பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
அமெரிக்க அதிபரை சந்திக்க மோடி திட்டம் :
'ஜி - 20' மாநாட்டில் முக்கிய பேச்சு

புதுடில்லி:தென் அமெரிக்க நாடான, அர்ஜென்டினாவில் நடக்க உள்ள, 'ஜி - 20' மாநாட்டின் ஒரு பகுதியாக, இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் தலைவர்கள் சந்தித்து, முத்தரப்பு பேச்சில் ஈடுபட உள்ளனர்.

 அமெரிக்க அதிபர், மோடி, திட்டம், ஜி - 20

உலகின் மிகப் பெரிய, 20 பொருளாதார நாடுகள் அடங்கிய, ஜி - 20 அமைப்பின் மாநாடு, தென் அமெரிக்க நாடான, அர்ஜென்டினாவில், நவ., 30 மற்றும் டிச., 1ல் நடக்கிறது.

இந்த மாநாட்டில், அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்; பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்கிறார்.மாநாட்டின் ஒரு பகுதியாக,

அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்பும், ஜப்பான் பிரதமர், ஷின்சு அபேயும் சந்தித்து பேச உள்ளனர். பின், இருவரும் இணைந்து, பிரதமர்மோடியுடன், முத்தரப்பு பேச்சில் ஈடுபட உள்ளனர்.தென் சீன கடல் மற்றும் கிழக்கு சீன கடல் பகுதியில், சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சீனாவின் ஆதிக் கத்தை கட்டுப்படுத்தும் வகையில், அமெரிக்கா செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், கிழக்கு சீன கடல் பகுதியில், சீனா - ஜப்பான் இடையே மோதல் உள்ளது. ஜப்பானுக்கு, அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள், ஆதரவு தெரிவித்து வருகின்றன. இந்தியா - ஜப்பான் இடையே மிகச் சிறப்பான உறவு உள்ளது. அதே போல், அமெரிக்கா, இந்திய உறவும் வலுவாக உள்ளது.

ஜி - 20 மாநாட்டின் இடையே, அமெரிக்கா, ஜப்பான், இந்தியா முத்தரப்பு பேச்சில் ஈடுபடுவது, சீனாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தும்.இந்த மாநாட்டின் இடையே, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புடின் உள்ளிட் டோரையும், டிரம்ப் சந்திக்க உள்ளார். அதேபோல்

Advertisement

பிரதமர் நரேந்திர மோடியும், ஜி ஜின்பிங்கை சந்திக்க உள்ளார்.

கடந்த, ஏழு மாதங்களில், இது இவர்களது நான்காவது சந்திப்பு.ஐ.நா., பொதுச் செயலர் அந்தோனியோ குடேரேஸ், அர்ஜென்டினா அதிபர் மொரிசியோ கட்டரஸ், ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மார்க்கெல் உள்ளிட்டோரையும் மோடி சந்தித்து பேச உள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
V.gajendrudu - Chennai,இந்தியா
29-நவ-201817:21:43 IST Report Abuse

V.gajendruduவெரி வெரி குட் போர் தி கொண்ட்ரி

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
29-நவ-201816:52:49 IST Report Abuse

Pugazh Vட்ரம்ப்பை சந்தித்து தலைவா உங்கள் ஊருக்கு கூப்பிடுங்க. இன்னொரு வாட்டி வரேன் என்று கேட்டுக் கொள்வார்.. எல்லா நாடும் போயாச்சு அதனால மறுபடியும் முதல்லருந்து.. அகர முதல....

Rate this:
Yezdi K Damo - Chennai,இந்தியா
29-நவ-201812:28:58 IST Report Abuse

Yezdi K Damoஇந்த 4 1 /2 வருஷத்துல ஓஹோன்னு சொல்ற அளவுக்கெல்லாம் நாடு முன்னேறல. இவர் என்னமோ மலையைய் புரட்டி போட்டுட்டுமாரி தோள்ல துண்டை போட்டுக்கிட்டு நானும் ரௌடிதான் ரேஞ்சுக்கு வெளிநாடு கிளம்பிடறார். நமக்குத்தான் தெரியும் இவர் ஒரு ஒப்புக்கு சப்பான்னு.

Rate this:
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
29-நவ-201817:05:46 IST Report Abuse

வல்வில் ஓரிகாங்கிரஸ் ன்னா இந்நேரம் பின்னாடி ஒரு நாற்பதாயிரம் அடி போயிருக்கும்.. ...

Rate this:
மேலும் 15 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X