கடலோர மாவட்டங்களில், தரைக்கு அடியில், 'கேபிள்' வாயிலாக, மின் சப்ளை செய்யும் திட்டத்தை செயல்படுத்த, மின் வாரியம் அலட்சியம் காட்டி வருவதால், நான்கு புயல்களால், 3,100 கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில், சில இடங்களில், தரைக்கு அடியில், கேபிள்; மற்ற இடங்களில், மின் கம்பம் வாயிலாக, மின் வாரியம், மின் சப்ளை செய்கிறது. மின் சாதனம் சேதம்மழை, புயலின்போது, மின் கம்பங்கள் சாய்ந்து, கம்பி அறுந்து விழுவதால், மின் வாரியத்திற்கு, இழப்பு ஏற்படுகிறது.
சென்னை, காஞ்சிபுரம், கடலுார், நாகை உட்பட, 13 கடலோர மாவட்டங்கள், தமிழகத்தில் உள்ளன. அவை தான், மழை, புயலின்போது, கடுமையாக பாதிக்கப்படுகின்றன. அதன்படி, கடலுாரில், 2011ல் வீசிய, 'தானே' புயலால், அம்மாவட்டத்தில், 300 கோடி ரூபாய் மதிப்பிலான, 51 ஆயிரம் கம்பங்கள் உள்ளிட்ட மின் சாதனங்கள் சேதம்அடைந்தன.
இதை அடுத்து, கடலோர மாவட்டங்களில்,
தரைக்கு அடியில், கேபிள் வாயிலாக மின் சப்ளை செய்ய, மின் வாரியம் முடிவு செய்தது.முதல்
கட்டமாக, கடலுார், நாகையில், உலக வங்கியின், 360 கோடிரூபாய் நிதியில்,
அத் திட்டத்தை செயல்படுத்த, மின் வாரியம், 2014ல் திட்டமிட்டது.
ஆனால்,
பணிகள் துவங்கப்பட வில்லை.சென்னை, காஞ்சி, திருவள்ளூரில், 2016 இறுதியில் வீசிய, 'வர்தா' புயலால், 1,093 கோடி ரூபாய் மதிப்பிலான, மின் சாதனங்கள் சேதமடைந்தன.இதையடுத்து, நீண்ட இழுபறிக்கு பின், கடலுார், நாகையில், சில நகரங்களில், கேபிள் வாயிலாக, மின் சப்ளை செய்வதற்கான பணிகள், 2017ல் துவக்கப்பட்டன.
அதே ஆண்டு இறுதியில், கன்னியாகுமரியில் வீசிய, 'ஒக்கி' புயலால், 238 கோடி ரூபாய் மதிப்பிற்கு, மின் சாதனங்கள் சேதமடைந்தன. இதனால்,அனைத்து கடலோர மாவட்டங்களிலும், கேபிளில் மின் சப்ளை செய்வதற்கான பணிகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை எழுந்தது. அதை செயல்படுத்த, மின் வாரியம் அலட்சியம் காட்டியது.
இந்நிலையில், சமீபத்தில் வீசிய, 'கஜா' புயலால், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர் உட்பட, 12 மாவட்டங்களில்,இதுவரை மதிப்பீடு செய்ததில், 1,500 கோடி ரூபாய் மதிப்பிலான சாதனங்கள் சேதமடைந்துள்ளன.
தாமதம்
இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர்
கூறியதாவது:திட்டமிட்டபடி, கடலுார், நாகையில், கேபிள் மின் சப்ளை பணிகளை துவக்கி இருந்தால், தற்போது வீசிய, கஜா புயலால், நாகையில் பாதிப்பு ஏற்பட்டிருக்காது. கேபிள் மின் சப்ளை போன்ற வளர்ச்சி திட்டங்களை, ஒரு முறை செயல்படுத்த, கூடுதல் செலவாகும்.
பின், மழை, புயலின் போது, எந்த பாதிப்பும் ஏற்படாது.அவற்றை செயல்படுத்தினால், தங் களுக்கு ஆதாயம் கிடைக்காது என்ற அரசியல் வாதிகள், சில அதிகாரிகளின் சுயநலத்தினால் தான், பணிகளை துவக்குவதில் தாமதம் ஏற்படுகிறது.
தானே, வர்தா, ஒக்கி, கஜா புயலால், மின் வாரியத்திற்கு, 3,100 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.இனியும், புயலால் இழப்பு ஏற்படுவதை தடுக்க, கடலோர மாவட் டங்களில், கேபிள் மின் சப்ளையை துரித கதியில் செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (9)
Reply
Reply
Reply