நாகப்பட்டினம், ''கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, தமிழக அரசு கோரிய நிதியை, மத்திய அரசு மனிதாபிமானத்தாடு, மனசாட்சிப்படி வழங்கும் என்று நம்புகிறோம்,'' என, முதல்வர் பழனிசாமி கூறினார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட, முதல்வர் பழனிசாமி, ரயில்
மூலம் நாகை வந்தார்.துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகளுடன் சென்று, புயலால் பாதிக்கப்பட்ட, 443 பேருக்கு, 96 லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நிவாரண உதவிகளை வழங்கினார்.
புயல் பாதிப்பு கிராமங்களை பார்வையிட்ட அவர், ஆங்காங்கே கூட்டமாக நின்ற மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, ஆறுதல் கூறினார். பின், வேதாரண்யத்தில் அவர் அளித்த பேட்டி:நாகை மாவட்டம், கஜா புயலால் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது.
415 முகாம்களில், 77 ஆயிரத்து, 319 குடும்பங்களைச் சேர்ந்த, இரண்டு லட்சத்து, 85 ஆயிரத்து, 462 பேர்
தங்க வைக்கப்பட்டு உள்ளனர். ஒரு லட்சத்து, 11 ஆயிரத்து, 132 வீடுகள் சேதமடைந்துள்ளன. 13 பேர், 21 ஆயிரம் கால்நடைகள் இறந்து உள்ளன. மேலும், மூன்று லட்சத்து, 38 ஆயிரம் மரங்கள்சாய்ந்துள்ளன. சாலையில் விழுந்து கிடந்த, ஒரு லட்சத்து, 38 ஆயிரத்து, 338 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. 30 ஆயிரத்து, 870 மின் கம்பங்கள் சேதமடைந்ததில், 16 ஆயிரத்து, 354 மின் கம்பங்கள் சீரமைக்கப்பட்டு உள்ளன.
புயலால் வீடுகளை இழந்த மக்களுக்கு, ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். பாதிப்புகளில் இருந்து மக்களை காப்பாற்று வதில், மத்திய, மாநில அரசுகளுக்கு பொறுப்பு உள்ளது.சேத விபரங்களை மத்திய அரசுக்கு தெரிவித்து, உரிய நிதி கோரப்பட்டுள்ளது. மத்திய அரசு மனசாட்சிப்படி, மனிதாபி மானத்தோடு நிதி வழங்கும் என, நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (16)
Reply
Reply
Reply