக்குளத்தின் சுற்று சுவர் உயர்த்தப்படுமா என பக்தர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.காளையார்கோவிலில் வரலாற்று சிறப்பு மிக்க காளீஸ்வரர் கோயில் தெப்பக்குளம் 11 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதன் நடுவில் ஒரு ஏக்கரில் மைய மண்டபம் அமைந்துள்ளது. மதுரை

காளையார்கோவில்:சிவகங்கையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில் முதல்வர் பழனிசாமி அறிவித்தபடி காளையார்கோவில் தெப்பக்குளத்தின் சுற்று சுவர் உயர்த்தப்படுமா என பக்தர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.காளையார்கோவிலில் வரலாற்று சிறப்பு மிக்க காளீஸ்வரர் கோயில் தெப்பக்குளம் 11 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதன் நடுவில் ஒரு ஏக்கரில் மைய மண்டபம் அமைந்துள்ளது. மதுரை வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தை போல் வடிவமைக்கப்பட்ட இந்த தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வரத்து கால்வாய்களும், தெப்பக்குளம் நிரம்பி விட்டால் உபரி நீரை வெளியேற்ற தனி கால்வாயும் அமைக்கப்பட்டுள்ளது. இக்குளத்திற்கு தண்ணீர் வரும் கால்வாய்கள் பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டு குறுகலாக மாறி விட்டது.தெப்பக்குளத்தின் நான்கு பக்க சுற்றுச்சுவரும் பலமிழந்த நிலையில் உள்ளது. தெப்பக்குளம் கட்டப்பட்ட காலத்தில் சுற்றுப்புற சுவர் உயரமாகவே இருந்திருக்கும். காலப்போக்கில் ரோடுகளின் மட்டம் உயர்ந்து விட்டதால் சற்றுச்சுவரின் கைப்பிடி சுவர் உயரம் குறைந்து விட்டது. தற்போது அரை அடி முதல் ஒரு அடி உயரம் மட்டுமே உள்ளது.தெப்பக்குளத்தை சுற்றிலும் உள்ள நடைபாதைகளில் 4 சக்கர வாகனங்கள் சென்றால், குளத்தின் சுற்றுப்புற சுவர்களுக்கு ஆபத்து எனக்கருதி வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு மேற்கு பகுதியில் இரும்பு கம்பி தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.கடந்தாண்டு நவம்பரில் சிவகங்கையில் நடந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தார். அதில் காளையார்கோவில் தெப்பக்குளத்தின் சுற்றுப்புற சுவர்கள் உயர்த்தப்பட்டு, தெப்பக்குளத்தை சுற்றிலும் நடைபயிற்சி மேற்கொள்ள வசதி செய்யப்படும் என அறிவித்தார். அந்த அறிவிப்பு வெளியாகி ஓராண்டு நிறைவடைந்தும், அதற்கான எந்த பணியும் துவக்கப்படவில்லை.தெப்பக்குளத்தின் சுற்றுப்புற சுவர்களை உயர்த்தி,நீர்வரத்து கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தண்ணீர் தேக்கவும்,குளத்தை சுற்றி நடைபயிற்சிக்கு வசதி செய்து தரவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X